பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்167

 

(இ-ள்.) இருவினைப்பாசமும் - நல்வினை தீவினை என்னும் கயிறும்; மலக்கல் ஆர்த்தலின் - ஆணவம் என்னும் கல்லினோடு இறுகப் பிணித்தலின்; வரும் கூட்டப் படும்; பவக்கடலில் வீழ் மாக்கள் - பிறவியாகிய கடலினுள் வீழ்மாக்கள்; ஏறிட அருளும் அஞ்செழுத்து - ஆழ்ந்துவிடாமல் மேல்ஏறும்படி துணைநிற்கும் திருவைந்தெழுத்து; அரசை - திருநாவுக்கரசரை; இக்கடல் ... வேண்டுமோ? - இந்த ஒரு சிறு கடலினுள் ஆழாது ஒருசிறு கல்லின்மேல் ஏற்றிடுதலும் ஒருவியப்பாக உரைக்கப்டுமோ? (படாது).

(வி-ரை.) இருவினைப்பாசம் - மலக்கல் - பவக்கடல் - மூன்று உருவகம். பாசம் - ஆன்மாக்களைக் கட்டித் தம்வயப்படுத்திச் செயலற்றுக் கிடக்கச் செய்யும் இருவினை மலங்களைக் கயிறாகவும், ஆணவமலம் திணிந்த இருள்போன்றதாய் உயிர்களின் அறிவு சிறிதும் விளங்காது மூடுதலின் கல்லாகவும், பவம் ஏழுவகைத் தாய் மாக்களைப் பரம்பரையில் அலைத்து அளவில்லாது பெருகுதலின் கடலாகவும் உருவகம் செய்தார்.

பாசமும் - உம்மை திணிந்த - தப்பமுடியாத - வலிமையுடைய வினைப்பாசங்களும் என்று உயர்வு சிறப்பின் கண்வந்தது. இரு - என்றது பெரிய - வலிய என்ற குறிப்பும் பட நிற்பது காண்க.

மலக்கல் - மலம் - ஆணவமலம். மாயைகன்மங்களாகிய ஏனைய இரண்டும் வந்து பொருந்த மூலமாக இருத்தலானும், விடயங்களின் இழிவு தெரியவொட்டாமல் அவற்றின் அழுந்துதற் கேதுவா யிருத்தலானும், செம்பிற்களிம்புபோலச் சகசமாயிருத்தலானும், வியாபகமாகிய உயிரின் அறிவை மறைத்து அணுத்தன்மைப் படுத்தலானும் இஃதொன்றே மலம் என்ற பெயரால் ஞான சாத்திரங்களுட் பேசப்படும்.

ஆர்த்தலின் வரு பவம் - பவம் - பிறவி. வினைக்கீடாக உயிர்கள் பிறவியிற் புகுத்தப்படுவன என்பது உண்மை. வரும் - வருவிக்கப்படும். செய்ப்பாட்டுவினைப் பொருளின் வந்தது பிறவிதானே வராது; ஒருவன் கூட்டுவிக்க வேண்டியிருத்தலின். ஆர்த்தல் - கட்டுதல். "வல்வினையேன் றன்னை, மறைந்திட மூடிய மாயவிருளை, யறம் பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி", "ஆர்மின் ஆர்மின் நாண் மலர்ப் பிணையலிற்றாடளை யிடுமின்" "பாம்பொன் றார்த்து" முதலிய திருவாக்குக்கள் காண்க.

மாக்கள் - அறிவில்லாது வினைசெய்து பிறவிக்கு வழிதேடிக் கொள்ளுதலின் பிறப்பால் மக்களேயாயினும் தன்மையால் மாக்கள் என்றார்.

ஏறிட அருளும் - ஏறத் துணைசெய்யும். அருளால் தாள் வணங்குதலும், வணங்குதலால் மேல் ஏறிவருதலும் நிகழும். அஞ்செழுத்துத் துணையாயின மட்டில் சாதனமாய் அமையும். அதனை விதிப்படி எண்ணுதலும் பயன் பெறுதலும் ஆன்மாக்களின் செயலாதலின் ஏற்றிட என்னாது இங்கு ஏறிட என்றார். பின்னர் ஏற்றிடல் என்றது வேறு. "தன்கடன் அடியேனையும் தாங்குதல், என்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற தன்மையில் நின்று நாயனார் இங்கு எந்தையை அஞ்செழுத்தாகத் துதித்திருந்தனராதலின் அதுவே அவரைக் கல்லின்மேல் ஏற்றியது என்பதாம்.

மெய் அஞ்செழுத்து - மெய் - சத்தாகிய; என்றும் மாறுபடாத - தப்பாத, "போதியோ வென்னும், அன்னமெய்த் திருவாக் கெனுமமுதம்" (திருஞான - புரா.1088), "எங்கள் சண்பை யாண்டகையார் கும்பிடவந் தணைகின் றார்தம் மெய்த்தன்மை விளங்குதிருச் செவி" (மேற்படி - 478) மெய்வேடர் பெருமானை (மேற்படி - 1022) முதலியவை காண்க. அஞ்செழுத்தின் நிலைபற்றி (1390) முன் உரைக்கப்பட்டது.