பக்கம் எண் :


164திருத்தொண்டர் புராணம்

 

ஆச்சிரமமும், அடிமைக் குலமும் குறித்தது. குலமிலராயினும் - அவ்வாறு நல்ல குலமில்லாரேயாயினும் - (7) தூய்மையுடைய தொண்டர்கள் உலகிறந்த நிலையினில் நின்றனர்; அவர்கள் சிவநெறியினைத் தலைப்பட்டுச் சிவயோகங் கைவரப்பெற்று நின்றமைகண்டு, அவர்களை விரைவில் அணைந்து அந்நன்னெறியினை நானுமடைய எண்ணி அவரது சிவனொளியினின்ற உருவத்தைக் கண்டு அந்நெறியே திருவருளை நாடிநிற்க என்னை அஞ்செழுத்தும் நாடிற்று. "அம்மலங்கழீஇ யன்பரொடு மரீஇ" என்ற சிவஞானபோதம் 12-ம் சூத்திரக் கருத்து - (8) மனைக்கு ஏற்றிடும் விளக்கு அந்த அளவில் வீட்டினுள் உள்ள இருளை வலியிலதாகச் செய்யும்; ஆனால் சொற்றுணையாய இந்த அஞ்செழுத்துச் சுயஞ்சோதியாய்க் கெடாத ஒளியுள்ளது; இனி, மனையினுள் ஏற்றும் பலதிறப்பட்ட ஒளிகளும் பலராலும் காணப்படுவது; ஆனால் அஞ்செழுத்து யாவராலும் காணொணாத வகையில் உள்ளத்தை விளக்கஞ் செய்வது. - (9) முன்னெறியாகிய சிவனது நன்னெறியே யாவருக்கும் புகலிடமாம். சரண் - புகல் இடம் - (10) மாப்பிணை தழுவிய - மாது - பிரிதலில்லாத பெருஞ்சத்தியாய் இறைவனுடன் இருக்கும் அம்மையினை. பிணை - பிணா - பெண். பூப்பிணை - திருந்தடி - அடியார் இட்ட மலர்களால் அழகு படுத்தப்பட்ட திருவடி. பூப்பிணை - மலர்மாலை. பொருந்த - முதற்பாட்டிற் கூறிய கருத்து. நாப்பிணை தழுவிய - நாவினிடத்து இடையறாமல் நவிற்றுதலால் தழும்பேறி அத்தன்மை பதிந்த. நமச்சிவாயப் பத்து - அஞ்செழுத்தின் பதிகம். ஏத்தவல்லார் - எத்துதலின் அருமை குறித்தது. இடுக்கண் இல்லை - பதிகப் பயனும் குறிப்புமாம். நாயனாரது தேவாரப் பதிகங்களுள் பயன் சொல்லிய பதிகம் இஃதொன்றேயாம். சிவனை ஏத்திப் பயனடைதலே மக்கட்கு உறுதியாத லறிவிக்கப் பயன் கூறினார். ஏகாரம் தேற்றம். இல்லை - இல்லையாகும் என ஆக்கச்சொல் வருவித்துக் கொள்க. "ஏத்தவல் லாரெலாம், பந்த பாச மறுக்கவல் லார்களே" என்று பிள்ளையாரும், "சொல்லு வார்க்கில்லை துன்பமே" என்று நம்பிகளும் அவ்வப் பதிகங்களுக்குப் பயன் கூறியருளியவற்றையும் இங்கு நினைவுகூர்க.

1392.

பெருகிய வன்பினர் பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முத லமரர் வாழ்த்துதற்
கரியவஞ் செழுத்தையு மரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட் கன்மி தந்ததே.

127

(இ-ள்.) வெளிப்படை. பெருக்கெடுத்த அன்பின்றிறத்தினராகிப் பிடித்துக் கொண்ட தன்மையினாலே, அரிய பிரமதேவன் முதலாகிய அமரர்களாலும் போற்றற்கரிதாகிய திருவைந்தெழுத்தையும் திருநாவுக்கரசர் இவ்வாறு தோத்திரஞ் செய்யவே, கரிய கடலினுள்ளே கல்லானது மிதந்தது.

(வி-ரை.) பெருகிய அன்பினர் பிடித்த - பெருகுதல் - எஞ்ஞான்றும் சோர்தலில்லாது மிகுதல். அன்பினர் - குறிப்பு வினையாலணையும் பெயர். பிடித்த பெற்றியால் - "அன்பொடுபற்றிய" என்ற முன்பாட்டிற் கூறியகருத்து. பெற்றியால் - போற்றிட.

அமரர் - உயர்வு சிறப்பும்மை தொக்கது. அரு - மலரோன் என்ற அடை கொடுத்துக் கூறியதன் கருத்தும் காண்க.

அமரர் வாழ்த்துதற்கரிய அஞ்செழுத்து - அமரர் சுவர்க்க போக முதலிய பயன் கருதிச் செய்யும் பசுபுண்ணியமே வல்லாராய்ப் புண்ணியபாவங்களினிடைப் பட்டு உழல்பவராயும், அன்பொடு முற்றும்பற்றித் தம்மைமறந்து சிவனையே நினைக்கமாட்டாதவராயும் உள்ளமையால் இங்ஙனம் கூறினார்