பாட்டுக்களிற் பொறித்துப் போற்றியமை காண்க. தீர்த்தம் - கோமுத்திந் தீர்த்தம். மரம் அரசு, பதிகம். 8. நாரசிங்கண் பேட்டை என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்றும் தென்கிழக்கில் மட்சாலைவழி ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. திருவிடைமருதூர் I திருச்சிற்றம்பலம் திருநேரிசை | காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல் பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பிற் றோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த வேடுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே. |
1 பதிகக்குறிப்பு :- பரமனார் - முதல்வர் - நீதியார் - எந்தை, இடைமருது இடங்கொண்டாரே. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கமலவேலி - தாமரைக்கிடங்கு சூழ்ந்த. இடங்கொண்டார் - விளங்க வீற்றிருந்தார். (3) பொன்னிந் தென்பால் - இது காவிரிக்குத் தென்கரையில் 30-வது தலம் - (4) சொற்பொருட் பின்வருநிலை.- (5) மேலை ஏதங்கள் - மூல மலங்கள். "மூலமாகிய மூம்மல மறுக்கும்" (திருவாசகம்).- (7) இடர் - மலங்களும் அவற்றால்வரும் பிறவித் துன்பங்களும் - (9) இன்றுடனுலகமேத்தும் - வினைகள் தீர இன்றும் வந்து வழிபட்டு நன்மையடையும். இடங்கொண்டாரே என்று பாட்டுத் தோறும் மகுடம் வைத்து ஓதியருளியது இத்தலத்தில் இறைவர் தேற்றமாக மகாலிங்கம் என்ற பொதுப்பெயரே தமது சிறப்புப் பெயராகத் தாங்கி விரும்பி வீற்றிருந் தருள்செய்யும் சிறப்புக் குறித்தது. "இடைமருது மேவி யிடங் கொண்டாரே" என்ற இக்கருத்துக்கொண்ட மகுடத்துடன் திருத்தாண்டகப் பதிகமும் அருளியது காண்க. II திருச்சிற்றம்பலம் திருக்குறுந்தொகை | பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள், வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மானிடை மருதினிற், பூச நாம்புகு தும்புன லாடவே. |
1 | இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்; அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்; எம்மை யாளு மிடைமரு தன்கழல், செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. |
4 | கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும், பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந் தனிமு டிகவித் தாளு மரசினு, மினியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இடைமருதினில் பூசப்புனலாடப் புகுவோம். இடை மருதர் மிக இனியவர்; அவரை என் உள்ளம் உள்கி உருகும்; அவரைத் தொழுவார் வினைகள் போகும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாசமொன்றிலராய் - பாசம் ஒன்றும் இவராயினும் - சீவன் முத்தராயினும். "பாச மற்றில ராயினும் பார்மிசை, ஆசை சங்கரற் காயின தன்மையால்" (திருஞான - புரா - 189). பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே - தைப்பூசத் தீர்த்தவிழா. "பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி, யயிரா வணத்துறை யாடு மப்ப!" (திருவிடை - மும் கோ - 28). - (2) மறையின். விதிப்படியே வழிபாடு செய்க என்க. (4) இம்மை அம்மை வீடு என்ற |