1421. | ஆனாத சீர்த்தில்லை யம்பலத்தே யாடுகின்ற வானாறு புடைபரக்கு மலர்ச்சடையா ரடிவணங்கி யூனாலு முயிராலு முள்ளபயன் கொளநினைந்து தேனாறு மலர்ச்சோலைத் திருப்புலியூர் மருங்கணைந்தார். |
156 1419. (இ-ள்.) வெளிப்படை. திருத் தூங்கானைமாடத்தில் எழுந்தருளியிருக்கும் சுடர்க்கொழுந்து நாதருடைய திருவடிகளைப் பரவி, எற்கு முறையாகத் திருப்பணிகள் செய்து பயின்று அத்திருத் தலத்தில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் நாட்களில், கானப் பூக்களின் மணங் கமழ்கின்ற ஒப்பற்ற திருவரத் துறையினையும், தேன் பொருந்திய சோலைகளில் முகில்கள் தங்கும் திருமுதுகுன்றத்தினையும் பணிந்து, 154 1420.(இ-ள்.) வெளிப்படை. வளப்பமுடைய தமிழினாலாகிய மென்மலர் மாலைகளைப் புனைந்தருளிப், பக்கத்தேயுள்ள தண்ணிய துறைகளையுடைய நீர் பொருந்திய தலங்களிலும் ஒப்பற்ற விடையினையுடைய சிவபெருமா னெனவே அவர் மேவியுறையும் தானங்களைக் கும்பிட்டுக் கிழக்குத் திசையின்மேல், தாமரைத் தடங்களாற் சூழப்பட்ட நிவாநதியின் கரைவழியாகப் போவாராகி, 155 1421.(இ-ள்.) வெளிப்படை. குறைதலில்லாத சிறப்பினையுடைய தில்லையம்பலத்தில் அருட் கூத்தினை ஆடுகின்ற கங்கையாறு புடையில் பரவும் மலர் பொருந்திய சடையினையுடையவராகிய பெருமானது திருவடிகளை வணங்கி, ஊனாலும் உயிராலும் உள்ள பயனைப்பெறவெண்ணியவராய்த் தேன் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்புலியூரின் பக்கத்தில் அணைந்தனர். 156 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1419. (வி-ரை.) பாங்காகச் செய்து என்று கூட்டுக. பாங்கு ஆகுதல் திருவடிக்கு ஏற்குமாறு ஆதல். பாங்கு - விதி - முறை - என்றலுமாம். திருத்தொண்டு - சொன்மாலை சாத்துதலும் கைத் திருத்தொண்டுமாம். பயின்று - இடைவிடாது பல காலமும் செய்தல் குறித்தது. பயின்று - செய்து. அமர்தல் - விரும்பி யிருத்தல். இந்நாட்களில் நாயனார் அருளிய பதிகங்கள் கிடைத்தில!. நாள் - பணிந்து - புனைந்தருளிக் - கும்பிட்டுப் - போதுவார் (1420) - நினைந்து - அணைந்தார் (1421) என மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. கானப் பூமணம் கமழும் என்க. இவை நிவா ஆறு கானங்களினின்றும் அடித்துக் கொண்டுவரும் பூக்கள். பூக்கள் கானம்போல மணம் வீசும் என்றலுமாம். "கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல், அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை" என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமுங், "கோடுயர் கோங்கலர் வேங்கையலர் மிகவுந் திருவந் நிவவின் கரைமேல்" என்ற நம்பிகள் தேவாரமும் காண்க. பூங்கானமணம் - பூமணமும் கான மணமும் கமழும் என்று கொண்டு பூக்களின் மணமும், கானின் மணமுடைய அகில், ஏலம், இலவங்கம், மிளகு முதலியனவற்றின் மணமும் கமழ்கின்ற என்றுரைத்தலுமாம். "கல்ாயகிலும்", "கறிமா மிளகும்", "ஏலம் மிலவங்கம்" முதலியனவாக வரும் நம்பிகளது இத்தலத் தேவாரங்கள் காண்க. இப்பொருளுக்குப் பூக்கானமென்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றதென்க. பூங்கானம் - பூச்சோலைகளின் கூட்டம் என்றும் பூங்கொத்துக்கள் என்றும் உரைப்பினும் பொருந்தும். பொருவில் திருவரத்துறை - பொருவில் - ஒப்பற்ற என்றது ஒப்பற்றவராகிய சிவபெருமான் எழுந்தருளியிருத்தல் குறிப்பு. இத்தலத்தில் நாயனார் பாடியருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் "கடவுளை" என்று தொடங்கி "ஒப்பாரியிலாத வெம்மடலுளானை" என்ற தன்மையாற் பெருமானைப் பேசப் புகுந்தமையும், அவ்வாறு ஒப்புமை யாவையுங் கடந்தவராயினும் தன்னை ஒப்பாரில்லாதவராயினும், நாம் தொழுவதற்காக இன்னின்னவற்றை ஒத்தவர் என்று ஒப்புமையும் பதிகமுழுமையும் கூறப்பட்டுள்ள சிறப்பும் காண்க. இச்சிறப்புக் குறிப்புப்பட இங்குப் பொருவில் என்றார். "மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை" |