பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்247

 

பதிகப் பாட்டுக் குறிப்பு :- இத் திருப்பதிகத்தில் மூன்று பாட்டுக்களே கிடைத்துள்ளன. ஏனையவை சிதலரித்தொழிந்தன போலும்!

(1) நெய்தற் குருகு - நெய்தற் பறவை. கைதை மடல் - தாழைப்பூ மடல். பிறை பாம்புடன் வைத்த - பகைப்பொருள்களை ஒருங்கு வைத்ததும் பிறையின் வளர்ச்சிக்கு இடையூறாகியதை அதனுடன் வைத்ததும் குறிப்பு. (2) மணி - பவளம் - முத்து - கடல்படு மணிகள். திரை - கடல் அலை. -(3) நாட்பட் டிருந்து - நீண்டநாள் உலகில் வாழ்ந்து. இன்பமெய்தலுற்று - உலகபோகந் துய்த்து. கோட்பட்டு - கொள்ளப்பட்டு. தாட்பட்ட - நீண்ட தாளினையுடைய. இறைவனது தான்களிற் சூட்டப்படும் தன்மையுடைய என்றலுமாம். வல்லம் - வலிமையுடையோம். வலிமையாவது நமன்றமர்களின் துன்பத்தினின்று நீங்குதல்.

IV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

ஊனுடுத்தி யொன்பது வாசல்வைத்து வொள்ளெலும்பு தேலாவுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாமரை யினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் கழிப்பாலை மேய கபாலப் பனார்
வானிடத்தையூடறுத்துவல்லைச் செல்லும்வழி வைத்தார்க்கவ்வழியேபோ துநாமே.

திருச்சிற்றம்பலம்

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தாமெடுத்த கூரை - உடம்பு. "மாயக்குரம்பை". (3) வல்லைச் செல்லும் வழி - இம்மையும் மறுமையும் தாண்டி வீடடையும் சிவநெறி. கபாலப்பனார் - பிரமன் கபாலத்தைச் கையில் எந்தியவர். ஊழி முதல்வர் என்ற குறிப்பு. "புன்சடைக் கீறு திங்கள் வைத்த வன்கை வைத்தவன் கபால்மிசை, ஊறுசெங் குருதியா னிறைத்த காரணம்" என்ற நாலாயிரப் பிரபந்தமும் (சந்தவிருத்தம்) இக்கருத்தை விளக்குகின்றது காண்க. -(2) முன்னுமாய்ப் பின்னுமாய் - எல்லாப் பொருளுக்கு முன்னுள்ளவன்; பின்னேயுமிருப்பவன். "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (திருவாசகம்). பிணக்கம் - பகைமை. மறையார்ந்த வாய்மொழி - வேதாகமங்கள். -(3) வளி - மூச்சுக்காற்று. -(4) பொடி - திருநீறு. மடிநாறு - மடி - மடிதல்; சாதல். முதனிலைத் தொழிற்பெயர். மடிநாறுதல் - அழியுந் தன்மை விளங்குதல். - (5) இப்பாட்டு ஐயப்பாடு. - (6) விண்ணப்ப - வானுலக வாசகளாகிய. நாயனார் கண்ணப்பரைத் துதிக்கும் இடங்களுள் இது ஒன்று. -(7) பிணம் - பிணத்தன்மை. சாகும் - அழியும் தன்மை. கணம்புல்லன் - அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவர். - (8) இயல்பாய ஈசன் - "ஈசனவ னெவ்வுயிர்க்கு மியல்பானான் சாழலோ" (திருவாசகம்). இயல்பு என்றது ஈசனாந் தன்மை - தலைவனந்தன்மை - எவராலும் தரப்படாது தன்னியல்பானே அமைந்தது என்றதாம். எந்தை தந்தை என்சிந்தை மேவி - வழிவழி சிவனடிமைத் திறத்துள் நின்ற குடிமை. முயல்வான் - உயிர்கள் ஈடேறும்படி ஐந்தொழிலை எஞ்ஞான்றும் இயற்றுபவன். தியம்பகன் - திரியம்பகன் - முக்கண்ணன் - (9) இவ்வுலகமெல்லாங் காட்டுவான் - உலகங்கள் - புவனங்கள் - போகங்கள் முதலாகிய தத்துவங்களின் உண்மைநிலை எல்லாம் காட்டுபவர். ஒதாதெல்லாம் கற்றதோர் நூலினன் - முன்னறிவுடையவன். ஆறஞ்சு - கரதலங்கள் இருபதும் முடிகள் பத்துமாக முப்பது.

1439. (வி-ரை.) மனைப்படப்பு - வீடுகளின் முற்றங்கள். கடற்கொழுந்து - கடலினின்று மேலெழுந்து முன்வரும் அலைகள்.