| விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டு வார்க்கே. யண்ணியார் பெரிதுஞ் சேயா ரதிகைவீ ரட்ட னாரே. |
1 திருச்சிற்றம்பலம் (1) உண்ணிலா ... கூறி - உள்ளத்தினுள் நின்று உணர்வுதந்து. வேண்டுவார்க்கே அண்ணியார் - அண்மையில் உள்ளவர். வேண்டாதார்க்குக்குப் பெரிதுஞ் சேயார் - (2) என் உள்ளங் கூடினார் கூடல் ஆலவாயிலார் - நாயனார் திருவாலவாய்ப் பெருமானை ஆன்மார்த்த நாயகராகக் கொண்டு ஆன்மார்த்த சிவபூசை செய்து வந்தனர் என்று கருதப் பலசான்றுகள் உள்ளன. "ஆலவாயி லப்பனே யருள் செய்யாயே", "தென் கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே", "என்மே லூனமது வெல்லா மொழித்தான்", "மற்றொரு பற்றில்லா வடியேற் கென்றுஞ் சிறந்தானை", "என்றலையி னுச்சி யென்றுந் தாவித் திருத்தானை", "எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான்... மலரடி காணும் வண்ணம் அஞ்சலென்று", "வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடும் தொண்ட னேனுன், செழு மலர்ப் பாதங் காண", "நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச், செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்", "புந்தியொன்றிப் பிடித்து நின் றாள்களென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்" முதலியவை பார்க்க. "தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர், கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி, யிண்டைகொண்டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக், கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே" (பொது - நேரிசை), "பாங்கறியா, வென்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லா, மம்போ தெனக்கொள்ளு மையனையாற னடித்தலமே" (திருவிருத்தம்) என்ற இவை முதலியவை நாயனார், ஆன்மார்த்தமாகிய சிவ பூசையினை வேதசிவாகமங்களின் விதிப்படி செய்துவந்தனர் என்பதனை விளக்குவன. நாயனார் தாமே செய்து பலகாலம் வாழ்ந்து தவஞ்செய் திருந்த திருப்பூந்துருத்தித் திருமடத்தினுள் அவர் பூசை செய்தருளிய சிவபூசை இடமும் சிவபூசை மேடை முதலியவற்றின் அடையாளங்களும் இன்றும் காணப்படுகின்றன. இவற்றைக் காப்பாற்றிப் போற்றுதல் சைவ நன்மக்களது உயர்ந்த கடமைகளுள் ஒன்றாகும். கூடினார் கூடல் - சூடினார் சூடல் - ஆடினார் ஆடல் - சொற்பொருட்பின் வருநிலை - (3) ஊனையே - ஊன் - பிறவி. ஏகாரம் விடாமற்பற்றுகின்ற - விரும்புகின்ற எனத் தேற்றம். துன்பத்தழுத்துகின்ற என இழிவு சிறப்பு என்றலுமாம். உள்ளத்துள்ளே உணர்தல் - எப்போதும் சிந்தித்திருத்தல். "உடம்பெனு மனைய கத்தே... இருந்து நோக்கில்" (தனி நேரிசை). "காயமே கோயிலாக" (தனி - நேரிசை) முதலியவற்றாற் கூறப் பட்ட உட்பூசை.- (4) துருத்தியாம் குரம்பை - கொல்லனுலையில் ஊதும் துருத்தி போன்ற உடம்பு. தொண்ணூற்றங் கறுவர் - தத்துவ தாத்துவிகக் கூட்டம். தத்துவம் 36; தாத்துவிகம் 60. விருத்திதான் தருக - வேலை தாருங்கள். விருத்தி - தொழில் முயற்சி. பொருள் என்றலுமாம். வருத்தி - வருத்தம். அருத்தி - ஆசை - அன்பு.- (5) துத்தி - பாம்பின் படப்பொறி. உத்தரமலையர் - இமயவேந்தன். அத்தி - யானை.- (6) வரிமுரி - இசைப்பாட்டு வகைகள். வரியும் முரியும். கரிபுரி விரிகுழல் - சுரித்தும் புரித்தும் விரித்தும் புனையும் கூந்தல் - (7) நீதியால் - வேத சிவாகமங்களுள் விதித்தபடி. சோதி - எங்கும் நிறைந்த பேரொளி. சுடர் விளக்கு - அவ்வொளியின் பகுதி ஓரிடத்துக் கூர்ந்து காண்பது.- (8) எல்லி - இரவு குறித்தது. இரவும் பகலும் எப்போதாயினும். துஞ்சும்போது - கண்டுயில் கொள்ளுமிடத்து. புல்லிய - சேரும் பொருட்டு. புல்லிய - சிறுமையுடைய என்றலுமாம். காமன் ..... நோக்கியிட்டார் - அவர்வந்து என் மனத்துட் புக்கபோது வேறு காமச் |