தலமுற் மெய்யிற் றொழுது - திருவெல்லையை அடைந்தவுடனே திருமேனி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கி. மெய்யில் - உண்மையான என்ற பொருளும் பட நின்றது. மேன்மேல் எழுதரு விழைவு - தில்லையே அணுக அணுக அதனுட்புக்கு ஆனந்த நடங் காணும் ஆசை பெறுகிற்று. "ஆசையும் பொங்கி மேன்மேன், மேவிய நெஞ்சும் வேறொர் விருப்புற விரையா நிற்கும்" (746) என்றது காண்க. காவிற் களிமயில் எதிரெதிராட - வாவித் தடமலர் வதனம் பொலிவுறும் - தன்மை நவிற்சியும் தற்குறிப்பேற்றமும் கலந்த அணிநயம் காண்க. பூஞ்சோலைகளும் அவற்றில் மயில்களும் தாமரைத் தடங்களும் வயல்களுமாக உள்ள மருதநிலப் பண்பு மிகுந்த நாட்டியல்பு குறித்தது. மயில் கார்கண்டு களிக்கு மியல்புடையதாதலின் "இருள்படப் பொதுளிய" சோலையிற் களித்து ஆடின என்க. மலர் முகம் - உருவகம். வதனம் பொலிவுறும் - சினைவினை முதலொடு செறிந்தது. மயில்கள் ஆட, மருதமாகிய மகள் கண்டு தாமரையாகிய முகத்தால் பொலிவு காட்டிற்று என்க. பண்ணை என்பது பணை என நின்றது. இந்த மருத நிலத்தின் இயற்கையழகினை மேல் வரும் பாட்டில் மேலும் விரிப்பதும் காண்க. யாப்பு - இதுவரை கொச்சகக் கலிப்பாவாகிய நாற்சீர்ச் செய்யுளால் யாத்துச் சரிதம் சொல்லிப்போந்த ஆசிரியர், தில்லையிற் றிருமுன்பு அடையும் செலவு வரை கூறும் இப்பகுதியைச் சந்த விருத்தமாய் எழுசீர்க்கழிநெடில் விருத்தத்தில் யாத்த அமைதி காண்க. இதுபோலவே ஆளுடைய நம்பிகளதும், ஆளுடைய பிள்ளையாரதும் தில்லைவழிச் செலவினை, முன் சொல்லிவந்த கொச்சகக் கலிப்பாவினின்றும், மாற்றி முறையே எண்சீர், அறுசீர்க் கழிநெடில் விருத்தங்களால் யாத்த கருத்தும் காண்க. சைவத் திருமரபில், தில்லையிற் சென்று சேர்தல், தனிச் சிறப்புடையது என்று நாம் காணக் காட்டுதற்கு வேறு யாப்பினால் யாத்தனர். பொருள் வேறு காட்டச் சொல்லமைதியும் வேறு காட்டுதல் ஆசிரியரது மரபு. நாற்சீரினின்றும் எழுசீர் வருகின்றது; சரியையாதி நாற்சீரினின்றொழுகினோர் ஞானங்கடந்து மோனமுங் கடந்து நிற்கும் ஆனந்த நிலையில் வரும்போது மேல் எழுகின்றனரன்றோ? ஆளுடைய நம்பிகள் சரிதத்தில், "அரம்பையர்தங் கீதவொலி யறாத்தில்லை மருங்கணைந்தார்" (237) என்றதற்கு மேல் "தேம லங்கலணி மாமணி மார்பிற் செம்ம லங்கயல்கள் செங்கம லத்திண்" (238) எனவும் ஆளுடையபிள்ளையார் சரிதத்தினுள் "தேவர்கடம் பெருந்தேவர் திருத்தில்லை வழிச்செல்வார்" (2042) என்றதனை மேல் தொடர்ந்து "நள்ளி ருட் கணின் றாடுவா ருறைபதி நடுவுகண் டனபோற்றி" (2043) எனவும் யாத்த சொற் பொருளமைதிகள் இங்குக் கருதத்தக்கன. விரைவோடும் - களியளி - என்பனவும் பாடங்கள். 157 1423. | முருகிற் செறியிதழ் முளரிப் படுகரின் முதுமே திகள்புது மலர்மேயும் அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை யளவிற் பெருகிட வளரிக்குப் பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன பெரியோ ரவர்திரு வடிவைக்கண் டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன வெனமுன் புளவள வயலெங்கும். |
158 (இ-ள்.) முருகில்....அருகில் - மணமுடைய நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலர்களுள்ள பள்ளங்களில் முதிய எருமைகள் புதிய மலர்களை மேய் |