சூளாமணியும் (1) அகலம் வளாய அரவும் (1) கேழலெயிறு, ஆமை வெண்ணூல் இவையும் (2) உருத்திர பட்டமிரண்டும் முத்து வடக்கண் டிகையும் (3) வேங்கையதளும் - பொற்றோடும் - குழையும் கபாலக்கலனும் (7) மரவத்துகிலும் - கோவணக்கீளும் (9) முதலியனவாய் அவர் திமேனியிற் பூண்பவையும்; கட்டங்கக் கொடியும், (2) மூவிலை வேலும் (3) மறிபொற்கலையு மழுப்பாம் பொருகையில் வீணையும் (4) வான்கயிலாய மலையும் (5) கொள்ளிவிளக்கும் - துடியின் முழக்கும் (6) முதலியனவாய் அவரது படை முதலியனவும்; குனிசிலைக் கூத்தின் பயில்வும் - நூல் அறிவாள ரறியப்படாததோர் கூத்தும், (6) பல்லாயிரங்கொள் கருவி நாடற்கரியதோர் கூத்தும் (8) வேழமுரித்த நிலையும் முதலியவாய் அவரது அருட்டிறங்களும்; அண்ண லரண்முர ணேறும், (1) கணபதி யென்னுங் களிறும் (5) பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும் (6) பாடல்பயின்ற பல்பூதம் (8) முதலிய அவரைச் சூழ்ந்த கணங்களின்றிறமும்; என்று இறைவனது திருவடியைத் தாம் மனத்துத் தெளிவுற்றுப் பதியவைத்த திறங்களே கூறப்படுவன காண்க. உரிவையுடை - யானையை உரித்துப்போர்த்த உடை. "செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று" (திருவிருத்தம்); அரண் முரண் ஏறு - அடைந்தார்க்கு அரணும் அடையலார்க்கு முரணும் ஆக அருள்வது இறைவனது இடபம். கெடிலப்புனல் - பதிக முழுமையும் கெடிலத் ர்த்ததின் றொடர்பும், திருவதிகையாகிய தலத்தின் தொடர்பும், உடையார் என வீரட்டநாதராகிய மூர்த்தியின் தொடர்பும்பற்றிக் கூறுதல் காண்க. ஒருவர் - ஒப்பற்றவர். "ஒன்றேபதி" என்றபடி முழுமுதற் கடவுளாவார். தமர் "தம்மடியோம்" (1381); அஞ்சுவது...இல்லை - தமர் நாம்; ஆதலின், அஞ்சுவதில்லை என்று அஞ்சாமைக்குக் காரணங் கூறியபடி. "என்னுளமே புகுந்த வதனால்...நல்ல நல்ல ... அடியா ரவர்க்கு மிகவே" என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமும் கருதுக.- (2) கேழல் எயிறு - வராக அவதாரத்தில் விட்டுணுவின் பல்லினையும், ஆமை - கூர்மாவதாரத்தில் அவரது முதுகோட்டினையும் அணிந்து அருளினர் சிவபெமான் என்பது வரலாறு. புள்ளின் சிறகு - கொக்கிறகு - மலர்.- (3) ஒத்தவடத்து......இரண்டும் - தோளில் வடம்போல இட்டிருக்கும் இளநாகமும், உருத்திரபட்டமும் என்ற இரண்டும். உருத்திரபட்டம் - யோகபட்டம் "பைவன்பே ரரவொழியத் தோளிவிடும் பட்டிகையும்" (888) என்றது காண்க. முத்துவடமும் கண்டிகையும் கூடியதுவும். முத்துவடம் அம்மைபாகத்திலும் கண்டிகை இறைவன் பாகத்திலும் உள்ளன. முளைத்தெழு மூவிலைவேல் - எறியப்பட்டாமல் எப்போதும் திருக்கரத்தைவிட்டு நீங்காமலிருப்பதனால் அது கையிலிருந்து முளைத்தெழுவதுபோ லிருந்ததென்பது. எழு - மேனோக்கி எழுதல். மேலே மூன்றிலையும் கீழே ஒரு தாளுமாயிருத்லின் ளைத்து இலைறிருக்கை). சித்தவடம் - திருவதிகையின் புறத்துள்ள ஒரு திருமடம். ஆளுடைய நம்பிகளுக்கு இறைவன் திருவடி தீக்கைசெய்த இடமாயின பெருமையுடையது. (229) பார்க்க.- (4) குடமால்...கூத்தின் பயில்வு - சிவனது ஆடல் வகையுளொன்று.- (5) பலபல காமத்தராகி - பல தீய எண்ணங்களையுடையவர்களாகி; கலமலக்கிடுதல் - உலக்கிவிடுதல். கணபதி என்னும் களிறு - விநாயகப் பெருமான். தேவர்களை அலைக்க வந்த கயமுகாசுரனை அழிக்க வந்தருளியவர் கணபதிமூர்த்தி என்பது வரலாறு. இங்கு யானையினால் வரும் துன்ப நீக்குவர் என்பது குறிப்பு. "வடிகொடு தனதடி வழிபடு மவரிடர், கடிகண பதிவர அருளினன்" (திருவலிவலம் - 5) ன்பது பிள்ளையார் தேவாரம். இரண்டு சுடர் - ஞாயிறும் மதியும். வலமேந்துதல் - கண்ணாகக்கொண்டு வைத்தல்.- (6) கரந்தன கொள்ளி விளக்கும் - சுடலையில் பிண |