பக்கம் எண் :


246திருத்தொண்டர் புராணம்

 

குத், தாதி யாவனானென்னுமென் றையலே" (குறுந்தொகை) என்று இவ்வாறே கொண்ட அகப்பொருட்டுறையுள் வைத்த திருவாக்கினையும் இங்கு ஒப்பிடுக. -(3) மொழி - மொழியுடையவள். கூறிய - கூறியவற்றை. -(4) மதிக்கிலள் ஆரையும் - உத்தம நாயகிகள் தம் நாயகரையன்றிப் பிறரை மதியார்; சிவனுக்காட்பட்ட அன்பர் தன்மையுமிதுவே. -(5) அருத்தி - ஆசை; மிக்க அன்பு; ஊசலதாடுமே - மனம் அங்குத் தலைவனைக் காணச் செல்ல இழுக்க, பிறர்காணில் நகைப்பர் என்ற உலகச்சொல் இங்கு இழுக்க ஊசலாடுதல். -(6) கங்கை - நங்கை - இருவரையும் உடனே வைத்தவராதலின் என்னையும் உடன் வைப்பர் என்றது கருத்து. -(10) - அஞ்சும் நான்கும் ஒன்றும் - பத்துத் தலைகளையும். துஞ்சும் போதும் - பிரிவினால் உயிர்போந் தறுவாயுள் நிற்குநிலைக் குறிப்பு.

II திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையி லனலும் வைத்தா; ரானையி னுரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஞானத்தை நவில - இறைவனை நவில்வதே ஞானத்தின் குறிக்கோள். தாமரை - இறைவனது திருவடிவங்களில் தாமரையைக் கையிற் கொண்டவையும் உள. தாமரை போன்ற திருவடிகளை என் உள்ளத்தினுள் என்றலுமாம். நங்கை - கங்கை - குறுந்தொகை 6-ம் பாட்டுப் பார்க்க. -(2) பத்தர்கள் பயில - "சிவபத்தர்களோ டிணங்குக" என்பது சிவஞான 12-ம் சூத்திரம், இரண்டாம் அதிகரணம். பயிலுதல் - கூடியிருத்தல். இணங்குதல். கண்ணினை நெற்றி வைத்தார் - "விழியுலாம் பெருந்தடங்கண்" (காந்தாரப்பதிகம்) என்ற குறிப்பு. -(3) வாமன் - வாமனனாய் வந்த விட்டுணு திருமாணிகுழியிற் பூசித்தனர். சோதியுட் சோதி - "அருக்கனிற் சோதி யமைத்தோன்", "மாவேறு சோதி" திருவாசகம். சிவபூசையில் சூரிய மண்டலத்துள் விளங்கும் சதாசிவ மூர்த்தியைச் சூரிய பூசையில் வணங்குதல் காண்க. ஆமனை - ஆ - மன் - ஐ = ஆனைந்து. பாசம் - கட்டும் தன்மை குறித்து நின்றது. -(5) ஆரிருள் அண்டம் - "அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர், உண்டு போலுமோ ரொண்சுடர்" (6) நட்டங்கு நடம் - நட்டு - உயிர்களுக்கு இரங்கி. நானம் - ஞானம். -(7) ஊனப்பேர் - பசு. பாசத்தாற் கட்டுண்டது என்ற பெயர். நடு - குறிக்கோள். நிலைத்த இன்பம். வானப் பேராறு - கங்கை. ஆறு - வழி என்று கொண்டு, உயிர்கள் செல்லும் உயர்கதி என்றலுமாம். -(8) அரும்பினும் கொங்கு என்று மாற்றுக. கொங்கு வாசனை. "முகைத்த மலரின் வாசம்போல்" (1218). சங்கீனும் முத்தம் - கட்டினுக்குள் வீடுபேறு என்பது குறிப்பு. கங்குல் - பால் - துன்ப வின்பம். -(9) கதிர் முகம் - பிறைக் கீறு.

III திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்!
பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்
எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம் மிறையவனே.

1

திருச்சிற்றம்பலம்