பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்173

 

இப்போது கட்டளைக் கலித்துறை என்று வழங்கப்படும்; முன்னாள் இதனைலிருத்த விகற்பங்களுள் வைத்து வகுத்தனர்.

வார்சடையான் - என்பதும் பாடம்.

134

பதிகக் குறிப்பு :- அடியோங்கட்குத் தோன்றாத்துணையாய் இருந்தனன் இறைவன் என்பது பதிகக் கருத்தாம் என்று ஆசிரியர் காட்டியருளினர். இதுவே பதிகக் கருத்தாதல் பதிகப்பாட்டுக்கள் பலவற்றுள்ளும் காணப்படும். இறைவன் தண்ணருள் செய்து இடர்களை யெல்லாம் நீக்கி யாட்கொண்டு தன்பாலிற் சேர்த்தணைத்த கருணைத்திறத்தினை வியந்து பாராட்டியதாம்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- ஈன்றாளுமாய் - "அன்னையும் பிதாவும்" என்றபடி ஈன்றாளை முதலில் வைத்துப் பின் எந்தையை வைத்தார். தாயைக் கொண்டே தந்தையை அறிகின்றமையும் காண்க. ஈன்றாள் - எந்தை - சத்தியுஞ் சிவமுமாகி - அருளுடன் கூடி. "தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப், பேயனேனையுமாண்ட பெருந்தகை". உடன் தோன்றினர் - உடன் பிறந்தார். தமக்கு மாதினியாரும், புகழனாரும் திலகவதியாரும் துணையாகுபவரோ? அவர்களைத் துணையென்று உலக நியதிப்படி எண்ணுவம் ஆயின் அவர்கள் இங்கு உறுதுணையரல்லர். அரனே துணையாயினன்; ஆதலின் அவரே தாயும் தந்தையும் தவ்வையுமாயினர் என்பது. தோன்றுந்துணையாக எண்ணிய அவர்களுள் துணைநின்றதுபோல, இங்கு அரன் தோன்றாத் துணையாயுமிருந்தனன் என்பது. நாயனார், தமக்கு உதவிய தமக்கையாரைத் தாம் பேறு பெற்ற பின்பு நினைக்கவில்லை என்றும், அதனால் அவர் நன்றி மறந்தாரென்றும் ஒரு மடவார் குறித்தனராம். அவர் "உடன்றோன்றினராய்" என்ற இதனை மறந்தனர்போலும். மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் - அரன் அவ்வாறு தாயும் தந்தையும் தவ்வையுமா யிருத்தலுக்குக் காரணங் கூறியபடி. மூன்றாய் - அவன் அவள் அது என்ற அவையாகிய உலகம். தோன்றாத்துணையாய் - மனத்துள்ளிருக்க என்றானாதலின் துணையாயிருந்தமை தெரிந்தேன். ஏன்றான் ஏற்றுக் கொண்டான். மனத்துள் நீங்காதிருக்க - மறப்பில்லாது தன்னை என்னுள் வைக்க அரன் அருளியதே அவன் துணைசெய்யும் பெருங்கருணையாம். அடியோங்களுக்கே - தம்மையும், தமக்கையாரையும், ஏனை அடியவர் யாவரையும் உளப்படுத்தியது. எல்லாவுயிர்கட்கும் துணையாவானாயினும் அடியோங்களிடம் வெளிப்பட்டும் பிற இடங்களில் மறைந்தும் துணை செய்குவன். கடலிற் கன் மிதவையாகக் கொண்டேறியவுடன் பாடிய பதிகமாதலின் இவ்வாறு கூறியதுடன் இப் பதிக முழுதும் இக்கருத்தே பற்றித் துதித்தமை காண்க. - (2) அலைகடல் மூடினும் நமக்குக் கழலே புகலாகும்; பற்றாய் நினைந்திடப்போது நெஞ்சே என்க. புகல் - புகலிடம். தஞ்சமென்று அடையும் இடம். சரிதக் குறிப்பு : -(3) விரும்பி என்னுள்ளத் திருந்தான் - அலைகடனடுவுள் அஞ்செழுத் தாகிய அரனுருவத்தை உள்ளத்தில் ஊன்ற வைத்தமை குறிப்பு. இனி நமக்கு அருவினை சாரா - அமணர்களது மிறைகள் இதனோடு ஒழியும்; பிறவியும் ஒழியும் என்றபடி. அடியா ரடியடியோங்கள் - அடியார்க்கடியேன் என்ற திருத்தொண்டத் தொகை காண்க.- (4) மலர்ப்பாதமென் சிந்தையுள் நின்றன. "என்னுள்ளத் திருந்தான்" என்ற கருத்து. - (5) மனத்தடைத்துச் சித்தமொருக்கிச் சிவாய நமவென் றிருக்கின் னல்லால் அருள்பெற லாமோ என்றது பதிகக் கருத்தும் சரிதக் குறிப்புமாம். நாயனார் பதிகத்தில் நகா ராதியாக ஓதினும் மனத்தில் உருவெண்ணும்போது சிகாராதி