மன்பர்; தத்தமிற் கூடி னார்க டலையினால் வணங் மாபோல்" (72), "அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள்" (71) முதலியவை பார்க்க. வளவயலெங்கும் பொழிவன எனத் தரளஞ்சொரிவன உள என்று கூட்டி அதற்கேற்ப உரைப்பதுமொன்று. வளவயல் எங்கும் - வளம் பொருந்திய - நன்கு உழுது எரு முதலியன இட்டுவளமாக்கப்பட்ட - வயல்களில் கரும்பு விளைவன. கரும்புகளைக் கூறவே, நெற்பயிர் தாமே இன்றியமையாது பெறப்படுதலின், விரித்துக் கூறாது, "அயனெற்பணைவய லவைபிற் படும்வகை" என்று மேல்வரும் பாட்டிற் குறிப்பினால் அவற்றி திருப்புக்கூறி மேற் சென்றமை காண்க. "நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்" என்பதும் காண்க. 158 1424. | அறிவிற் பெரியவ ரயனெற் பணைவய லவைபிற் படும்வகை யணைகின்றார் "பிறவிப் பகைநெறி விடுவீ! ரிருவினை பெருகித் தொடர்பிணி யுறுபாசம் பறிவுற் றிடவணை யுமி!"னென் றிருபுடை பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ் செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு திருநந் தனவன மெதிர்கண்டார். |
159 (இ-ள்.) அறிவிற் பெரியவர்......அணைகின்றார் - அறிவினார் பெரியோராகிய திருநாவுக்கரசு நாயனார், அயலிலுள்ள நெல்வயல்கள் பின்னாகும்படி கடந்து முன்சென்று வந்து அணைகின்றாராய்; "பிறவி.....அணையுமின்!" என்று - பகையாகிய பிறவி சேரும் நெறிகளை விடுவீர்! இருவினைகள் பெருகித் தொடர்ந்து பிணிக்கும் பாசம் நீங்கும்படி இங்கு அணையுங்கள்! என்று; சூழ்சினைமிசைப் பயில் குயில் கூவும் - சூழ்ந்த மரக்கிளைகளின் மேலே பயின்ற குயில்கள் கூவுதற் கிடமாகிய; செறிவில் .....திருநந்தனவனம் - பல மரங்கள் நெருங்கி நிலைத்து அழகாக விளங்கும் திருநந்தன வனங்களை; எதிர்கண்டார் - எதிரில் கண்டனர். (வி-ரை.) பெரியவர் - அணைகின்றார் - எதிர் - குயில் கூவும் - நந்தனவனம் - கண்டார் - என்று கூட்டியுரைத்துக் கொள்க. அறிவிற் பெரியவர் - முன் பாட்டில் கண்டார் கசிந்து உருகும் திருவடிவிற் பெரியவர் என்றார்; வடிவினால் மட்டுமேயன்றி அவ்வடிவுக்குள் விளங்கும் அறிவினாலும் பெரியவர் என்றபடி. அறிவு - இங்குச் சிவஞானம் குறித்தது. அயல் நெற்பணை - முன் சொல்லிய கரும்புகளுக்குப் பக்கத்தில் உள்ள நெல்வயல்கள். வெளிப்புறத்தினின்றும் தில்லை காணவருவார் காணும் அமைப்புக்கள் அவ்வரிசையில் ஒவ்வொன்றாகக் கூறப்பட்டன. முதலில் திருவெல்லையும், பின்னர்ச் சோலைகளும் புறத்தில் உள்ள வாவிகளும், (1422), அவற்றினை அடுத்துப் படுகர்களும், கரும்புப் பயிர்செய் நிலங்களும் (1423), பின்னர் நெல்வயல்களும், பின்னர் நகரினை அடுத்து நந்தனவனங்களும் (1424) (1425), அவற்றின் பின்னர் நகர எல்லை மதிலும் மதில்வாயிலும் (1426), பின்னர்த் திருவீதிகளும் (1427), பின்னர்க் கோபுரமும் கோபுர வாய்தலும் (1429) என இவ்வாறு கண்டுகொள்க. அவை பிற்படும்வகை அணைதலாவது - கடந்து செல்லுதல். பிற்படும்வகை என்ற இலேசினால் அவற்றின் மேன் மனம் வைக்காது என்ற குறிப்பும் காண்க. நந்தனவனம் கண்டார் என்ற குறிப்புமது. |