எதிர்கொள் பாடி - காவிரிக்கு வடகரை. 24-வது தலம். பா உறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றி - மேற்கூறிய மயிலாடுதுறை - துருத்தியும் வேள்விக்குடியும் - எதிர்கொள்பாடி என்ற மூன்று தலங்களையும் பாடிப் போற்றி என்க. பரவுறுதலாவது பாக்களின் இலக்கணமும் இசையும் முற்றும் பொருந்துதல். இது நாயனாரது தமிழ் மாலைக்கு இயற்கை யடைமொழி. செந்தமிழ்மாலை - செந்தமிழ்ப் பதிகங்கள். மாலை - சாதியொருமை. பாடிப் போற்றி - பாடுதலாற் போற்றி. பாடியும் போற்றியும் என்றலுமாம். இப்பொருளில் போற்றுதலாவது பாடட்டானன்றித் துதித்தலும், மனத்தாற்றுதித்தலும் உடம்பாற் பணிசெய்து வழிபடலுமாம். பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே - பதிபல - எதிர்கொள் பாடிக்கும் திருக்கோடிகாவுக்கும் இடையிலும் அணிமையிலும் உரள்ளவை. இவை மணஞ்சேரி திருவலம்புரம் திருச்சாய்க்காடு திருவெண்காடு முதலியன. ஆவுறும் அஞ்சு - ஆனைந்து. கோடிகா - காவிரிக்கு வடகரையில் 37-வது தலம். திருஆவடுதுறையுள்ள தென்கரைக்கு எதிரில் உள்ளது. ஆவடு தண்துறை - திருஆவடுதுறை. காவிரிக்குத் தென்கரையில் 36-வது தலம். இப்போது நாயனார் பாடிய திருத்தாண்டகத்துட் போற்றியபடி ஆவடு தண்டுறை என்றார். வரும் பாட்டுப் பார்க்க. தண்மையாவது காவிரியின் செழிப்பாலாகிய நீரின் குளிர்ச்சி மட்டுமேயன்றி இங்குவந்து அடையும் ஆன்மாக்களின் பிறவி வெப்பத்தைத் தணிக்கும் திருவடி நீழலாகிய தண்மையும் குறித்து நின்றது. ஆ - அடு பசுத்தன்மை போக்குகின்ற என்றது பெயர்க்குறிப்பு. சார்ந்தார் - சார்தல் - "சார்புணர்ந்து" குறள். சைவமரபின் சிறப்பாகிய பெருமை காட்டும் சொல். விடையுகைத்தார் - வேள்விக்குடி - பதிபிறவும் - என்பனவும்பாடங்கள். 190 தலக் குறிப்புக்கள் :- திருக்கோலக்கா - இதற்கு நாயனார் பாடியருளிய பதிகம் சிதலரித்தொழிந்தது போலும்! தலவிசேடம் 260- பாட்டின் கீழ்க் காண்க. திருக்கருப்பறியலூர் - நாயனார் பாடியருளிய இத்தலப்பதிகம் கிடைத்திலது! இக்கோயில் "கொகுடிக் கோயில் என்பது நம்பிகள் தேவாரத்துட் கூறப்பட்டது. கொகுடி - முல்லையின் ஒருவகை. சுவாமி - குற்றம்பொறுத்த நாதர். அம்மை - கோல்வளைநாயகி. தீர்த்தம் - இத்திர தீர்த்தம். பதிகம் 2. திருப்புன்கூரும் திருநீடூரும் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதா ரவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத் திறமாய வெத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநா னினையா வாறே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- இந்த இரண்டு தலங்களும் ஒன்றற்கொன்னு அணிமையில் உள்ளன. முன்னாளில் இவையிரண்டுக்கும் செல்லும் நேர்பாதையிருந்தது போலும், இங்குப் புன்கூர் நீடூர் என்று வைப்புமுறைப் படுத்திக்கூறிய ஆசிரியர், பின்னர், ஏயர்கோன்கலிக்காமனார் புராணத்துள் ஆளுடைய நம்பிகள் திருநின்றி |