பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்225

 

முன்அருள் கூரும் நெஞ்சு - என்றது தொழுதற்குக் காரணங் காட்டியபடி, முன்னமே அருளுடைய நெஞ்சமுடைய அன்பர்களே சிவமொழி கேட்டபோது உள் உருகிப்பணிகுவர். நாயகனது பெயர் கேட்டமாத்திரத்தால் மகிழ்தலும் மனமுருகுதலும் அன்புமீக்கூர்தலும் உத்தம நாயகியின் இலக்கணமாம். "இனம், பிறையாளன் றிருநாம மெனக் கொருகாற் பேசாயே" என்று கிளியை உபசரித்து நாயகி கேட்கும் கூற்றாக வரும் ஆளுடைய பிள்ளையாரது திருத்தோணிபுரத் தேவாரக் கருத்துக் காண்க. "ஏரா ரிளங்கிளியே யெங்கள் பெருந்துறைக் கோன் - சீரார் திருநாமந் தேர்ந்துரையாய்" (தசாங்கம்) என்ற திருவாசகமும் கருதுக. முன்னைத் தவத்தால் பக்குவமடைந்த நெஞ்சில்லாதார்பால் இந்நிகழ்ச்சிகள் உளவாகா. அவர் இதன் உண்மையை உணர வலியிலர் என்க. அருள் வரையறையின்றி எல்லாவுயிர்களின் மேலும் பரந்து செல்லும் இரக்கம்.

பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் - நெஞ்சினுள் முன்னமே கூர்ந்திருந்த அருளானது சிவமொழிகளை அக்கிளிகளும் சிறு பூவையும் பகரக் கேட்டலும் அக்கேள்வியானது மகிழ்ச்சியினையும் காதலையும் மேலும் நிறைவாகிய பெரிய அன்பினையும் விளைத்தன. இவை வெவ்வேறாகிய இன்ப வுணர்ச்சியுடைய மன நிலைகள். நிறை - முன் நிறைந்திருந்த. நிறைவாக்கிய என்றலுமாம். அன்பொடும் - அன்புமாகிய இவற்றொடும். உம்மை தொக்கது. மகிழ்வும் காதலும் நிறைந்த என்றுகூட்டி உரைத்தலுமாம். "களித்துக் கலந்த தோர் காதற் கசிவொடு" (திருவையாறு - திருவிருத்தம்) என்ற நாயனாரது தேவாரங் காண்க. பெருகிய - இம் மனநிலைகள் முன்னிருந்தவையே இக்கேள்வியாற் பெருகினவன்றிப் புதிதாய் உண்டாயினவல்ல என்பது. அதற்குக் கிளி - பூவைகளின் மொழியினினையும் துணைசெய்தன என்க.

உரை தடுமாற - உரை, குழறி. இது மிக்க அன்பினால் விளையும் மெய்ப்பாடுகளுள் ஒன்று. இதுபோலக் கண்ணீர் பெருகுதல் - விம்முதல் - மயிர்க்கூச்செறிதல் முதலாயினவும் அன்பின் மெய்ப்பாடுகள். உரை தடுமாறியதால் தாமும் எதிர் சிவமொழிகளைச் சொல்லலாற்றாதவராய் என்பதும் குறிப்பு. "ஈறின்றி எழுந்திருவாசகமும்" (1342), "பதிகச் செஞ்சொன் மேயசெவ் வாயும்" (1405) என்றபடி எப்பொழுதும் இறைவனைத் தமிழாற் பாடிவரும் நாயனார் அதுதானும் செய்யவியலாது மேற்சென்றனர் என்பதாம்.

செஞ்சொல் திருமறைமொழி அந்தணர் - தில்லைவா ழந்தணர்கள். "கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்", அந்தணர் பிரியாத", "சீலத்தார்" என்பன முதலாக ஆளுடைய பிள்ளையாரும், "தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்று", "பெருமையார்" என்பன முதலாக ஆளுடைய பிள்ளையாரும், "தில்லைவா ழணந்தணர்தம் மடியார்க்கு மடியேன்", " என்பன முதலாக ஆளுடைய நம்பிகளும் போற்றிய சிறப்புக்கள் காண்க. செஞ்சொற் றிருமறை - வேதங்கள். மொழிதல் - இடைவிடாது பயிலுதல்.

தில்லைத் திருநக ரெல்லை - இங்குக் கூறியது உள் நகரின் எல்லை. முன் 1422-ல் கூறிய திருஎல்லை என்பது வேறு. அது புறநகரின் எல்லை. உள்நக ரெல்லையில் மதிலும் மதில் வாயிலுமுள்ளன.

குடதிசை மணி வாயிற்புறம் - நாயனார் திருமுதுகுன்றத்தினின்றும் புறப்பட்டு இடையிற் கூடலையாற்றூர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு நிவாநதியின் கரைவழியே திருப்புலியூரை நோக்கி மேற்கிலிருந்து வருகின்றாராதலின் மேலை வாயில் வழிச்சேர்ந்தனர் என்பது. இவ்வாறே நம்பிகள் "தில்லையூர் விளங்கு திருவாயில்க ணான்கின் உத்த ரத்திசை வாயின்முன் எய்தி"னார் (243) என்பதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. தெற்கினின்றும் சீகாழியினின்று போந்து சார்ந்த