பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்175

 

யாகவே எண்ணினார் என்பது.- (6) உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளாற், றிருவாய் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன் - என்ற இதுவும் அக்கருத்தை வலியுறுத்தும். "நம்முதலா யோதிலரு ணாடாது" என்றும், "சிவமுதலே யாமாறு சேருமேற்றீரும், பவமிதுநீ யோதும் படி" என்றும் வரும் ஞானசாத்திர உண்மைகள் காண்க. இது திலகவதியார் உபதேசித்து நீறுதந்த முறை.- (7) கழல் நங் கருத்திலுடையனவே என்பது 4-வது பாசுரத்தின் கருத்தைத் தழுவியது.- (8) புழுவாய் பிறக்கினும் - மக்களாய்ப் பிறந்தோர்க்கு இனிவரும் பிறவி இன்னதென அறியப்படாமையின் இவ்வாறு வரங்கேட்கின்றார். "வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ" (திருவா). இறைவனிடம் வரங்கேட்க லாகாதென்பது ஒருவிதி. நாயனார் முழுத் துறவுடையார். அவர் சிலவரங் கேட்பர். ஆனால் அவை மிகச் சில. அவற்றுள் இஃது ஒன்று. அவற்றின் குறிக்கோள் எல்லாம் ஒன்றே. அஃதாவது - மக்களுக்குச் சாவு வருதல் நிச்சயம். இறக்கும்போது சிவனையே நினைக்கவும் சொல்லவும் வரம்வேண்டும்; பின் எப்பிறவி வரினும் அதிலும் சிவனை மறவாதிருக்க வேண்டும்; பின்வரும் பிறவிகளிலும் சிவன் அருள்புரிதல் வேண்டும் - என்பது. "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்ற வருளுமை யாறரே", "துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று, அஞ்சலென் றருள வேண்டு மாவடு துறையு ளானே", "சாதனணாயே னுன்னை, யெங்குற்றா யென்ற போதா லிங்குற்றே னென்கண் டாயே", "சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே", "உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின், என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டுவதே", "இறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து, பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார் சடைப் பிஞ்ஞகன்பேர், மறப்பன் கொலோ வென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே" என்பனவாதி தேவாரங்கள் நாயனார் கொண்ட மனக்கருத்தை விளக்குவன. நாயனார் இஃது தமக்காகக் கேட்கும் வரம். "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் .... மூவிலைச் சூலமென் மேற்பொறி", "இடபம் பொறித்தென்னை யேன்றுகொள்", "திருவடி நீறெனைப் பூசு", "பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை" என்பனவும் இக்கருத்தே பற்றித் தமக்காகக் கேட்டவை. "நின்றாள் சரணென் றேம்பலிப்பார் கட்கிரங்கு கண்டாய்" (பசுபதித் திருவிருத்தம்) என்பது போன்றவை அடியவர்க்காகக் கேட்டவை. இவ்வாறு வரங்கேட்க நாமும் பயின்றிடல் நலந்தருவதாம். இந்தப் பாட்டுப் பல அடியார்களாலும் பயின்றோதப்படுவது. புழுவும், திருவடி மறவாத தன்மையுடையதோ? எனின், எல்லாவகைப் பிராணிகளும் இறைவனை அருச்சித்துப் பேறு பெறத்தக்கன என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் ஒன்று. "இயக்கர் கின்னரர்" என்ற நம்பிகள் தேவாரமும், "அருளாற் புழுவாகிப் பிறந்திடினும் .... பொன்னுல கோடொக்க வெண்ணுவன்" (43) என்ற பொன்வண்ணத்தந்தாதியும், முதலியவை பார்க்க. "தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்" வாய் ஆதலின் உன்னிடம் இவ்வரம் வேண்டுகின்றேன் என்றபடி. - (8) மண்பாதலம் புகுதல் - உலகம் ஆழ்தல், நிலம் அசைதல், பிளத்தல் முதலியன. கடல் மூடுதல் - நீர் பெருகுதல். நீர்ப்பிரளயம். மண்பாதலம் புகுந்தால் நீர் மூடுமென்க; ஊழி. விண்பால் திசை கெடுதல் - அண்டம் பிறழ்தல். இருசுடர் வீழ்தல் - தூமகேதுவும், விண்மீன் வீழ்ச்சியும் முதலாயின. இவை யெல்லாம் உற்பாதங்கள் எனப்பட்டு உலகத்துக்குப் பெருங்கேடு விளைப்பன என்ப. நமக்குக் கழலிணையேயாகிய திண்பால் ஒன்று கண்டோம்; ஆதலின் அஞ்சல் நெஞ்சே என்க. திண்பால் - வலிய பற்றுக்கோடு; புகலிடம். கடலினடுவுள் கல்லினோடு பிணிப்புண்டு புகலிடப்பட்ட போது நாயனார் கொண்ட