(10) பேணிலாதவர் - பேணாதாரை. பேதுற ஓட்டினோம் - பேதுறும்படி அகற்றிவிட்டோம். "மிண்டு மனத்தவர் போமின்கள்". (திருப்பல்லாண்டு). கடுந்துயர் - இறப்பு.- (11) வினை - பாசம். கட்டறுதல் - வலி நீங்குதல். தலவிசேடம் :- 262-ல் உரைத்தவை பார்க்க. மாயூரத் தலபுராணம் பார்க்க. ஐப்பசி மாதம் அமாவாசையன்று தட்சிணாமூர்த்தி எழுந்தருளி வந்து காவிரியிலே கங்கையை வருவிப்பர் என்ற வரலாறும் கேட்கப்படும். இந்தத் துறை இடபதீர்த்தம் எனப் பெயர்பெறும். துலா மாதம் நீர்மூழ்குதலின் சிறப்புப் பெற்றது. சுவாமி - மாயூரநாதர்; அம்மையார் - அபயாம்பாள்; தீர்த்தம் - காவிரி; பதிகம் 3. திருத்துருத்தியும் வேள்விக்குடியும் :- இவையிரண்டும் ஒரு தலம். இறைவனார் பகலில் துருத்தியிலும் இரவில் வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர் என்பது வரலாறு. இவையிரண்டையும் சேர்த்துப்பாடிய ஆளுடையபிள்ளையார் - நம்பிகள் திருப்பதிகங்கள் பார்க்க. நாயனாரது பதிகம் துருத்திக்கு மட்டில் கிடைத்துள்ளது.திருத்துருத்தி திருச்சிற்றம்பலம் திருநேரிசை | பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா இருத்தியெப் பொழுது நெஞ்சு ளிறைவனை யேத்து மின்கள்; ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையுள் வைத்த துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- துருத்தியில் இறைவனை நான்கண்ட அற்புதந்தான் என்னே? உலக வாழ்வை மெய்யென நினைத்து அதனுள் அழுந்த வேண்டா! அவ்விறைவனை ஏத்துமின்கள் உலகீரே! என இரங்கிக் கூறியருளியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொருத்திய - எலும்புதோல் முதலிய பலவும் இணைத்த. குரம்பை - உடம்பு. "குடம்பை தனித்தொழிய" (குறள்). பொருள் - மெய்ப்பொருள். (2) சவை - பயனற்றவை என்ற பொருளில் வந்தது. மனைவி மக்களது) கூட்டம் என்றலுமாம்.- (3) பொன்னியினடுவு.......துன்னிய துருத்தி என்ற இத்தலப் பெயருக்குக் காரணங் கூறியபடி. துருத்தி - ஆற்றிடைக் குறை. இவ்வாறே பூந்துருத்தி என்றது காண்க. - (4) ஊன்றலை வலியன் - ஊனினால் - உடற்பலத்தால்.- (5) உடல்தனைக் கழிக்கலுற்ற - சாதலைப் பொருந்திய (6) அள்ளல் - சேறு. இங்குப் பிறவிச்சேறு. பொள்ளல் - ஓட்டை. உள்ளீடற்றது என்றலுமாம். புண்டரீகம் - இதயதாமரை. துள்ளல் - பிடிக்க ஒண்ணாது துள்ளித் தப்புபவன். "சுற்றுமின் சூழ்மின் றொடர்மின் விடேன்மின், பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்தும்" (திருவாசகம்).- (8) தூமணற் றுருத்தி - தூயமணல் கொண்ட ஆற்றிடைத் திடரான துருத்தி.- (9) கண்டதே கருதுவார்கள் - காட்சியளவை யொன்றினையே பிரமாணமாகக் கொண்டவர்கள். விண்டவர் - (நன்னெறியின்.) நீங்கியவர்.- (10) பிதற்றுதல் - ஆசை மிகுதியாற் பலவாறும் போற்றுதல். துண்டம் - ஆறு சூழ்ந்த அளவுபட்ட நிலம். தலவிசேடம் :- (1) திருத்துருத்தி - காவிரிக்குத் தென்கரை 37-வது தலம். வேள்விக்குடி - வடகரையில் 23-வதூ தலம். இவையிரண்டுங் காவிரியின் இரு கரையினும் எதிர் எதிர் உள்ளன. துருத்தி - குத்தாலம் என வழங்கப்படும். சிவபிரான் வேள்விக்குடியில் அம்மையாரை மணப்பதன் முன் இங்குப் பிரமசாரி |