பக்கம் எண் :


290திருத்தொண்டர் புராணம்

 

ஆவடுதுறையைக் கருதித் துதித்த குறிப்பு. இக்குறிப்பின்படி நாயனார் அங்குச் சென்று தரிசித்தமை காண்க. ஐவர் - புலன்கள். கோவடுகுற்றம் - புலன்களின் ஆணை வழி அடங்கி நின்ற குற்றம்.- (9) தாவுதல் - ஈர் அடியாலே தாண்டி அளத்தல்.

II திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தான்;
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்;
கொங்கு லாம்பொழிற் கோடிகா வா!வென,
வெங்கி லாததொ ரின்பம்வந் தெய்துமே.


நாடி நாரண னான்முகன் வானவர், தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம், பாடி காவலிற் பட்டுக் கழியுமே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- "கோடிகாவா!" என்று போற்றினால் இணையற்ற இன்பம் வந்தெய்தும். பேற்றாவிடில் பாடிகாவலிற்பட்டுக் கழிதிர்! ஏத்தினால் ஊனமில்லை. ஏதங்கள் தீரும். - இப்பதிகத்துள் மூன்று பாட்டுக்கள் சிதலரித்தொழிந்தன?

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சங்கு - வளை. "எங்கும் இலாதது ஓர் இன்பம்" (திருவா). எங்கும் - முற்றும்மை தொக்கது. - (2) உள்கி ஓடி வாடி வாழ்வது என் ஆவது? என்க. ஒன்றும் பயனின்று. நாடொறும் - இடைநிலைத்தீபம். நாடொறும் வாடி என்றும், நாடொறும் கூறீரேல் என்றும் கூட்டுக. கூறீரேல் - கூறாவிட்டால் - கூறீர் ஆயின். பாடி காவல் - அரசநீதி பிழைத்தாரை வழக்கு நாடி அரசன் நிறுத்தும் தண்டத்தொழில். இதற்கு "நெறியின் வழீஇயினாரை, வழக்கு வினாய், ஒப்ப நாடிச் செய்யும் தண்டத்தொழி லுணர்த்துவதோர் சொல்" என்றுரைத்து, இத்திருப்பாட்டை உதாரணமுங் காட்டினர் எமது மாதவச் சிவஞான முனிவர். "ஒருநகரியைக் காப்பான் பாடிகாவ லிட்டாங்கு அவை அவனதாக்கினை யாகலான்" (சிவஞானபோதம் - 2 சூத். 2 அதி. ஏது). - (3) ஒல்லை - விரைவில். - (4) நாவளம் பெறுமாறு - பழக்கத்தால் நாவளம் பெறும் படி. "நான் மறக்கினுஞ் சொல்லு நா" (தேவா). ஆமளம் - ஆம் அளவும் என்பது ஆமளம் என நின்றது. எனை ஏசும் ஏழை ஏவள் - இறைவரது காதலிற்பட்டுத் தன் சொற்பழித்த மகளை நோக்கித் தாய் கூற்றாகப் பாடியது. "பரிந்துரைக்கிலு மென்சொற் பழிக்குமே" (குறுந் - கழிப்பாலை - 3). கோமளம் - அழகு. கோடிகாவா என - காதல் மிகுதியால் நாயகன் பெயர் சொல்லி. - (5) நும் மால் ஏசப்படுவானோ - தோழியை நோக்கிக் காதல் மிகுந்த தலைவி கூறும் கூற்று. கோடிகாவனை அடைந்து சிலர் வீறுபெறுவர்; ஆகிலும், அவன் கொன்றை நல்கானாயினும், அவன் பெயர் சொல்லி மிக்க மால் கொள்வேன்; அதுபற்றி நீர் ஏசினும் அதனுட்படேன். "உள்ள முள்கி யுரைக்குந் திருப்பெயர்" (மயிலாடுதுறை - குறுந்), "பூதல ராலுன் னடியானென், றேசப் பட்டேன்" (திருவாசகம்), "அவனக்கே பிச்சியானாள்....அகன்றா ளகலிடத்தா ராசா ரத்தை" (திருத்தாண்டகம்). - (10) இரங்குவேன் - மன நையுதல் அடைவேன்.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
         கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கு மருந்து கண்டாய்
         மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்