| பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே! பரம யோகீ! எத்தினாற் பத்தி செய்கேன்; என்னைநீ யிகழ வேண்டா; முத்தனே! முதல்வா! தில்லை யம்பலத்தாடு கின்ற அத்தா!வுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே! 1 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- பத்தனாய்ப் பாடமாட்டேன்; ஆயினும் என் அத்தனே! உனது திருநடனத்தைக் காண்பதற்கு அடியேன் வந்த ஆறு தான் என்னே? எனது சிந்தையைத் திகைப்பியாது தூய்மைசெய்து நினைக்குமாறு நினைப்பித்தருளாய்! அடிமை செய்ய அருளிச் செய்வாய்! என்பது. இக்கருத்தை "என்று இத்திறம் போற்றி நின்றே" (1434) என்றருளினர் ஆசிரியர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பத்தனாய் - பத்தியுடையவனாய்; அன்பு நிறைவினால்; பாடமாட்டேன் - பாடனாயினும்; எத்தினால் - எதனால்; எத்துணை கொண்டு. வந்தவாறே - வந்தபடிதானென்னே! அறிவீனம்? என்ன தகுதி? 2, 6, 7, 8 பாட்டுக்களிலும் இவ்வாறே கொள்க. முத்தன் - இயல்பாகவே பாசங்களினீங்கியவன். (2) திருத்தம் ஆம் - உலகுயிர்களுக்குத் திருத்தத்தை ஆக்கும்.- (3) ஆடுமாற்றை அறிந்தார்பாற் கேட்டிலேன்; கிளை - தீவினைச் சுற்றம். நடுப்பட - மனத்தினடுவுள் நீங்காது - பிறழாது.- (4) செறிவு - மிக்க நெருக்கம். செந்தீ என்பது எதுகை நோக்கிச் செந்தி என நின்றது. அலசுதல் - வருந்துதல். அலசுங்கொல்லோ? - வருந்துமோ - வருந்தாதோ என்றபடி. இடையறாது அனாதி தொடங்கி மாறாது நித்தியமாய் நடைபெறுங் கூத்தாதலின் திரு அடியிணை வருந்துமோ? வருந்தாதோ என்று தாம் வருந்துகின்ற கருத்து. கான்மறியாடிய திருவிளையாடலுள் பாண்டியனது கருத்தை இங்கு வைத்துக் காண்க.- (5) குறிப்பினாலே - உனது அருட்குறிப்பு மறைவாகக் கருணைசெய்து கூட்டி வைத்ததனாலே; அருட்குறிப்பிற் குறிவைத்ததனாலே, "கொண்டவன் குறிப்பி னாலே - கூப்பினான் றாப ரத்தை" (ஆபபாடி - திருநேரிசை - 4). குறிப்பினாலே - வண்டு பண்பாடும் என்று கூட்டியுரைப்பினு மமையும். வண்டு திருவருட்குறியைக் குறிப்பாலுணர்த்திப் பண்பாடுதல் "குனிப்புடையானுக்கே சென்றூதாய்" என்பது முதலிய திருவாசகப் (திருக்கோத்தும்பி) பகுதிகளாலும், "தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்றுமுரல் கின்றன கண்டு" (242) என்றதனாலும் கருதுக.- (7) புறமலா அடிமை - அகம்படித் தொண்டு. புறம்பல்லாத. வையகந்தன்னின் மிக்க - "உலகுக் கெல்லாந் திருவுடை."- (8) மனத்தினார் - ஆர் விகுதி இகழ்ச்சிக் குறிப்பு. கனைப்பர் - வேட்கை மிக்குச் செல்வர். இலயம் - "கூடிய விலயஞ் சதிபிழை யாமை"; கூத்தின் ஒன்றிக்கை.-(9) நினைக்குமா நினைப்பியாதே - நீ நினைத்தாலன்றி நான் நினைக்குமாற்றல் நினைக்க வொண்ணாது. "நுகருமா நுகரே", "விளம்புமா விளம்பே" முதலிய திருவிசைப் பாக்கள் கருதுக.- (10) விண்ணுண்ட - விண்ணினையும் கடந்து செல்லும். 1435. | நீடிய மணியின் சோதி நிறைதிரு முன்றின் மாடும், ஆடுயர் கொடிசூழ் பொற்றே ரணிதிரு வீதி யுள்ளுங், |
|