பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்295

 

தமர்ந்து திருமந்திரத்தால் சிவாகமச்பொருளைப் பாடியருளிய கருத்து எழ, அதனைப் பின்பற்றி நானும் அடைந்து என்ற குறிப்பாம். "காலனைக் காலாற், கடந்த காரணங் கண்டுகண் டடியேன்.....அன்பொடு மடைந்தேன்" என்று இவ்வாறே பின்னர் இவற்றைக் கண்டு ஆளுடையநம்பிகள் இங்கு அடைந்தமை அவர்தந் திருவாக்காலறிக. பிறவி தீர்ந்து பசுத்தன்மை நீங்க வேண்டுவோர் அடையுமிடம் ஆவடுதுறையேயாம் என்பது. இப்பெரியார்களைப் பின்பற்றி இக்கருத்தே கடைப்பிடித்துப் பிற்காலத்திற் பட்டினத்துப்பிள்ளை, திருமாளிகைத் தேவர், நமச்சிவாய தேசிகர் முதலிய ஞானமுனிவர்களும் இங்கு வந்தடைந்தமையும் காண்க. ஞானராசதானியாக நமச்சிவாய மூர்த்திகள் வழிவந்த திருமடம் குலவும் பெருமை இன்றும் காணத்தக்கது.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதிமிக்க
உருவேயென்னுறவேயென் னூனே யூனினுள்ளமே யுள்ளத்தினுள்ளேநின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய்!
அருவாய வல்வினைநோ யடையா வண்ண மாவடுதண் டுறையுறையு மமர ரேறே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- பிறவியிடைப்பட்டு அலுத்தேன்; ஆற்றேன்; அமரரேறே! காவாய்; அடியேனை அஞ்சல் என்னாய்! என்பது கருத்து. ஆளுடையநம்பிகள் இரண்டாவது முறை இத்தலத்தில் இறைவரைத் தரிசித்தபோது இவ்வாறே "எனையஞ்சலென் றருளாய்! யாரெனக் குற வமரர்க ளேறே!" என்று பாடியருளியதும் காண்க. "அமரரேறே" என்று நாயனார் இப்பதிகத்துத் துதித்தவாறே "அமரர்களேறே" என நம்பிகள் போற்றியது இத்தலத்து எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானைக் குறிப்பது போலும்!" சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொனே!" என்று அத்திருப்பதிகத்தில் நம்பிகள் துதிப்பதும் காணக். "அஞ்சேலென்னாய்!" என்பதுபற்றி முன் திருத்தாண்டகப் பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) உரு - உறவு - ஊன் - உள்ளம் - கரு - கண் - மணி - பாவை என்பன அருமைப்பாடு குறிப்பன. அன்றியும் "ஊன்கருவினுண்ணின்ற சோதி யானை", "உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்" என்றபடி உடம்புட் கலந்துநின்று இறைவன் உணர்த்தும் முறையினையும் குறிப்பன.- (2) மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவில் - என்பது, நாயனார் திருவைந்தெழுத்தை இடைவிடாது பயிலும் வழக்கினையும், மறவேன் திருவருள்கள் - என்றது அதற்குக் காரணத்தையும், வஞ்சநெஞ்சில் ஏற்றேன் பிறதெய்வம் - என்றது அதன் காரணமான சரிதக் குறிப்பினையும் குறித்தன. செய்யக் கண்டும் - சிறப்பும்மை - தொக்கது.- (3) நின்றனாமம் உரையா உயிர்போகப் பெறுவேனாகில் உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே - இறக்கும்பொழுது சிவபெருமானை நினையவும் சொல்லவும் பெறவேண்டு மென்பது நாயனார் கேட்டும் மிகச் சில வரங்களும் ஒன்று. 1399-வது பாட்டின் "ஈன்றாளுமாய்" என்ற பதிகப்பாட்டுக் குறிப்பில் 8-வது பாட்டுக் குறிப்புப் பார்க்க. (பக் - 175). எந்நோய்கள் வந்தாலும் சாம்போது திருநாமம் சொல்லும் உணர்வு பிறழாதிருப்பின், அவை தீமை திருநாமம் விளைக்கலாற்றா என்பதும், அந்நோய்கள் சாதலைச் செய்துவிடினும், திருநாமம் பிறழாமையால் மறுபிறவியிலும் மறவாமை கைவந்து நன்னெறிப் படுத்தும் என்பதும் கருத்து. "மெய்கலந் தாரொடு மெய்கலந் தான் றன்னைப், பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை, யைகலந் தாவி யெழும்பொழு தண்ணலைக், கைகலந்தார்க்கே கருத்துற லாமே" (8 - 480) என்ற திருமந்திரமும் காண்க. உறுநோய் -