1401.(இ-ள்.) வெளிப்படை. தேவர் பெருமானுடைய திருமாணிகுழி என்னும் தலத்தினையும், திருத்தினைநகர் என்னும் தலத்தினையும் பொருந்தச் சென்று விரும்பிய சொன்மலர்களாகிய தேவாரங்களாற் போற்றி வணங்கிப் போய், வழியில் பூக்கள் மலர்கின்ற சோலைகளின் மணமானது தமது திருவடியிற் பொருந்தும்படி நடந்து சென்று, பொருள்மொழியின் வேந்தர் செல்வத் திருக்கெடிலத்தைக் கடந்து வந்தணைந்தனர். 136 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1400. (வி-ரை) நினைவால் - திருவதிகைப்பதி சென்று - அடைவார் - மாணி குழியும் - தினைநகரும் - சென்று - இறைஞ்சி - மொழியின் காவலர் - கெடிலத்தைக் கடந்து - அணைந்தார் என்று கூட்டி முடித்துக் கொள்க. மற்றும் இனையன வண்டமிழ் மாலைகள் பாடி - இத்திருப்பதிகங்கள் இப்போது கிடைத்தில. வெற்றி மழவிடை வீரட்டர் - வெற்றி - புறஞ்செற்ற வெற்றி. தம்மை ஆட்கொண்ட வெற்றி - அமணர்களினின்றும் கடப்பித்து ஏற்றுக்கொண்ட வெற்றி - குறிப்பு. விடை - அடைந்தார்க்கு அரணளிப்பது. புரமெரித்ததும் பகையமணைக் காய்ந்ததுவுமாகிய வெற்றிக் குறிப்புப்படக் கூறியதனைப் பின்னர் ஒன்னார் புரங்கள் செற்றவர் என விரிப்பதும், ஒன்னாரையும் புரங்களையும் என்று உம்மைத் தொகையாக உரைக்க வைத்ததும் காண்க. பாதம் மிக நினைவில் உற்றதொர் காதலின் - தம்மைச் சமண் தீர்த்து ஆட்கொண்ட உபகாரத்தை எண்ணவே, காணும் காதல் பெருகிற்று. இறைவரிடம் வழிப்படுத்திய குருவாகத் திலகவதியாரை முன்னர் உரைப்பினும், அவர் வேண்டுதலுக் கிரங்கி அருளிச் சூலையாகிய அருட்சத்தியைப் பதிவித்து ஈர்த்து ஆளாகக் கொண்டு உரைத்தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வுபெற உணர்த்தியருளியவர் பரம முதற்குருவாகிய வீரட்டத்தின் இறைவரே யாதலால், அவரைக் காணும் காதல் மிகுந்தது. புரங்கள் செற்றவர் வாழும் - திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த இடம் திருஅதிகை என்பது. வாழும் - ஒரு காலத்திருந்து, பின் நீங்காது, என்றும் நிலைத்து விரும்பி எழுந்தருளியிருக்கும். வாழும் பதி - அடைந்தாரை வாழ்விக்கும் இடமாகிய பதி எனப் பிறவினைப் பொருளில் உரைத்தலுமாம். அங்கு நின்றெய்தி - சென்றணைவார் - என்பனவும் பாடங்கள். 135 1401.(வி-ரை.) திருமாணிகுழியும் ...... இறைஞ்சி - நாயனார் இந்த இரண்டு தலங்களையும் சென்று வணங்கிப் பாடிய திருப்பதிகங்கள் இப்போது கிடைத்தில. இவையும் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய "மற்றும் இனையன வண்டமிழ் மாலைகள்" (1400) என்ற பதிகங்களும் திருமுறை கண்ட புராணத்தால் அறிகின்றபடி சிதலரித் தொழிந்தன போலும்! திருமாணிகுழி - தலவிசேடமும் குறிப்பும் 236-ம் பாட்டின்கீழ்ப் (பக்கம் - 274) பார்க்க. திருத்தினைநகர் - தலவிசேடமும் குறிப்பும் 237-ம் பாட்டின்கீழ்ப் (பக்கம் - 276) பார்க்க. இவற்றுள் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து திருவதிகைக்குச் செல்லும் வழியில் திருமாணிகுழி உள்ளது. திருத் தினைநகர் சில நாழிகை வழி தெற்கேயுள்ளது. நாயனார் திருவதிகை சேரும் காதலுறச் சென்றாரேனும் வழியிடைக் காணப்பெறும் தலங்களையும் கண்டு வணங்கிச்செல்ல வேண்டுமென்னும் முறைபற்றி இந்தத் தலங்களையும் இறைஞ்சிச் சென்றனர். திருத்துறையூரினின்றும் திருத்தில்லை காண வழிக்கொண்ட நம்பிகளும் இவ்வாறே இவற்றையும், வழியிடைப் |