கடைதலால் அவை வெளிப்படுவன. மறைந்து நிற்கும் இறைவனை வெளிப்படக் காண்பது உறவு கோலினை நாட்டி, உணர்வு கயிற்றினால் முறுகக் கடைதலால் ஆகும். உறவு - சித்தென்னுஞ் சாதி பற்றிய உரிமையன்பு. உணர்வு - குரவனுணர்த்தியவாறு சிவஞானங் கண்ணாகக் கொண்டறிவதாகிய சாதன ஞானம். முன்நிற்கும் - வெளிப்பட்டருளும். "தன்னுனரு நேசத்தார் தம்பா னிகழுந் ததி நெய்போல்" (சிவஞான போதம் - 12. சூத்) "திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவனங்கே, யுருக்கோலி மந்திரத்தா லெனநினையு மவர்க்கு முளனெங்கு மிலனிங்கு முளனென் பார்க்கும், விருப்பாய வடிவாகி யிந்தனத்தி னெரிபோல் மந்திரத்தின் வந்துதித்து மிருஞ்சுரபிக் கெங்கும், உருக்காண வொண்ணாத பான்முலைப்பால் விம்மி யொழுகுவதுபோல் வெளிப்பட் டருளுவனன் பர்க்கே" (சித்தியார் - 12. 4). அவர் நின்றதோர் நேர்மை என்பது விளக்கப்பட்டது. இத்திருப்பதிகத்தினால் அரனடி நீழல் என்னும் சிவாநந்த சிவபோக விளைவும், அதனை அடையும் சாதனமுமாகிய மந்திரமும், ஆட்படும் நெறியும், அரனைக் கண்டு வழிபடுமிடங்களும், வழிபடும் வகையும், வழிபடுங்கால் விடப்படுவபவையும், அன்பின்றிறமும், அதற்கு அரன் வெளிப்படு நிலையும் ஆகிய சைவ சித்தாந்தத்தின் உண்மைகள் பலவும் உணர்த்தப்பட்டன. 1364. | மாசின்மதி நீடுபுனன் மன்னிவளர் சென்னியனைப், பேசவினி யானை, யுல காளுடைய பிஞ்ஞகனை, யீசனை, யெம் பெருமானை, யெவ்வுயிருந் தருவானை, யாசையிலா ராவமுதை, யடிவணங் யினிதிருந்தார். |
99 (இ-ள்.) வெளிப்படை. குற்றமில்லாத மதியும், நீடும் கங்கையும் நிலைபெறப் பொருந்தி வளர்தற்கிடமாகிய சென்னியையுடைவனைப், பேசுற்கு இனியவனை, உலகங்களை யெல்லாம் ஆளாகவுடைய பிஞ்ஞகனை, ஈசனை, எமது பெருமானை, எல்லா வுயிர்களையும் தோற்றுவிப்பவனை, அன்பினில் விளையும் ஆரா அமுதத்தை, அடிவணங்கி இனிதாக இருந்தனர் (நாவுக்கரசர்). (வி-ரை.) சென்னியன் - இனியான் - பிஞ்ஞகன் - ஈசன் - எம்பெருமான் தருவான் - அமுது என்று ஏழுவகையாற் கூறினார், நாயனார் அந்நீற்றறையினுள் ஏழு நாட்கள் வணங்கிப் போற்றியிருந்தமை காட்டுதற்கு. மாசில் என்று திருப்பதிக முதற்குறிப்புத் தந்து எடுத்தமையும் இக்கருத்துப் பற்றியது. மாசின்மதி நீடுபுனல் மன்னிவளர் - மதியும் புனலும் பொருந்தியும் வளர்ந்தும் இருத்தற்கிடமாகிய. மதி - வளர் - என்றும், புனல் மன்னி என்றும் எதிர் நிரனிறையாகக் கூட்டுக. குறைந்து வந்த மதிவளர்தலும், ஆயிரமா முகத்தோடு ஆர்த்துப் பெருகி இழிந்து போந்த கங்கைப்புனல் பனிபோலாகச் சிறுத்து நிலைபெறுதலும் சிவபிரானது சென்னியில் நிகழ்ந்தன என்று புராணங்களுட் கேட்கப்படும். மதி அமிர்தகலையுடையது. கடலில் விடம் எழுந்தபோது மதியின் கலை பாய்ந்ததால் விட்டுணு உய்ந்தார். "நிலாத்திங்கட் டுண்டப் பெருமாள்" (கச்சி). வெய்ய நீற்றறை யதுதான் ஐயர் திருவருளாகிக் குளிர்ந்ததாதலின், அதனகத்து இருந்த நாயனார்க்கு இறைவனது திருமுடியின் கண் நிறைந்து வளர்ந்த குளிர்ச்சி தரும்பொருள்களிரண்டும் புலப்பட, அத்தகைய சென்னியனாகப் போற்றினர் என்பது. பேசஇனியான் - "நினைத்தொறும் - பேசுந்தொறும் எப்போதும், அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரிபவன்" ஆதல் குறிப்பு. "நமச்சிவாயவே நாநவின்றேத்துமே", "நாக்கைக் கொண்டர னாம நலிற்றிலார் - காக்கைக்கேயிரை யாகிக் |