திருச்செம்பொன்பள்ளி II திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி வானினுள் வான வர்க்கு மறியலா காத வஞ்சர் நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுட் டேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- "திருச்செம்பொன் பள்ளியாரே" என்பது மகுடம். இறைவர் பத்தர்க்குள்ளே தேனும் அமுதமுமானார்; நெஞ்சத்துள் விளக்கு; தெள்ளியார் கள்ளந்தீர்ப்பர்; சிந்தையுட் சிவமதானார்; அன்பருக்கன்பர்; சீலமு நோன்புமாவார்; திரிகாலங்கண்ட வந்தை; நீதியுள்ளார்; பூவான மூன்று முந்நூற்றறுபது மாகும் எந்தை; வேதங்களையும் அங்கங்களையும் அருளியவர்; அவர் திருச்செம்பொன்பள்ளியுள்ளார். பதிகக் பாட்டுக் குறிப்பு :- ஊனினுள் உயிரை வாட்டி - தவம் முதலியவற்றால் அறிவை, வேறு புலன்களின் செல்லாது அடக்கி. உணர்வினார் - இறைவனிடம் உணர்வைச் செலுத்தியவர். எளியர் - வஞ்சர் - அடங்கினார்க்கு எளியராயும், ஆணவத்தால் நிமிர்ந்தார்க்கு அரியராயும் உள்ளார். நானெனில்.....ஞானத்தார் - நான்என்பது அற இறைவன் உணர்வில் ஒடுங்கியவர். - (2) இடிஞ்சில் - விளக்குத்தகழி. நெய்அமர்.......ஆகி - நெய்யும் திரியும் கூட்டி எரியவைப்பின் விளங்கும் விளக்கு. "உடம்பெனு மனையகத்தே" (தனித்திரு நேரிசை - 4) என்ற பாட்டுப் பார்க்க. செய்யவர் - செம்மை தருபவர்.- (3) பள்ளியர் - இருக்கை கொண்டவர்; பஞ்சமம் - ஒருபண்; தெள்ளியார் - அறிவு தெளிந்தோர் - தூயோர். கள்ளம் - உயிரறிவை மறைக்கும் ஆணவம்.- (4) இருக்கு - வேதம். சிந்தையுட் சிவம் - உயிரினுள் உயிராய் விளங்குபவர். விளங்க வெளிப்படும் நிலை குறித்தது - (5) கூறுடை - அம்மையார் பங்குடைய.- (6) ஞாலமும் அறிய - உலகத்தின் உண்மைநிலை. கள்ளம் - பாசக்கட்டு; கோலம் - ஆணவத்தால் - வஞ்சனையால் - மேற்கொள்ளும் உலகநிலையின் வெளிக்கோலங்கள். ஆர்வம்.........நீக்கில் - அகத்தூய்மை செய்தால்; சீலமும் நோன்பும் ஆவார் - சீலத்திலும் நோன்பிலும் வெளிப்படுபவர்- (7) புண்டரீகம் - இதய தாமரை. புரிகாலே நெசஞ் செய்ய இருந்த - புரிதல் - இடைவிடாது சொல்லுதல். நேசம் - அன்பு. இருந்த விரும்பி வீற்றிருக்கும்; மூன்று சந்தி - காலை, நண்பகல், மாலை. "சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச் சகளிசெய்து இறைஞ்சும்" (நம்பிகள்). காலம் - இறந்த காலம் - நிகழ்காலம் - எதிர்காலம். கண்ட - கடந்த.- (8) காருடை - கார்காலத்திற் பூக்கும். நீதியுள்ளார் - - நீதியுள் விளங்குபவர். பதினெட்டுக் கணங்கள் - அசுரர் - அந்தரர் - அமரர் - என்பார் முதல் முனிவர் - விஞ்சையார் - வித்தியாதரர் என்பார் ஈறாக உள்ள கூட்டத்தார். பார் - விண் - மண் - மூவுலகம் இவற்றில் உள்ள கணங்கள் என்றும், கணங்கள் இம்மூவுலகில் என்றும் உரைக்க நின்றது. பார் - கீழுலகம்.- (9) மூவாத பிறப்பிலார் - மூப்பு இல்லாத பிறப்பில் வந்தவர் - தேவர். காணா - எந்தை என்று கூட்டுக. காணா மூவாதாரும் பிறப்பிலாரும் ஆகிய இறைவன் என்றலுமாம். பூவான, மூன்று முந்நூற் றறுபது மான - பூவான மூன்று - மண்டலம் 3; முந்நூற்றறுபது - தீச்சுடர் 108; ஞாயிற்றின் கதிர் 116; மதியின் கலை - 136 ஆக 360. - (10) சங்கம் - சங்கு. |