என்பதும் கருதப்படும். "அண்ணாமலை அறையணி நல்லூரும் அரனெறியும்" (2) என்றும், "நல்வெண்ணெய் நெல்வாயிலும்" (9) என்றும் காப்புத் திருத்தாண்டகத்தினுள் இத்தலங்களை நாயனார் குறித்தருளியது காண்க. ஆசிரியர் கூறியருளிய வைப்பு முறையால் நாயனார் சென்று வணங்கியதும், பின்னர்த் திருக்கோவலூரினின்றும் திருப்பெண்ணாகடத்துக்குச் சென்றதும் ஆகிய சாலை வழிகள் இப்போது வழக்கில் காணப்படாது மாறியன போலும். பெண்ணாகடம் - 1416-ன் கீழ்வரும் தலவிசேடம் பார்க்க. கடந்தை என்று பதிகத்துக் கூறப்பட்டது. தூங்கானை மாடம் - கோயிலின் பெயர். பெருகு விருப்புடன் - அணைந்தார் - விருப்பம் மேன்மேல் மிகும் மனத்துடன் சேர்ந்தனர். விருப்பம் மிகுதற்குக் காணரம் 1415 - 1416 -ல் விளக்கப்படுவது. 148 1414. | கார்வளரு மாடங்கள் கலந்தமறை யொலிவளர்க்குஞ் சீருடையந் தணர்வாழுஞ் செழும்பதியி னகத்தெய்தி, வார்சடையார் மன்னுதிருத் தூங்கானை மாடத்தைப் பார்பரவும் திருமுனிவர் பணிந்தேத்திப் பரவினார். |
149 (இ-ள்.) வெளிப்படை. மேகங்கள் தங்குதற்கிடமாகிய மாடங்களில், பொருந்திய வேதவொலியை வளர்க்கின்ற சிறப்புடைய அந்தணர்கள் வாழ்கின்ற அந்தச் செழும் பதியினுள்ளே சென்று சேர்ந்து, வார்ந்த சடையினையுடைய சிவபெருமான் நிலைபெற்று விளங்கும் திருதூங்கானைமாடக் கோயிலினை உலகம் போற்றும் திருமுனிவராகிய வாகீசர் பணிந்து ஏத்தி வந்தித்தனர். (வி-ரை.) மாடங்கள் - அந்தணர் வாழும் - பதி என்று கூட்டுக. கார் மாடங்களில் வளர, அந்த மாடங்களில் அந்தணர்கள் வாழ்கின்றனர் என்பது. மறை ஒலி வளர்க்கும் என்றது முறைப்படி முறை பயில்வதனையும் வேத விதிப்படி வேள்விகள் செய்வதனையும் குறித்தது. அதன் பயனாக மேகங்கள் கூடி அந்நகரமும் நாடும் செழித்தன என்று குறிப்பார், கார்வளரும் - மறை ஒலிவளர்க்கும் - செழும்பதி என்று உடன்கூட்டி உரைத்தார். செழும்பதி - பெண்ணாகடம் - சிறந்த அந்தணர் வாழும் பதி என்பது. சேய்ஞலூர்போல இதுவும் மறையவர் மிக்குவாழும் பதி என்க. வார்சடையார் - வார்தல் - நீண்டு வளர்ந்திருத்தல். தூங்கானை மாடத்தைப் பணிந்து என்றது கோயில் முதலிற் கண்ணுக்குப் புலனாகியபோதே நாயனார் அக்கோயிலினை வணங்கினார். கண்டவுடன் முதலில் கோயிலினை வணங்குதல் மரபு. பார்பரவும் திருமுனிவர் - உலகமெல்லாம் போற்றி யுய்தற்குரிய பெருமுனிவர் வாகீசர் என்பது. பணிந்து ஏந்திப் பரவினார் - பணிதல் ஏத்துதல் பரவுதல் என்ற இவை வழிபாட்டு வகைகள். 149 1415. | "புன்னெறியா மமண்சமயத் தொடக்குண்டு போந்தவுட றன்னுடனே யுயிர்வாழத் தரியேனான்; றரிப்பதனுக் கென்னுடைய நாயக!நின் னிலச்சினையிட் டாரு"ளென்று பன்னுசெழுந் தமிழ்மாலை முன்னின்று பாடுவார். |
150 |