பக்கம் எண் :


294திருத்தொண்டர் புராணம்

 

என்ற பதிகப் பாட்டுக்களின் மகுடம் காண்க. இதனை ஆசிரியர், "ஆவடுதண்டுறையாரை அடைந்தே னென்று" எனக்காட்டினர். "அளவில் திருத்தாண்டக" மென்று இப்பதிகச் சிறப்பினைப் போற்றினர்.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) நன்மை - நன்மைக்கெல்லாம் இருப்பிடம். கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ வெல்லாம் கொடுப்பது. - (2) மின்னான் - மின்னினுள் இருந்து ஒளிதருபவன். மின்னிடைச் சேர் உருமினான் - மின்தாக்குதலின் உளதாகும் முழக்கம் - ஓசை. இடி - உரும் - எனப்படும். மின்னினது ஒளியும் ஓசையும் ஒரு காலத்தே ஓரிடத்தே உளவாயினும் ஒளியின் வேகமிகுதியால் மின்ஒளி முன்னர்க் காணப்படும். சிலநேரம் கழித்தபின் இடி கேட்கப்படும். ஆதலின் பின்னர் வைத்தார். மின்இடைச்சேர் - உடன்பாடு எதிர்மறை யென்னுமிருவகைப்பட்ட மின்சாரத் சத்திகள் ஒன்றோடொன்று தாக்குதலால் இடையில் விளையும். வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் - "மின்னுக்கெல்லாம் பின்னுக்குமழை" (பழமொழி). வெண்மழை - "ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும், பெய்யுமாமழைப் பெருவெள்ளம்" (நம்பிகள் - தேவா). தாயாகி - தந்தையாகி - சத்தி - சிவம். - (3) வித்தினை முளைக்கிளையை வேரை - வித்தினின்றும் முன்னர் முளை தோன்றிக் கிளைக்கும்; அதன்பின்பே வேர் தோன்றும்; அம்முறையே வைத்தருளினார். - (4) பேணிய - தம்மை அடைக்கலமாக வந்தடைந்த. பித்தராம் - இறைவனைப் பற்றுதலிற் பித்துக்கொண்டாற் போன்ற அன்புடையவர்களாகிய. "பித்துப், பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரும், மெய்த்தவர்" (சிவஞான போதம்). ஏணி - தான் இருந்தபடியிருந்தும் தன்வழி அடைந்து முயல்பவர் மேல் ஏற உதவுவது. இடர்க்கடல் - துன்பமே நிறைந்த பிறவி. உருவகம். அக்கரை - துன்பங்கலவாத அந்தக்கரை; முத்தி; சிவனுலகு. வாங்கும் - கொண்டு சேர்க்கும். தோணி - நீரினுள் நின்றும் தான் கரையேற வேண்டாது தன்னை அடைந்து முயல்வார் கரையேற உதவுவது. ஏணி - தோணி குறிப்புருவகம். ஆணி - உரையாணி - "தொண்டராணிப் பொன்" (திருவிருத் - ஆரூர்), "தொண்டர்க்காணியெனும் பேறு" (நமிநந்தி - புரா - 31), "ஆணிபோல்.....ஏணிபோலிழிந் தேறியும்.....தோணியாகிய" (குறுந்தொகை - சோற்றுத்துறை - 7).- (5) உதயத்தினுச்சி - தோன்றும் ஒளிப்பொருள்களுக் கெல்லாம் முன் தோன்றுபவன். தித்திப்பு - இனிக்கும் சுவைப்பண்பு. தேன் - கரும்பு - அப்பண்பினையுடைய பொருள்கள்.- (6) எல்லி - இரா. எல்லாவுலகும் சங்கரிக்கப்பட்ட ஊழிகுறித்தது.- (7) கடல் - வரை - வான் - ஆகாசம் - விசுவரூபம். என்புருகும் - எலும்பு - உருக அன்பினால் நையும். "புன்புலால் யாக்கை புரைபுரை கனிய" (திருவாசகம்).- (8) மெய்யானை - மெய்யினுள் நிற்பானை. சத்து ஆயினானை.- (9) வேண்டாமை வேண்டுவது மில்லான் - "வேண்டுதல் வேண்டாமை யிலான்" (குறள்). தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி - இயல்பாய் ஒளியுடைய சோதி. நற்சோதி - தீமை கலவாத சுடர். "மை பொதி விளக்கே யென்ன" (473), நெய்நின் றெரியு நெடுஞ்சுடரே சென்று, மைநின் றெரியும் வகை" (திருமந்திரம் 1 - 106).- (10) கொந்து - கொத்து. செந்தமிழோ டாரியன் - ஆரியன். வடமொழியினுள்ளான். "வடமொழியுந் தென்றமிழு மறைக ணான்கு மானவன்காண்" (சிவபுரம் - தாண்டகம் - 1), "தமிழ்ச்சொலும் வடசொலுந் தாணிழற் சேர" (குறிஞ்சி - பிள்ளையார் - அச்சிறுபாக் - 4), "ஆரியமுந் தமிழும் முடனே சொல்லிக், காரிகை யார்க்குக் கருணைசெய் தானே" (திருமந்திரம் - பாயிரம் - 65).- (11) நீசனே னுடலுறுநோ யான தீர அரித்தான் - உடல் உறுநோய் - உடல் உறுவதற்கான நோய்; முன்வினை. சூலை என்ற சரிதக் குறிப்புமாம். அரித்தான் - போக்கியவன். இஃது அடைந்துய்ந்தேன் என்றதன் காரணம் கூறியவாறு. அடைந்துய்ந்தேன் - இறந்த காலம் உறுதி குறித்தது. அடைந்து - புகலாகச் சேர்ந்து. முன்னர்த் திருமூலதேவ நாயனார் அடைந்து "ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய" மூவாயிரம்ஆண்டு சிவயோகத்