பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்235

 

களின் முகமாகத் திரும்பும் நிலை. கருணையின் அருள்பெற்றிட என்றது அந்நிலையினில் தாம் பெறும் பேற்றின் பகுதி. ஆனந்த மெய்த்தன்மை என்றது அந்தப் பேற்றினால் உளதாகும் உண்மை நிறைந்த உள்ளநிகழ்ச்சி. "அருள் வித்திட்டுக் கருணை நீர் பாய்ச்சி" என்றது காண்க.

இங்கு இவ்வாறன்றி, ஏகனாகி யிறைபணி நின்று தொழுதலால் இறைவரது தம்மையாகிய சச்சிதானந்தத் தன்மை விளங்கிற்று; அங்ஙனம் விளங்கப்பெற்று நின்ற நிலையில் திருவிருத்தம் பாடினர்; "எனதுரை தனதுரையாக" என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்குக் காண்க: என்பது திரு. சா. பெரியசாமி பிள்ளையவர்களுடைய குறிப்பு.

விருத்தத் திருமொழி - திருவிருத்தம் என்ற யாப்பில் அமைந்த திருப்பதிகம்.

மேன்மேலும் சித்தம் பெருகிய பரிவு - அப்பதிகம் பாடியும் அமைவுபடாது திருவுள்ளத்தில் எழுந்த அன்புப் பெருக்கினால்.

திருநேரிசை மொழி - திருநேரிசை என்ற யாப்பில் அமைந்த திருப்பதிகம்.

பகர்கின்றார் - என்று - எடுத்து - என்று - போற்றி நின்றே - பாடி - பணிந்து போந்தார் - என்று மேலவரும் பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.

168

1434. (வி-ரை.) பத்தனாய்ப் பாட மாட்டேன் - இது அத்திருப்பதிகத்தின் தொடக்கம்.

பண்ணால் - திருநேரிசைக்குரிய பண் பொருந்த. அது கொல்லிப் பண் என்ப. "நேரிசையாங் கொல்லிக்கு", "அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு" என்ற இது அத்திருப்பதிக முற்பாட்டின் முடிபும் பதிகக் கருத்துமாம்.

இத்திறம் - இந்தப் பொருட் கருத்துப்பட. கைத்திருத் தொண்டு செய்யும் காதலில் - அன்புப் பெருக்கிற் றிருப்பதிகம் பாடிய தன்மையினால் மனம் அமைவுபடாது கைத்தொண்டு செய்யும் காதல் எழுந்தது. முன்னர் மனமும் வாக்கும் பணி செய்தன; ஏனைய உடலும் பணிசெய்து பயனடைய வேண்டும் என்று கொள்வது சைவ மரபு. சிவபூசை விதிகளில் உட்பூசையினை முடித்தபின் புறப்பூசையிற் புகும்போது "இறைவரே! இதுவரை உட்பூசை செய்தேன். அவற்றால் உட்கரணங்கள் சுத்தமாயின. அதனால் மனம் அமைதிப்படவில்லை. எனது புறக்கருவிகள் தூய்மையாகிய பயன்படும்படி புறப்பூசை செய்யப் புகுகின்றேன்"

காதல் என்பது மிக்க ஆர்வம். கைத்திருத்தொண்டு - உழவாரத் திருப்பணி. இதனை மேல்வரும் பாட்டில் விரிக்கின்றார்.

போந்தார் - வெளியில் புகுந்தனர்.

169

I திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம் - கோயில்

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்க டில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இறைவரது ஆனந்த அருட்கூத்தில் திளைத்து மகிழ்தலும், மீக் கூர்ந்து ஆனந்தித்து அந்த அருட்கூத்தினைப் பலப்படப் பாராட்டுதலுமாம்,