பக்கம் எண் :


286திருத்தொண்டர் புராணம்

 

II திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கான றாத கடிபொழில் வண்டினந், தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி, தான றாததோர் தன்மையன் காண்மினே.

1

கைகொள் சூலத்தார் கட்டுவாங் கத்தினர், மைகொள் கண்டத்த ராகி யிருசுடர்,
செய்ய மேனிவெண்ணீற்றர் செம்பொன் பள்ளி, யையர்கைய தோரைந்தலைநாகமே.

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- "குறிகளும் அடையாளமும் கோயிலும் நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்" (அரசுகள்) என்றபடி இறைவர் வெளிப்படும் இடம், கோலம், தன்மை, கொள்கை, அடையும் சாதனம் முதலியவற்றைக் கூறுவது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கான் - மணம். பலி அறாததோர் கொள்கையன் - பலி ஏற்றல் ஒரு கொள்கைப்பாலது. "........ஏற்றுக் கிரக்கும்?, நிரந்தரமாக நினையுமடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்தானே" (திருமந்திரம்). - (2) ஆமை - கூர்மாவதாரமாகிய ஆமையின் முதுகு ஓடு. உழிதர்வர்க்கு அன்பும் ஆயிடும் ஆயிழையீர் - பலிக்கு உழல்பவராயினும் அவர்க்கு அன்பு செய்யும் உயிர்களே. நம்பொன் பள்ளி உள்க - தவத்தால் அழகுபடுத்திய நமது மனப்பள்ளியுள் இருக்கும்படி நினைக்க. "கீழ்மையிற் றொடர்ந்து கிடந்தவென் சிந்தைப், பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச், சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி, செந்தை நீயிருக்க விட்டன னெந்தாய்" (கழுமலமும் - கோவை - 4). - (3) வேறு - ஆணும் பெண்ணு மலியும், மற்றும் மக்கள் காண்பன வல்லாத வேறு. கீறு - கிழித்த. தேறல் - பசுபோதத்தால் தெளிதல். - (4) அருவருத்தல் - வெறுத்தல். இருவராய் - தாமும் சத்தியுமாய். "அருளுடன் பலியிடுதல் - ஆணவத்தைப் பலிகொடுத்தல் - "பசுபோதக் கவளமிட", தெருவெலாம் - "நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்" (தேவா), "இத்தெருவே யையாநீ யுலாப்போந்த" (திருவிசைப்பா). - (5) தேவர் சென்றிறைஞ்சும் - விருத்திரனைக் கொல்லும் பொருட்டும் தக்க யாகத்திற் போந்த பழி போக்குதற் பொருட்டும் இந்திரனும், சிருஷ்டியின் பொருட்டுப் பிரமனும், கணவனைப்பெற இரதியும், இன்னும் எட்டுத் திக்குப் பாலகர் முதலியோரும் வழிப்பட்டமை தலவரலாறு. மூவராயும் அவர்க்கு முதல்வராயும். - (6) சலவர் - சலம் - நீர்; கங்கையை வைத்தவர். சலம் சினம் என்று கொண்டு சலவராய் - எய்த - என்று கூட்டியுரைப்பினுமாம்.- (7) கையதோர் ஐந்தலை நாகம் - கையது - கையிற்பிடித்தது கங்கணமாகக் கொண்டது. "ஐந்து கொலாமவ ராடர வின்படம்", "கைக்கொண்டது பாம்பு" (தேவா).- (8) ஆர்த்தவர் - அரையில் கோவணமாகக் கட்டியவர். அங்கணாய் - அடைக்கலமாக. - (9) நன்றிநாரணன் - முடிதேடிக்கண்டேன் என்று பொய் புகன்ற நான்முகன் போலன்றி, அடிதேடிக் காணமாட்டாதபோது, தம்மால் அறியப்படாதவன் என்று கண்டு வந்திரத்தவராதலின் நன்றி என்றார். நான்முகன் என அடைகொடாது கூறிய குறிப்புமது. - (10) திரியும் மும்(மதில்) - அந்தரத்திற் சென்று திரிகின்ற முப்புரம். "எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்றும்" (பிள்யைார்). வலியாரை அனலோட்டினும், நெறியவூன்றினும், அடைந்தார்க்கு அவர் அரிய வானம் (சிவலோகம்) எளிமையில் அருள் செய்வர். சுவாமி பெயர் பதிகத்துக் காணப்படும்.

தலவிசேடம் :- திருச்செம்பொன்பள்ளி - முன்னர்ப் பதிகம் 5-வது பாட்டுக் குறிப்பில் உரைக்கப்பட்டவை பார்க்க. தக்கயாக சங்காரத்தின் பொருட்டு வீரபத்திரர் அவதரித்த தலமென்ப. இறந்தாரெலும்புகள் இங்குக் காவிரியில்