புரிவுறு - புரிதல். இடைவிடாது செய்தல். சொல்லுதல் என்றலுமாம். இப்பொருட்குப் புரிவுறு தொண்டு, கைத்தொண்டு என்று கூட்டுக. போற்றிச் செய்தல் - மிகவும் பாராட்டிச் சோர்வுபடாது செய்தல். செய்வார் - எய்தி - வணங்கி வைகி - சாத்தி - புனைந்து - போந்து - எய்திச் - சேர்ந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. பரிவுறுநற் றிருத்தொண்டு - என்பதும் பாடம். 191 1457. (வி-ரை.) எறிபுனல் பொன்மணி சிதறும் திரைநீர் - "திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான், முகந்துதர" (1041) என்ற விடத்துரைத்தவை பார்க்க. கீழ்ப்போந்த கொள்ளிடத்தின் தன்மை, மேல் உள்ள காவிரியில் மிக்குக் காணப்படும் என்பது. அன்பினோடு - வணங்கி - என்க. தேவாரக் குறிப்புக்கள் பார்க்க. அன்பினோடு - சென்றெய்தி எனவும், அன்பினோடு -வணங்கி எனவும் இருதலையும் கூட்டி உரைக்க நின்றது. இடைநிலைத் தீபம். வைகி - பலநாள் அத்தலத்திற் றங்கி. மகிழ - தாம் மகிழ்வுறவும், இறைவர் மகிழவும், உலகம் போற்றி யுய்ந்து மகிழ என்றலுமாம். மாலை என்றதற்கேற்பச் சாத்தி என்றார். அரவம் புனைந்தார் - திருநாகேச்சுரம் என்ற தலப்பெயர்க்கேற்ற பொருள் விரித்துக் கூறும் அடைமொழி. அருந்தமிழ்மாலை - மாலை - சாதியொருமை. நாயனாரது திருநேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், வகைக்கு ஒவ்வொன்றாக மூன்று திருப்பதிகங்கள் இப்போது கிடைத்துள்ளன. பழையாறு - பழையாறை - எனவும், ஆறை எனவும் வழங்கப்படும். அமர்நீதி நாயனார் அவதரித்த தலம். அவர்தம் புராணத்தினிறுதியிற் றலவிசேடம் பார்க்க. (பக்கம் 688). செறிவிரை நன் மலர்ச்சோலை - காவிரி நாட்டின் நீர்ச் செழிப்பும் பிறவளங்களும் குறிக்கப்பட்டது. நேரிற் கண்டோர் இதன் உண்மைத் தன்மையினை அறிவர். திருச்சத்திமுற்றம் - தலவிசேடம் பார்க்க. காவிரிக்குத் தென் கரையில் 22-வது தலம். சத்தி முற்றத்தை - என்பதும் பாடம். 192 திருவாவடுதுறை - முதல்முறை தரிசித்தது. I திருச்சிற்றம்பலம் திருத்தாண்டகம் | நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திகழு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை யம்பொன்னை யாவடுதண் டுறையுண் மேய வரனடியே யடிநாயே னடைந்துய்ந்தேனே. |
திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- திருவாவடுதுறை யிறைவரை அடைந்து உய்ந்தேன். "ஆவடுதண் டுறையுண் மேய வரனடியே யடிநாயே னடைந்துய்ந் தேனே" |