மனவுறுதியினை இஃது செவ்வனே ஐயமின்றி எடுத்துக்காட்டும் அகச்சான்றாகும். "வானந் துளங்கிலென் - ஒருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே" முதலிய திருவாக்குக்களும் காண்க. கண்டோம் - கல்லில் மிதந்து தாம் கடலிற் ... கரையேறிய அனுபவத்தாற் றெரிந்தமை கூறியபடி. கடவுட் சுடர் - தெய்வத்தன்மை வாய்ந்த தீக்கடவுள். நெற்றிச் - சுடர் - நெற்றிக்கண். கடவுட்டன்மையாவது அருளுதலும் அழித்தலும் என இரண்டும் செய்யும் வன்மை. "தேவராகி, லின்னோர்க் காய்ந்தன ரின்னோர்க் கருளின, ரென்றறிய வுலகின், முன்னே யுரைப்பதில்லை" என்ற கோபப்பிரசாதம் காண்க. - (10) திருந்தா அமணர் - உண்மை கண்டும் திருத்த மடையாதவர். தமது திறத்தில் அவர் செய்தமிறைகளும் வஞ்சனைகளும் குறிப்பு "வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயிரஞ்சமண்" என்றது காண்க. முத்திதரும் தாளிணைக்கே - ஏகாரம் தேற்றமும் பிரிநிலையும் உணர்த்தி நின்றது. முத்திதரும் தாளாதலின் பிறவாமல் வந்து ஏன் கொள்ள வேண்டுகின்றேன் என்றபடி. சரணம் - புகல். இனிப் பிறவாமல் என்றுகொள வேண்டுவன; எஞ்சிய கன்ம மலத்தால் இனியும் பிறவிதர நேரிடினும், அப்பிறவி தானும் புழுவாய்ப் பிறக்க நேரிடினும், மறவாமையை முன்னமே வேண்டுகின்றேன் என முன்கேட்டது காண்க. "பிறவாமை வேண்டு மீண்டும் பிறப்புண்டே லுன்னை யென்று, மறவாமை வேண்டும்" (காரைக் - புரா - 60) என அம்மையார் கேட்ட வரமும் காண்க. நாயனாற் பரசமயப் பாசத்தொடக்கினின்றும் சிவனடிப் புணையினால் முழுதும் வெற்றியுடன் கரையேறிய பின்பு இறைவனைப் பாடியருளிய முதற்பதிக மாதலின் சைவசித்தாந்த ஞானசாத்திர உண்மைகள் பலவும் உபதேசிக்கும் தனிப்பெருமையுடன் விளங்குகின்றது இத்திருப்பதிகம். ஆன்மாக்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுதற் கமைந்த பெருமையுடையது. "மூன்றா யுலகம் படைத்துகந்தான்" (1) என்பது, சிவஞானபோதம் "அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற், றேற்றிய திதியே" என்ற முதற் சூத்திரத்திற் கண்ட கருத்தினையும், "மொய்கழலே பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்சே" என்று பூட்டுவிற்பொருள் கோளில் அமைந்த (2) திருப்பாட்டுத் "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட், டன்னிய மின்மையி லரன்கழல் செலுமே" என்ற எட்டாஞ் சூத்திரத்தின் உண்மையையும் விளக்குகின்றன. "வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் ...... அத்தனருள் பெறலாமோ?" (5) எனவும் "கழலே நினையுங் கருத்துடையேன், ...... உன்றனாமம் பயின்றேன் ... "சிவாய நமவென்று நீறணிந்தேன்" (6) எனவும் வரும் பாட்டுக்கள் "விதியெண்ணு மஞ்செழுத்தே" என்ற ஒன்பதாஞ் சூத்திரப் பொருளைத் தருவன. அஞ்செழுத்தே யன்றி வேறு சார்வு உயிருக்கு இல்லைஎனக் குருவருளால் அறிந்ததுவும், பின் அதற்குத்தகவே பயின்று நின்றதுவும் உணர்த்தப்பட்டன. இப்பாட்டுக்கள் இத்திருப்பதிகத்தின் நடுவில் விளங்குவதும் குறிக்க. "மாயமெல்லா முற்ற விட்டிரு ணீங்க - திருவடிக்கே நேய நிலாவ - மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே" (4) என்ற திருப்பாட்டு "ஏகனாகி யிறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்லினை யின்றே" என்னும் பத்தாஞ் சூத்திர வநுபூதி நிலையினையும், "கழனங் கருத்தில் உடையவனே, (7), "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்" (8) "அடியே னினிப்பிற வாமைவந் தேன்றுகொள்ளே" (10) என்ற திருப்பாட்டுக்கள் "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி, னயரா வன்பி னரன் கழல் செலுமே" என்னும் பதினோராஞ் சூத்திரத்திற் கண்ட அநுபவ நிலையின் |