பாட்டின் கருத்து.- (10) நக்கன் - உடைநீத்த உருவினன். நாணிலி - நாணில்லாமையின் நக்கன் என்பாள். IV திருச்சிற்றம்பலம் திருநேரிசை | மஞ்சனே! மணியு மானாய்! மரகதத் திரளு மானாய்! நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே! துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே! |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆவடு துறையுளானே! அஞ்சலென்றருள வே்ணடும்; ஐவர்வந்து கலக்காமைக் காத்துக் கொள்ளாய்! என்னை கைவியா வண்ணம் நல்காய்! பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினான் - இறைவன் உயிர்க்குயிராய் உண்ணின்று காட்டுமுபகாரம் செய்பவன் என்பது. இதுவுன் தன்மையாதலின் துஞ்சும்போது ஆகவந்து துணைசெய்ய வேண்டும். ஏன? வெளியில் உள்ள எவரும் அந்தத் துணை செய்யலாற்றார். உண்ணின்று காட்டும் நீயே, அப்போது உணர்த்தல் வேண்டும் என்பது.- (3) ஒட்டவே ஓட்டி - "ஒட்டிட்ட பண்பின்" (பிள்ளையார் - மயிலை - 1); சிவனோ டத்துவிதமாகக் கலந்து; நீ ஒட்டும்படி நான் ஒட்டி. "(5) ஐவர் - ஐம்பொறிகள். 2-வது பாட்டும் இக்கருத்து. "மாறி நின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்து" (திருவாசகம்); "புள்ளுவ ரைவர் கள்வர்" (தனி - நேரிசை).- (6) கார் அழல் - அழல்போல் வருத்தும் கரிய விடம். செவ்வழல் என்பதியல்பு; ஆனால் இஃது அதற்கு மாறாகக் காரழல் என்றலுமாம்.- (7) குறி குறிக்கோள்.- (8) செய்வினை நைவியா வண்ணம் என்க. நைவித்தல் - வருத்துதல். சந்தவிருத்தங்கள் - இவை இப்போது கிடைத்தில. குறிப்பு :- "மாயிருஞாலம்" என்ற திருநேரிசை பின்னர்ப் பாடப்பட்டது. தலவிசேடம் :- முன்னர் I திருத்தாண்டகப் பாட்டுக் குறிப்பினுள் "அடைந்துய்ந்தேன்" என்றவிடத் துரைத்தவை பார்க்க. மூவர் பதிகப்பாடலும், சேந்தனார் திருவிசைப்பாப் பதிகமும், திருமூலர் திருமந்திரம் 3000-மும் பாடப்பெற்ற தனிச் சிறப்புடையது. திருக்கயிலாயத்தில் இறைவனோடு சொக்கட்டானாடிக் களித்தமையால் உமாதேவியார் பசுவடிவமெய்தினர் என்பதும், இங்குப் பூசித்து அவ்வடிவம் நீங்கப் பெற்றனரென்பதும், அதனால் இப்பெயர் போந்த தென்பதும் தலவரலாறு. இங்குவந்து அடைந்த பசுக்கள் என்னும் எல்லாவுயிர்களுக்கும் பசுத்தன்மையாகிய மலப் பிணிப்பு நீக்கி முத்தியளிக்கும் தலம் என்பதும் குறிப்பு. அநாதிமுத்தித் தலம். கோமுத்திரபுரம், பிப்பிலாரணியம், நவகோடி சித்த வாசபுரம் முதலிய பற்பலவாகிய காரணப் பெயர்களுடையது. முசுகுந்த மன்னர் இங்குப் பூசித்து மகப்பேறு பெற்றனர். வாதவூரடிகள் குருதரிசனங்கண்டு போற்றினர். தமது தந்தையார் செய்யவும் சிவவேள்வியின் பொருட்டு, "இடரினுந் தளரினும்" என்ற திருப்பதிகம் பாடி ஆளுடைய பிள்ளையார் இங்கு இறைவரிடத்து ஆயிரம்பொன் கொண்ட உலவாக்கிழி பெற்றுத் தந்தைக்குக் கொடுத்தனர். இச்செய்தியை திருநாவுக்கரசு நாயனார் பின்முறை இங்கு வந்து தரிசித்தபோது "கழுமல வூரர்க் கம்பொன். ஆயிரங் கொடுப்பர்போலும்" என்று போற்றியருளினர். சுவாமி - மாசிலாமணி ஈசுவரர் - செம்பொற் றியாகர். அம்மையார் - ஒப்பிலாமுலையம்மை. சுவாமி பெயரும் அம்மை பெயரும் தியாகேசர்பெயரும் ஆளுடைய நம்பிகள் "கங்கைவார் சடையாய்" என்ற பதிகத்துள் முறையே 9-3-6- திருப் |