ஏவியும், கல்லொடு பூட்டிக் கடலிற் பாய்ச்சியும் செய்வித்த மிறைகளுக்கெல்லாம் உடனாக நின்று காத்தருளி அவற்றினின்றும் தப்புவித்து ஈடேற்றி, மீளவும் தமது திருமுன்பு ஈர்த்துச் சேர்த்தருளியும், பெருங்கருணைவைத்த இந்தப் பெருந்தகையை முன்னெல்லாம் அமண்குண்டர் சொற்கேட்டு இகழ்ந்தேனே என்ற கருத்தே நாயனாரது திருவுள்ளத்து அழுந்தி, முன்றேன்றி, மிக்க பரிவினை விளைத்தது. ஆதலின் அப்பரிவு தோன்ற இத்திருப்பதிகம் பாடித் துதித்தனர் என்க. இத்துணையும் பெறத் தம்பரிவால் - சாற்றி என்று வைத்தருளிய தெய்வக் கவிநலம் காண்க. சமணர்கள் சிவனை இகழுந்தன்மை யுடையவர் என்பது "கரிய மனச்சமண் கரடி யாடு கழுக்களால், எரிய வசவுணுந் தன்மையோ" என்ற நம்பிகள் திருவாக்கானு மறிக. வாழ்ந்தார் - வாழ்வு பெற்றனர். தாம் முன் செய்த தவறினை உணர்ந்து வருந்திப் பரிந்து போற்றியதனால் அதன் தாழ்வு முழுதும் நீங்கியும்; அமணர் தொடக்கு இனி எவ்வாற்றானும் நிகழாது நீங்கியும், வாழ்ந்தனர் என்க. சாற்றினரே - என்பதும் பாடம். 143 திருச்சிற்றம்பலம் | ஏழைத் திருத்தாண்டகம் |
| வெறிவிரவு கூவிளநற் றெங்க லானை வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப் பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை யறிதற் கரியசீ ரம்மான் றன்னை யதியரைய மங்கை யமர்ந்தான் றன்னை யெறிகெடிலத் தானை யிறைவன் றன்னை யேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
1 முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள் முறைமுறையா னந்தெய்வ மென்று தீண்டித் தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார் மலைமறிக்கச் சென்ற விலங்கைக் கோனை மதனழியச் செற்றசே வடியி னானை யிலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை யேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு - அறிவில்லாமையாலே பண்டு அமணர் சொல்லே கேட்டு ஏழையேன் ஏமது பெருமானை இகழ்ந்தவாறு என்ன பாவம்! என்று பரிவு கூர்ந்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு - நாயனார் அருளிய திருத்தாண்டகப் பதிகங்களுள் இஃது இரண்டாவதாகும். ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே! என்று பாட்டுக்கள் தோறும் முடிபெய்துதலால் இது ஏழைத் திருத்தாண்டகம் என்று பெயர் பெற்று வழங்குவதாகும். இகழ்ந்தவாறே - ஏகாரம் இகழ்ச்சிக் குறிப்பில் நின்றது. என்னே பாவம்! என்றபடி. அமணரோடு உடனின்று அவர் சொற்கேட்டுப் பண்டு இகழ்ந்தமையும், அவ்வாறு இகழ்ந்தாலும் கைவிட்டுவிடாமல் இறைவன் விரைந்து இடர்தீர்த்து அருள் செய்தமையும், சமணர் நிலைகளினிழிபும் 5, 7, 8, 10, 11 திருப்பாட்டுக்களிற் கூறுகின்றார். ஏனைய திருப்பாட்டுக்களில் இறைவனது பெருமைகளைப் பேசி இத்தகைய பெருந்தகையை நான் அறியாது இகழ்ந்தேனே என்று இரங்குகின்றார். (1) புள் ஊர்தியான் - திருமால். பொன்னிறந்தினான் - பிரமன். இவர்களுக்குள்ளே நின்று இயக்குதலால் இவ்வாறு கூறினார். அதியரையமங்கை - ஒரு தலம். -(2) வில்வலான் - மன்மதன். வில்வட்டம் - வில்லின் கொற்றம் - (4) கந்திருவம் செய்திருவர் கழல் கைகூப்ப - கந்திருவம் - பாட்டு. இருவர் - பிரம விட்டுணுக்கள். அசுவதரன் - கம்பளன் என்னும் இரண்டு கந்தருவர்கள் தவஞ்செய்து சிவபெருமானுடைய காதிற் குழைவடிவாக இருந்து பாடிக்கொண்டிருக்கும் |