பக்கம் எண் :


300திருத்தொண்டர் புராணம்

 

சந்தி ரன்னொடு சூரியர் தாமூடன்; வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்;
ஐந்தலையர வின்பணி கொண்டருள், மைந்தர் பொன்மணி நாகேச் சரவரே.

4

பதிகக் குறிப்பு :- திருநாகேச்சரவர் நல்லர்; வல்வினை தீர்க்கும் மருந்துகள் வல்லர்; பலிதிரி செல்வர்; நாவல்தீவினில் வாழ்பவர்க்குப் பாவம் பற்றறுத்திடும் தேவர்; சந்திரனாலும் சூரியனாலும் நாகராசனாலும் பூசிக்கப்பட்டவர்; அவர் நாமமாகிய ஐந்தெழுத்தினை ஒதுவார்க்கு அண்ணிக்கும் தேனர்; உலகத்தவராடிடும் தீர்த்தர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பலிதிரி செல்வர் - உலகமெல்லாந் தம்முடையமையாக்கொண்ட செல்வர்; ஆயினும் பலிதிரிந்துண்பர்; அது அடியார் பொருட்டாம்.- (2) நாவலம் பெருந்தீவு - ஜம்புத்தீபம் என்பர் வடவர். பாரதநாடு. எந்நாட் டவர்க்கு மிறைவராயினும் நாவற்றீவைப் புண்ணிய நிலமாகக் கொண்டு விளங்க வீற்றிருப்பர். "பேசி லத்திசை யொவ்வா பிறதிசை" (புரா).- (4) இத்தலத்தில் - சந்திரர் - சூரியர் - நாகராசன பூசித்தது தல வரலாறு.- (5) குமண்டை - செருக்குச் செயல். "கூடுமுயிருங் குமண்டையிட" (திருவா - குலர்ப்) விதாதா - பிரமன். செண்டர் - பந்தினையுடையார். செண்டு - பந்து. "எச்சனைத் தலையைக் கொண்டு பந்தடித்து" (திருவிசை) நிலைகுலைத்தவர்.- (7) அண்ணிக்கும் - இனிக்கும்.- (9) சுட்ட செய்கையராயினும் குளிர்விக்கும் சிட்டர் - முரண் அணி. குட்ட வல்லினை - தொகுதியாகிய - ஆழ்ந்த - கடுவினை.- (10) ஆடிடுந் தீர்த்தர் - தீர்த்தம் - தூய்மை செய்வது. நீருக்கு வழங்கும் காரணப்பெயர். அதற்கேற்ப ஆடிடும் என்றார். "செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே" (தேவாரம்). பதிக முழுதும், போல் - போல்வர் - ஈறு குறைந்தது. ஆவர் என்ற பொருளில் வந்தது. போல் அசை என்பாருமுண்டு.

III திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

தாயவனை வானோர்க்கு மேனோ ருக்குந் தலையவனை மலையவனை யுலகமெல்லாம்
ஆயவனைச் சேயவனை யணியான றன்னை யழலவனை நிழலவனை யறிய வொண்ணா
மாயவனை மறைவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிகட் சேராதாரே.

1

பதிகக் குறிப்பு :- தாயவன் - உலகமெல்லாம் ஆயவன் - மந்திரன் - தந்திரன் - தன்னடைந்தார் தம்வினைநோய் பாவமெல்லாம் அரித்தான் - காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரான் - மதிப்பவர்தம் மனத்துளான் - நேசர்க்கு நேசன் - நீள்வான முகடதனைத் தாங்கிநின்ற மலையான் - தன்பக்கல் விரும்பு வார்க்கு மெய்யான் - விரும்பாத வரும்பாவியர்கட்கென்றும் பொய்யான் - தன்னினையா வஞ்சர் தம்மை மறந்தான் - அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ் சிறந்தான் - ஒருவருமீங் கறியா வண்ண மென்னுள்ளத் துள்ளே யொளித்துவைத்த சிறையான் குறியிலாக் கொடியேனை யடியேனாகச் செய்தான் - வான்பயிர் - அப்பயிரின் வாட்டந் தீர்க்குந் துளியான் - அடைந்தோர் பாவந் தீர்த்தான் என்பன முதலிய பண்புகளுடைய திருநாகேச்சரத்துள்ள இறைவனைச் சேராதார் நன்னெறிகட் சேராதாரே.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தாயவன் - தாய்போன்றவன். எல்லாப் பொருளிலும் தாவியுடனிருந்தவன். " தாவியவனுடனிருந்துங் காணுத தற்பரன்" (தேவா. கோளிலி). உலகமெல்லாம் ஆய்வன் - தனது மாயாசக்தியினிற்றும் உலகங்களைத் தோற்றுவிப்பவன். வளராநின்ற தீயவன் - உலகத்தை வளர்க்கும்