1439. | மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்கு நீங்கி, நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில், "நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளு மம்பலத்து நிருத்த னாரைத் தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ?" வெனப்பாடித், தில்லை சார்ந்தார். |
174 (இ-ள்.) சினம் விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து - கோபமுடைய இடப ஏற்றினை ஊர்ந்து ஏறும் மணவாள நம்பியாகிய இறைவருடைய பாதங்களைச் சென்று வணங்கி; ‘வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே! என்கின்றாள்' என்று - அழகிய பவளம் போன்ற வாயினைத் திறந்து வானவர்களுக்கும் தானவனாகியவரே! என்று சொல்கின்றாள் என்று; அனைய திருப்பதிகமுடன் - அத்தகையதாகிய திருப்பதிகத்துடனே; அன்பு உறு வண் தமிழ் பாடி - அன்பு பொருந்தும் வன்மையுடைய தமிழ் மாலைகளைப் பாடி; அங்கு வைகி - அத்தலத்திற் றங்கி; நினைவு அரியார் தமைப்போற்றி - நினைப்பதற்கும் அரியவராகிய சிவபெருமானைத் துதித்து; திருநீடு புலியூரை நினைந்து மீள்வார் - திருநீடுகின்ற புலியூரை நினைந்துகொண்டு மீள்வாராகி, 173 1439. (இ-ள்.) மனைப்படைப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப்பாலை மருங்கு நீங்கி - மனைகளின் முற்றங்களில் கடலலைகள் சங்குகளைச் சொரிகின்ற திருக்கழிப்பாலையினை நீங்கி; நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழிக்கொண்டு நண்ணும் போதில் - அரும்புகளையுடைய கொம்புகளோடு கூடிய குளிர்ந்த புன்னைகளடர்ந்த சோலைகளின் வழியாகச்சென்று அணைகின்ற பொழுதில்; "நினைப்பவர்தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுதும் மறந்து உய்வனோ? " எனப்பாடி - நினைப்பவர்களுடைய மனத்தையே கோயிலாகக் கொண்டு வீற்றிருந்து அருள் புரியும் திருவம்பலக்கூத்தரைச் சிறிதுபோதும் மறந்தால் நான் உய்வேனோ? என்ற கருத்துடைய திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டே; தில்லைசார்ந்தார் - திருத்தில்லையைச் சேர்ந்தனர். 174 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1438. (வி-ரை.) சினவிடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் - "நெடுந்தெருவே வந்ததெனது நெஞ்சங் கொண்டார் - வேண்டு நடைநடக்கும் வெள்ளேறு ஏறி" (தாண் - வெண்காடு - 1) என்படி விடையினை ஊர்ந்து தெருவே வந்து நாயகனாகி உள்ளத்தைக் கவர்ந்து சென்ற அகப்பொருட்டுறையில் பதிகம் பாடியருள்கின்றாராதலின் ஆசிரியர் இவ்வாறு விடையினை வைத்துத் தொடங்கியதுடன், மணவாள நம்பி என்ற தன்மையாற் குறித்தருளினர். "பழியிலான் புகழுடையன் பானீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்" என்று இப்பதிகத்துட் கூறுதலும் காண்க. வள பவள வாய் ...... என்று - இது திருப்பதிகத்தின் தொடக்கமும் பதிகக் குறிப்புமாம். அனைய திருப்பதிகம் - அன்னவாகிய பல கருத்துக்களைப் பதிகமுழுதும் கூறிய பதிகம். திருப்பதிகமுடன் அன்புறு வண் தமிழ்பாடி - நாயனார் திருக்கழிப்பாலையில் வைகிய நாட்களில் இவ்வாறாக அருளிய பதிகங்கள் பலவாம். அவற்றுள் திருத் |