வீணையர்", "மிக நல்ல வீணை தடவி." -(7) கரைதல் - சொல்லுதல் - (9) கங்குலாக - இருளினால் மறைக்கப்பட. (10) புலம்புதல் - வருத்த மிகுதியால் பன்னிப் பேசுதல். III திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, மட்ட லரிடு வார்வினை மாயுமால்; கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ, ரட்ட னாரடி சேரு மலருக்கே. |
1 திருச்சிற்றம்பலம் விதித்தபடி அட்டபுட்பம் (எண்வகை மலர்) சாத்தி அருச்சித்தலைக் குறிப்பது. இப்பதிகம் தொடக்கம் காண்க. எண்மலர் - மலர் ஓரிருநான்கு - பூங்கொத்தாயின மூன்றோடோரைந்து - போதுகள் மூன்றோ டோரைந்து - ஏழித்தொன்மலர் - ஒண்மலர் எட்டு - அட்டபுட்பம் - என்று அதனையே பாசுரந்தொறும் கூறுகின்றார். அட்ட புட்பவகையும் அவை மூன்று காலந்தோறும் வெவ்வேறாம்படியும், அவற்றினால் அருச்சிக்குமாறும், நலஞ் சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும்" (ஆரூர் - தாண்டகம்) என்றபடி கொல்லாமை முதலிய உட்சாதனங்களை உட்பூசையில் அட்டபுட்பமாக அருச்சிக்கும் பண்பும், பிறவும் ஆகமங்களிலும், வழிநூல்களுள்ளும் காண்க. விதித்தபடி எண்மலரா லருச்சிப்பார் பெறும் பயனை "வினைமாயும்", "கோள வல்வினையுங் குறைவிப்பார்", "வல்லினை ஓட்டுவார்", "வினை தீர்ப்பவர்","வினை ஓட அகற்றுவார்", "வல்வினை தீர்ப்பார்", "வினையைக் கழிப்பர்", "வினை பாற்றுவார்" என்று பதிக முழுமையும் வற்புறுத்தியருளினர். அவ்வாறு அருச்சித்தல், உரை செய் நூல்வழி (7) நீளமாக நினைந்து (2) உள்கி (3) காலையேத்தி (8)ச் சேவடியில் இடுதல்வேண்டும். அதனால் வினைமாயும்; எவ்வாறெனின் வீரட்டர் வல்வினையையும் மாய்ப்பர். ஆதலின் அடிசேரும் மனமுடையவர்கள் அவன்பா லணைந்து அட்டுமாறு செய்கிற்ப. (10) என்று இப்பதிக முழுமையும் தொடர்ந்து பொருள்படுத்திக் கொள்ளத்தக்கது. இவ்வாறே நாயனாரது திருப்பதிகங்களுட் பெரும்பாலனவும் ஒவ்வோர் உண்மையை விளக்கி நிற்பன. IV திருச்சிற்றம்பலம் | "கொப்பளித்த" திருநேரிசை |
| இரும்புகொப் பளித்த யானை யீருரி போர்த்த வீசன் கரும்புகொப் பளித்த வின்சொற் காரிகை பாக மாகச் சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற வரும்புகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே. |
1 திருச்சிற்றம்பலம் கொப்பளித்த என்ற சொல்லும் பொருளும் இப்பதிகம் முழுமையும் வருதலால் இப்பெயர் பெற்றது. (கொப்புளித்த என்பதும் பாடம்). கொப்பளித்தல் - தன்மை - பண்பு - மிகுந்து வெளித்தோன்றுதல் என்ற பொருளில் வந்தது. "நறை கொப்பளிக்கும் நறும் பொகுட்டு நளின வாழ்க்கை" (காஞ்சிப்புரா - மாசாத் தன்றளிப் படலம் - 1) பார்க்க. கரும்பு கொப்பளித்த வின்சொல் - வம்பு கொப்பளித்த கொன்றை - பரவு கொப்பளித்த பாடல் முதலியவை காண்க. சொற்பொருட் பின்வருநிலை. V திருச்சிற்றம்பலம் | திருநேரிசை | | வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து வுண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக்கூறி |
|