பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்289

 

யால் எழுந்தருளியிருந்து வேதமோதினராதலின் உத்தரவேதீசுவரர் எனப்படுவர். தாம் அருளிய வேதத்தை அவ்வாறு தாமே சொன்னமையால் சுவாமி பெயர் சொன்னவாறறிவார் எனப்படும். ஆளுடைய நம்பிகள் (காந்தாரப்பண்) தேவாரத்துள் சொன்னவாறறிவார் துருத்தியார் என்று இப்பெயராற் போற்றியதுகாண்க. ஆளுடைய நம்பிகளது திருமேனியிற் போந்த புதிய பிணி, சிவபெருமானது ஆணையால், வடகுளத்துக் குளித்து நீங்கப்பெற்ற தலம். நம்பிகளது அருமையான திருவுருவம் இக்குளக்கரையில் அருமையாக வைத்து வழிபடப் படுகின்றது. அவரது தேவாரங் காண்க. அம்மையார் - மிருதுமுகிழாம்பிகை; தீர்த்தம் - வடகுளம்; மரம் - குத்தாலம்; பதிகம் - 2.

இது குற்றாலம் (குத்தாலம்) என்னும் இருப்புப்பாதை நிலையத்தினின்றும் வடகிழக்கில் மட்சாலைவழி 3/4 நாழிகையளவில் அடையத்தக்கது.

2. வேள்விக்குடி - நாயனாரது பதிகம் கிடைத்திலது! தலவிசேடம் முன் உரைக்கப்பட்டது. துருத்தியின்றும் வடக்கே ஒருநாழிகை யளவில் காவிரியைக் கடந்து மஞ்சி வாய்க்கால் வடகரை வழியாய்க் கிழக்கே மாயூரம் மட்சாலையில் ஒரு நாழிகை யளவில் அடையத்தக்கது.

திருஎதிர்கொள்பாடி :-நாயனார் அருளிய திருப்பதிகம் கிடைத்திலது!

தலவிசேடம் : காவிரிக்கு வடகரை 24-வது தலம். நம்பிகளது தேவாரமும் பெற்றது. மேலைத்திருமணஞ்சேரி என வழங்கப்பெறும். மணக்கோலத்தோடு வந்த அரசகுமார னொருவனை இறைவர் மாமனார்போலக் காட்டி எதிர்கொண்டு அழைத்துச் சென்றதனால் இப்பெயர் கொண்டதென்பர். ஐராவதம் பூசித்த தலம். சுவாமி - ஐராவதேசுவரர்; அம்மையார் - மலர்க்குழனாயகி; பதிகம் 1.

வேள்விக்குடியினின்றும் வடக்கே கரைவழியாய் ஒன்றரை நாழிகையளவில் அடையத்தக்கது.

திருக்கோடிகா

I திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய்பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கண் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கோடிகாவுடையகோவே, நெற்றி மேற் கண்ணினான் முதலிய பண்புகள் உடையவன். நான் ஐவரால் ஆட்டப்பட்டேன்; மயங்குகின்றேன். ஏழையேன் என் செய்கேன்; அடிமை செய்வேன்; அடியவர்க்கருள் செய்வானே! அமுதொப்பானே! கோவடு குற்றம் தீராய்!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (2) கொடியணி விழவு - கொடியேற்றி விழாத் தொடங்கும் மரபு குறித்தது.- (3) நிழல் - ஒளி. அறம் - உறுதிப்பொருள் நான்கும், ஆகமங்களும்.- (4) ஞாலமாம் பெருமை - உலகமெல்லாம் தமது மாயா சக்தியிற், றோற்றுவித்துத் தாம் அதைக் கடந்து நிற்றல்.- (6) ஏழையேன் - ஏழையேன் - அடுக்கு மிகுதி குறித்தது. மயங்குகின்றேன் - உலகர் பொருட்டுச் செய்த விண்ணப்பம்.- (7) தழல் உமிழ் - விடத்தைக் கக்குகின்ற.- (8) ஆவடு துறையுளானே - இத்தலத்திலிருந்தபடியே காவிரியின் எதிர்க்கரையில் தோன்றும்