முன்னாகி முடிவாகி நின்றான் என்றதனால் இறைவனது சத்தாந்தன்மையும், உமைபாகங் கொண்டான் என்றதனால் அவனது சித்தாம் தன்மையும், (சுகமுடையவனே சுகங் கொடுப்பவனானதால்) சங்கரன் என்றது அவனது ஆனந்த மாந் தன்மையும் குறித்தன. சத்தாதலின் அருள் தரும் தகுதியும், சித்தாதலின் கொடுத்தற்கேற்ற அருளினை உடைமையும், ஆனந்தனாதலின் சுகம்தரும் தகுதியும் உடையவன் என்பதும் குறிக்கப்பட்டன. இக்கருத்துககள் பற்றியே சூலம் என்மேற் பொறி - திருவடி நீறெனைப்பூசு - இடபம் பொறித்தெனையேன்று கொள் - என்ற மூன்றாக விண்ணப்பங்கள் செய்துகொண்டனர் நாயனார் என்பார் ஆசிரியர் இந்த மூன்று தன்மைகளாற் பதிகக் குறிப்புக்கூறினர். நன்னாமம் என்ற கருத்தும் இது. நாமம் - புகழ் என்றுகொள்ளலுமொன்று. இதனைப் பதிகத்துக்கேற்றி உரைத்தலுமாம். திருவிருத்தம் - பதிகப் பாட்டுக்கள் கட்டளைக் கலித்துறை. அது முன்னாளில் திருவிருத்தம் என வழங்கப்பட்டது. முன் உரைத்தவை பார்க்க. நலம் சிறக்க - நன்மை பெருக - விளங்க. முன்னரே திலகவதியார் அஞ்செழுத்தோதிக் கொடுத்த திருநீற்றை அணிந்தமையாலும், திருவதிகையின் இறைவர் அருளி உணர்வு பெறுவித்தமையானும் நலம் பெற்றனராதலின் முன்னே பெற்ற அந்நலங்கள் இங்கு மேலுஞ் சிறந்து விளங்க என்றார். பாடுதலும் - பாடிய உடனே. பாடுதலும் - சாத்த - என்று வரும் பாட்டுடன் முடிக்க. பாடியதும் சாத்துதல் நிகழ்ந்த விரைவு குறிக்க இவ்வாறு கூட்டி முடிக்க வைத்தார். எனவெடுத்து - என்பதும் பாடம். 151 திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் - திருத்தூங்கானைமாடம் |
| பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்! போற்றிசெய்யு மென்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்ட றுன்னார் கடந்தையுட் டுங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே! |
1 | "ஆவா! சிறத்தொண்ட னென்னினைந் தா"?னென் றரும்பிணிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி; காதல் செய்வார் தேவா! திருவடி நீறெனைப் பூசுசெந் தாமரையின் பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே! |
-9 | கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோ லிடபம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்க டடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந் தத்துவனே! |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- சமண் சமயத் தொடக்குண்ட இவ்வுடலுடன் உயிர் வாழத்தரியேன்; ஆதலின் இவ்வுடலில் உனது இலச்சினைகளாகிய சூலம் - இடபம் இவைகளைப் பொறித்தருளுக! திருவடி நீறெனைப்பூசுக! என்பது. இஃது 1415ல் ஆசிரியர் உரைத்தவாறு. பதிகப் பாட்டுக் குறிப்பு :- இப்பதிகத்தில் மூன்று பாட்டுக்களே இப்போது கிடைத்துள்ளன. எஞ்சியவை சிதலரித் தொழிந்தன போலும்! .-(1) ஆவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங் கூற்று அகல - இதனை "உடல் தன்னுடனே உயிர் வாழத் தரியேனான்" (1415) என்று விளங்கினார். இவ்வுடலின்கண் இருந்து உயிர் வாழத் தரியேன்" ஆதலின் அவ்வாறு வாழாவிடின் வரும் கூற்று அகலும்படி என்பது. உடல் தூயதாகிய வழியே அதனுள் நின்று உயிர் வாழ்தல் பயன்படும். இல்லையேல் அவ்வாழ்க்கை வீழ்ந்தொழிதற்பாலது என்பது ஆன்றோர் துணிபு. "வார்கடலுலகின் வாழ்கிலேன் கண்டாய்" (வாழப்பத்து) |