கன்றும் அரசும் சேர்ந்தார் - உயர்தினைப் பன்மையினை முற்றாற்கூறியது அருமைப்பாடு பற்றி. அன்றே - அப்போதே. இருபெருமக்களும் கூடியபோது தோணியப்பர் கழல்கண்டு தொழுவதனைத் தமது முதற் செயலாகக்கொண்டு அப்போதே செய்தனர் என்பது. அசை என்றொதுவாருமுளர். குணிக்கு குணத்தை உவமிக்கும் சிறப்புத் திருஞான - புரா - 728-ல் காண்க. 185 1451. | பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப் பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு விண்பணிய வோங்குபெரு விமானந் தன்னை வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த வெல்லைச் சண்பைவரு பிள்ளையா "ரப்ப ருங்க டம்பிரா னாரைநீர் பாடீ" ரென்னக், கண்பயிலும் புனல்பொழிய வரசும் வாய்மைக் கலைபயிலு மொழிபொழியக் கசிந்துபாடி, |
186 1452. | பெரியபெரு மாட்டியுடன் றோணி மீது பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் னின்று பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும் "பார்கொண்டு மூடி" யெனும் பதிகம் போற்றி யரியவகை புறம்போந்து, பிள்ளை யார்தந் திருமடத்தி லெழுந்தருளி, யமுது செய்து, மருவியநண் புறுகேண்மை யற்றை நாள்போல் வளர்ந்தோங்க வுடன்பலநாள் வைகு நாளில், |
187 1453. | அத்தன்மை யினிலரசும் பிள்ளை யாரு மளவளா வியமகிழ்ச்சி யளவி லாத சித்தநெகிழ்ச் சியினோடு செல்லு நாளிற் றிருநாவுக் கரசுதிரு வுள்ளந் தன்னில் மைத்தழையு மணிமிடற்றார் பொன்னி நாட்டு மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு விளம்புதலு மவருமது மேவி நேர்வார், |
188 1454. | ஆண்டவர செழுந்தருளக் கோலக் காவை யவரோடுஞ் சென்றிறைஞ்சி யம்பு கொண்டு மீண்டருளி னா; ரவரும் விடைகொண் டிப்பால் வேதநா யகர்விரும்பும் பதிக ளான நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடுதிருக் குறுக்கைதிரு நின்ற யூருங் காண்டகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழறொழுது கலந்து செல்வார், |
189 |