அரவெனுமோசை - முழக்குதல்பற்றி, "எல்லா மர னாமமே சூழ்க" என்று ஆளுடையபிள்ளையார் அருளியதற்கு, "தொல்லுயிர் யாவையும் வாழி யஞ் செழுத் தோதி வளர்கவே" என ஆசிரியர் விரிவுரை செய்தது காண்க. 132 1398. | தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன் செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண் கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற விழுந்தெழுந் தருணெறி விளங்கப் பாடுவார். |
133 வேறு 1399. | "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாகி" யெனவெடுத்துத் "தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்கட்"கென்று வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ் சான்றா மொருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. |
134 1498. (இ-ள்.) வெளிப்படை. யாவராலும் தொழத்தகுந்த திருநாவுக்கரசரும், தொண்டர்களின் முன்னே, செழுந் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் வெள்ளிய பிறைச்சந்திரனைச் சூடிய சடையினையுடைய சிவபெருமானைக் கும்பிட்டு, அன்பு பொருந்தும்படி கீழே விழுந்து வணங்கிப் பின் எழுந்து நின்று, திருவருணெறி உலகில் விளங்கும்படி பாடுவாராகி, 133 1399. (இ-ள்.) வெளிப்படை. "ஈன்றாளு மாயெனக் கெந்தையுமாகி" என்று தொடங்கித், "தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கு" என்று முடிக்கும் அக்கருத்துக்கொண்ட பாட்டு முதலாக, வானிடத்திருந்து உலகில் தாழும் நீரையுடைய கங்கைவாழ்கின்ற சடையினையுடையாரை, மற்றும் எல்லாவுயிர்களுக்கும் சான்றாயிருக்கும் ஒருவரைத் தண்ணிய தமிழலாகிய மாலைகள் சாத்தினர். 134 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1398. (வி-ரை.) நாவினுக்கரசும் - கும்பிட்டு - விழுந்து - எழுந்து - சடையானை - ஒருவனைப் - பாடுவார் - எடுத்து - என்று - தமிழ் மாலைகள் சாத்தினர் என்று இந்த இரண்டு பாட்டுக்களையும் முடிக்க. தொழுந் தகை - தொழும் - தொழப்படும். செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. தேவர்களாலும் மற்றும் யாவராலும் தொழப்படும் தன்மையுடைய. தேவரால் தொழப்படும் தன்மை முன் 1395-ல் உரைக்கப்பட்டது. இவ்வாறன்றித் தொழும் என்பதனைச் செய்வினையாகவே கொண்டு, தாம் வருதலைக்கண்டு மேவி அர என்னும் ஓசை முழக்கிய மெய்த்தொண்டரையும், அதுபோல அவ்வோசை முழக்கிய கடலையும் தொழுதுகொண்ட தன்மையுடைய என்றுரைப்பினு மமையும். தொண்டர்களைக் கண்டபோதே இறைஞ்சுவது அடியார்களது தன்மை. "தொண்ட ரெயிற்புறஞ் சென்றெதிர்கொண்டபோது, சொல்லி னரசர் வணங்கித் தொழுதுரை செய்தணைவார்" (1484), என்பதும், நாயனார் திருத்தில்லையைக் காண வழிக்கொண்டபோது "அவர்தந் திருவடிவு கண்டு அதிசயமென வந்து எதிர் "அரகர" என்றே சிவமொழிகளைக் கிளிகளும் பூவைகளும் பகரக்கண்டு, அவரும் தொழுதனர் என, "அஞ்சொற் றிருமறை யவர்முன் பகர்தலு மவரும் தொழுது" (1426) என்றதும் காண்க. நாவினுக்கரசும் - தொண்டர் அரவோசை ஆர்க்கவும் அதுபோலக் கடல்தானும் ஆர்க்க, அரசுகளும் என் உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |