பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்275

 

தென்றும் கூறுவர். "வேலையின் மிதந்த" (259) "கழுமலம்" (259) என்ற விடங்களிலுரைத்தவை பார்க்க. நளிர் - குளிர்ச்சி. கால்கொண்ட - வளர்ந்த. தங்கி என்றலுமாம். வண்கை - கை - செய்கை. வண்மைச் செயல். வள்ளற்றன்மை. கால் - கை - சொல்லணி. ஆளன்றி மற்றுமுண்டோ? - ஓகாரம்எதிர்மறை. உறுதிப்பட்ட உண்மையை எதிர்மறையாலும் வினாவினாலும் குறிப்பது இன்றியமையாமையை வலியுறுத்தற்பொருட்டு. "கற்றதனா லாய பயனென்கொல்" (குறள்); "ஆன்மா வொற்றித்துக் காணினல்லது அவையொன்றையும் விடயியா வாகலான்" (5-1-சிவஞானபோதம்) என்ற விடத்திற்போல. அகலிடம் - உலகில் உள்ளோர். ஆகுபெயர். -(2) கடை - முற்றம். வினைகள் அவை என்க - வினைகள் இகழ்ச்சிப்பட்டு ஒதுங்க. ஆடுவரே - சிவானந்தத்திற்றிளைப்பர். -(3) கடல் குவிந்த முத்துக்களை நுளைச்சியர் வாரிக் கழுமலநாதன் கழலில் வரம்பிலாது பெய்கின்றனர்; அக்கழல்கள் நம்மை நாடொறும் ஆள்வன. நுளைச்சியர் நெய்தனிலப் பெண்கள். நந்தம்மை ஆள்வனவே - இப்பதிகத்துள் 3-4-5-6-8-9-10 பாட்டுக்கள் இந்த மகுடங்கொண்டு முடிவு பெறுகின்றன. இவை வேறு ஒரு தனிப் பதிகத்தைச் சேர்ந்தனவோ? என்பது ஐயப்பாடு. -(4) பதம் - வேதங்கள் பயிலும் ஒரு வகை. வேதங்களும் அவற்றை உட்கொண்ட விழுமிய நூல்களும். உரைக்கில் - எடுத்துச் சொல்லுவோமாகில். கேட்கில் - கேட்போமாகில். உலக முற்றும் இரிக்கும் - உலகங்களை யெல்லாம் அழிக்கக்கூடிய. பறை - ஊழிமுடிவில் சிவன் செய்யும் நடத்தில் சிவபூதங்கள் முழக்கும் பறை ஒலி உலகங்களை அழிக்கவல்லன என்க. பழம்படி ஆடும் - அநாதியாகிய அருட்கூத்து ஆடும். நிருத்தன் என்பதும் பாடம். -(5) நினையாமுன் வினைதீர்க்க வல்லான் - பெருமான் அருள் செய்யும் விரைவு குறித்தது. வெம்மை - விருப்பம். கொந்தளம் - முடிக்கும் வகை. "படாதுஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி" (சிறுத் - புரா - 26) என்றது காண்க. கொன்றளம் - கோன்றளம் என்ற பாடங்களின் பொருத்தம் ஆராயத்தக்கது. கழுமலமே தொழப்படுகின்றது. -(8) உடலும் ... உலகத்துள்ளே - சிவநெறி சென்று சிவபுண்ணியம் செய்து ஈடேறுதற் கமைந்த இந்நில உலகில். "புவனியிற் போய்ப்பிற வாமையி னாணாம் போக்கு கின்றோம் அவமேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்றவாறு" (திருபள்ளியெழுச்சி - 10) என்பது திருவாசகம். -(9) பாவைக்கடல் - ஒரு பொருட் பன்மொழி. பரவு - பரப்பு - என்று கொண்டு பரவுதலையுடைய கடல் என்றலுமாம். -(1) தலையாய்க் கிடந்து - அடிதலை வைத்தவனாய்ப் பணிந்து. அலையா - உறுதியாகிய. தொலையா - தொலைத்து - வருத்தி. தொலைக்காமல் - கொல்லாமல் என்று கூறினும் பொருந்தும்.

II திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இறைவனது பதிவினவில் கழுமலமாகிய பெரும்பதியேயாம். இப்பதிகத்தில் இந்த ஒரு பாசுரமே கிடைத்துள்ளது!

பதிகப் பாட்டுக்குறிப்பு :- படையார் மழு - படையாகப் பொருந்திய மழு. பற்றிய - பற்றுவது இனி நிகழும் செயல். சீகாழியில் தோணிபுரேசர் மானும்