பதிகக் குறிப்புக்கள் :- கெடிலவாணர். என்றது காந்தாரபஞ்சமப் பண்ணில் அமைந்தது. இத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாசுரமும் கெடிலவாணரே என்ற ஈறுகொண்டு முடியும்; ஆதலின் இப்பதிகம் திருக்கெடிலவாணர் என்று பெயர் வழங்குவது. (1) முளைக்கதிர் - பெருமான் திருமுடியில் வைத்தபின்னர் முளைக்கத் தொடங்கிய கதிர்களுடைய. மழலை - வீணையின் ஓசையை மழலைக்கு உவமிப்பர். கிளைந்துழிப் பொன் தோன்றிடும் கெடிலவாணர் - மண் கிளைத்தவிடத்துப் பொன் தோன்றுமாறு போலப் பாசத்தை நீக்கிய வழித்தோன்றும் கெடிலவாணர். (2) முதன் மூன்றடிகளில் சொற்பின் வருநிலையணி மிக அழகுபட மிக எளிதில் பொருள் புலப்பட அமைந்துள்ளது. ஏழை - அம்மையார். கீறின - கிழித்த. கீறின உடை - மான்தோல், புலித்தோல், யானைத்தோல். (3) விடந்திகழ்கெழுதரும் - கெழு - நிறம். விடத்தாற் கருநிற மிக்க என்க. "குருவுங் கெழுவு நிறனாகுமே" (தொல் - சொல் - உரி. 5). உடம்பு வெள்ளைநிறு அழகெழுதுவர் - திருமேனியில் அழகுபட வெண்ணீற்றினைப் பூசுவர். எழுதுதல் பூசுதல் என்ற பொருளில் வந்தது. "பூசுவதும் வெண்ணீறு (திருவா). அழகு எழுதரு சடை - எழுதருதல் - எழுதல். படர்தல் - நீளுதல். பாய்புனல் கிடந்து அழகு எழுதுதல் யாற்றுநீர் ஒழுக்கினால் சித்திரம் எழுதுவது போல நீர் ஒழுகுவதும் மணல் படுத்தும். -(4) விழுமணி - கிடக்கும் கரிய விட்டுணு. அயில் - கூர். தீக்கடவுள். எயிறு - ஈர். காற்றுக் கடவுள். மூன்றுங்கொண்ட வெய்யது ஓர் அம்பு. "அரிவாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவாறு" (சீகாழி - ஆமாத்தூர் - 1 - பிள்ளையார்). கொழுவிய - அழகிய; நீண்ட மேருமலை - கோத்து வளைத்தனர். கோட்டுதல் - வளைத்தல். வெய்யது - முன்னது, வெம்மை - விருப்பம்; பின்னது, கொடியது.- (5) குழுவினராகி. தழுவினவினை. கழுவுதல் - நீக்குதல்; கெழுவுதல் - பொருந்துதல். "மங்கையோடிருந்தே யோகு செய்வானை" (திருவிசைப் - கருவூர்த் - கங்கை - 11). -(6) கையில் எரிசான்றாக மணஞ் செய்வர் - நயப்பர் - என்றது நயம். தென்றிசைக் கங்கை - 235 பார்க்க. -(8) கிடந்து - சொற்பொருட் பின்வருநிலை. பேதுற - ஐயுற - ஏங்க - நகும் - என்பன நான்கும் தனித்தனி பெயராத பொருட் டற்குற் றிப்பேற்ற வணி; நான்கும் கூடி நாடகச் சுவைபெற அமைந்து உருவகத்தை உள்ளுறுத்ததோர் தற்குறிப்பேற்றவணி. "நாகத்தை நங்கையஞ்ச" (நேரிசை - திருவாரூர். 2) என்றதை ஒப்பு நோக்குக. II திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
|