பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்303

 

தீயின் உள் நிற்பவன். சேராதார் நன்னெறிகட் சேராதாரே - சேரார் தீநெறிக்கே சேர்வார் என்பது குறிக்க மங்கல வழக்குப் பற்றிக் கூறினார். "திருவீழி மிழலை காண்க. மறையு மாகமங்களும் முறையிட்டுரைப்பினும் அறிந்துவந்து சேராதார் தீநெறியிலே திகைத்து வருந்தி யுழல்வர். அதுவும் அவன்றிருவருள். "மரபின் வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும் முறைமையினா லின்பதுன்பங் கொடுத்த லாலே" (சித்தியார் - 8. 17). - (2) அரித்தல் - அழித்தல். "பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சிவாயவே." தெரித்தான் - அறிவித்தவன். - (3) கயவர் - கீழோர். "நன்றறிவாரிற் கயவர் திருவுடையார்" (குறள்) - (4) நீள்வான....சிலையான் - வானமுகடாகிய அண்டகோளகைகளை ஊடுருவி நின்று அவற்றை நிலைகுலையாது ஈர்த்துச் செலுத்தும் பெருஞ்சத்தியே மலை எனப்பட்டது. -(5) அரும்பாவியர் - பெரும்பாவ முடையர். பொய்யான் - விளங்காதான். மறைந்துள்ளவன்.- (6) துரிசர் - துரிசு - குற்றம் - நிற்பன - நடப்பன - அசரம் சரம் என்ப.- (7) என்னுள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையான் - "நாடி நாரண னான்முக னென்றவர், தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ....அம்பலத், தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே" (தேவாரம்), சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" (திருவாசகம்).- (8) குறி - குறிக்கோள். குறியிலா - சிவனது குறிப்பில்லாத. அடியோனாகச் செய்தான் - சமண் சமயம் புக்கு மீண்ட சரிதக் குறிப்புமாம்.

தலவிசேடம் :- திருநாகேச்சுரம் :- காவிரிக்குத் தென்கரையில் 29-வது தலம். மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. சூரியன் - சந்திரன் - நாகராசனாகிய சேடன் முதலியோர் பூசித்தது. திருக்குறுந்தொகைப் பதிகம் (4) பார்க்க. சண்பகவனம் எனவும் வழங்கும்.

இதனை அடைந்தாரது விணைபோக்கும் தன்மை திருத்தாண்டகப் பதிகத்துக் காண்க. "நாணாளும் பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றி" என்று புராணம் போற்றும். சேக்கிழார் நாயனாரது ஆன்மார்த்த தலம். இந்நினைவுபற்றியே தமது நகரமாகிய குன்றத்தூரிலும் கோயிலாக்கி அதற்குத் திருநாகேச்சர மென்று அவர் பேரிட்டனர். சுவாமி - சண்பகாரணியர்; அம்மை - குன்றாமுலை நாயகி. பதிகம் 6.

இது திருநாகேச்சரம் என்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும் தெற்கே 3/4 நாழிகையளவில் அடையத்தக்கது.

திருப்பழையாறை :- அமர்நீதி நாயனார் புராணத்திறுதியில் தலவிசேடம் (பக்கம் - 688) பார்க்க. நாயனார் இத்திலத்திற் பாடியருளிய பதிகம் கிடைத்திலது!. பழையாறை வடதளியிற் பாடிய "தலையெலாம் பறிக்கும் சமண்கையர்" என்ற திருக்குறுந் தொகைப் பதிகம் பின்முறையில் நாயனார் போந்து வழிபட்ட போது அருளியது. இப்புராணம் 294- - 300 வரை பார்க்க. பதிகக் குறிப்பு ஆண்டுக் காண்க. இத்தலம் ஆறை என்றும், பழையாறு என்றும் வழங்கப்பெறும்.

வேறு

1458.

சென்று சேரர்ந்து திருச்சத்தி முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்,
குன்ற மகடன் மனக்காதல் குலவும் பூசை கொண்டருளும்
என்று மினிய பெருமானை, யிறைஞ்சி யியல்பிற றிருப்பணிகள்
முன்றி லணைந்து செய்துதமிழ் மொழிமா லைகளுஞ் சாத்துவார்,

193

1459.

"கோவாய் முடுகி"யென்றெடுத்துக் "கூற்றம்வந்துகுமைப்பதன்முன்
 பூவாரடிக ளென்றலைமேற் பொறித்து வைப்பா" யெனப்புகன்று