பக்கம் எண் :


20திருத்தொண்டர் புராணம்

 

(இ-ள்) வெளிப்படை. அவ்வூரின் மகளிரின் இடைகளே அழகிய முலைகளைச் சுமந்து வருந்துவன; (அவர்களணிந்த) நூபுரங்களே ஏங்குவன; (அவரணிந்த) மணிகளிழைத்த காஞ்சியே இரங்குவன; மாடநிரைகளே ஒங்குவன; குற்றமில்லாத அறங்களே ஒழுகுவன; தீங்குநெறிகளே நீங்குவன; பெருங்குடிகளே நெருங்குவன.

(வி-ரை.) அணங்குவன மகளிர் இடை - மகளிரிடையேயன்றி அணங்குவன பிற இல்லை. வருந்துவோர் இல்லை என்பது கருத்து. இவ்வாறே ஏங்குவன முதலாக மேல் வருவனவற்றையும் உரைத்துக்கொள்க. இடை என்பது முதலாக எல்லா இடத்தும், தொக்குநின்ற பிரிநிலை யேகாரங்களால் பிறவெல்லாம் விலக்கப்பட்டன. இதனை ஒழித்துக் காட்டணி எனவும், நியமவிலக்குச் சிலேடை எனவும் கூறுப. 1183 - 1184 - 1185 பார்க்க.

அணங்குதல் - வருந்துதல். பிறரை வருந்தச் செய்வன எனப் பிறவினைப் பொருள் கொள்ளுதலுமாம்.

சுமந்து - சுமந்ததனால், வினையெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. "மருங்கு னெருங்கப், பித்தீர் பணைமுலை காளென்னுக் கின்னும் பெருக்கின்றதே" (121), "இடை ஞெமியப், புகிலு மிகவிங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே" (165) முதலிய திருக்கோவைத் திருக்வாக்குக்களும் பிறவும் காண்க.

ஏங்குவன - ஒலிப்பன - தியக்குவன என இருபொருள்பட நின்றது.

இரங்குதல் - அழுதல் எனவும், ஒங்குதல் - செருக்குடனிற்றல் எனவும், நீங்குதல் - விலகுதல் எனவும், நெருங்குதல் - தகைமையின்றி அணுகுதல் எனவும் பொருள்படவு நின்றன.

நூபுரங்கள் - சிலம்புகள். மணிக்காஞ்சி - மணிகளிழைத்த மேகலை.

வழுவில்அறம் - வழுவில் - இயற்கை யடைமொழி. அறம் ஒழுகுவன என்றது மக்கள் அறத்தின் வழியே ஒழுகுகின்றனர் என்றதாம்.

நீங்குவன தீங்குநெறி - அறம்பெருகப் பாவந்தேய்ந் தொழியுமாதலால், அக்காரண காரிய முறைமை தோன்ற அடுத்துப் பின்வைத்தார். நெருங்குவன பெருங்குடிகள் - இவ்வாறே அறத்தின் ஒழுகித் தீமை நீங்கியதனால் குடிகள் ஒங்கி வளர்கின்றன என்ற கருத்துப்பெற வைத்த வைப்புமுறையும் காண்க.

பெருங் குடிகள் - "நன்மை நிலை யொழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கி" (1267) என்று நாட்டுச் சிறப்பிற் கூறியதனை, நகரச் சிறப்பிலும் அமைதிகாட்ட வேண்டுதலின், இங்கும் விதந்து எடுத்துக் கூறினர்.

அணங்குவன இடை என்பது முதலாக எழுவாய்களைப் பின்வைத்து சிலேடையாக மொழிந்த வினையையும் பொருளையும் வற்புறுத்தி அறிவுறுத்தற் பொருட்டு.

நீங்குவன தீங்குநெறி - தீ நெறிமாற, அறம் தரும் நாயன்மார் திருவவதாரங்கள் நிகழ்ந்தனவாதலின் அவற்றின் பயன் கூடிற்று என்ற குறிப்பும் காண்க.

3

1279.

மலர்நீலம் வயல்காட்டு; மைஞ்ஞீல மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டு மணியூசல் பலகாட்டும்;
புலர்நீல விருள்காட்டும் பொழுதுழவ ரொலிகாட்டும்;
கலநீடு மனைகாட்டுங் கரைகாட்டாப் பெருவளங்கள்.

14

(இ-ள்) மலர்நீலம் வயல்காட்டும் - வயல்கள் நீலமலர்களைக் காட்டுகின்றன; மைஞ்ஞீலம் மதிகாட்டும் அலர்நீடும் மறுகு - மையிட்ட நீலம்போன்ற கண்களையும் பிறைமதிபோன்ற நெற்றியினையும் கொண்ட தாமரை மலர்போன்ற முகமுடைய