பக்கம் எண் :


304திருத்தொண்டர் புராணம்

 

 நாவார் பதிகம் பாடுதலு, நாதன் றானு, "நல்லூரில்
 வாவா!" வென்றே யருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்,

194

1460.

 நன்மைபெரு கருணெறியே வந்தணைந்து நல்லூரின்
 மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்,
"உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோ!" மென்றவர்தஞ்
 சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

195

1458. (இ-ள்.) வெளிப்படை. சென்று சேர்ந்து, திருச்சத்திமுற்றத்தில் எழுந்தருளிய சிவக்கொழுந்தீசரை, மலைமகளாராகிய அம்மையாரது மனத்தெழுந்த காதலினால் விளங்கும் பூசையினை ஏற்றுக்கொண்டருளும் என்றைக்கு மினியவரான இறைவரை வணங்கித் திருமுன்றிலில் அணைந்து தம்மியல்பினால் செய்யும் திருப்பணிகளாகிய உழுவாரத் திருப்பணிகளைச் செய்து, மொழிமாலைகளையும் சாத்துவாராய்,

193

1459. (இ-ள்.) வெளிப்படை. "கோவாய் முடுகி" என்று தொடங்கி, "கூற்றம் வந்து உயிரினைக் கொண்டு போவதன் முன்னே, பூவார்ந்த உமது திருவடி யடையாளம் படும்படி எனது தலையின்மேற் பொறித்துவைத்தருளுக" என்று சொல்லி, நாவின் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடுதலும், இறைவரும் "திருநல்லூரில் வாவா!" என்றே அருள்செய்ய, நாவுக்கரசர் வணங்கி மகிழ்ந்து,

194

1460. (இ-ள்.) வெளிப்படை. நன்மை பெருகும் திருவருளின் வழியே, வந்து அணைந்து, நிலைபெற்ற அத்திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழுகின்ற பொழுதில் சிவபெருமான் "உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!" என்று அருளி, அவருடைய சென்னியின்மேல் தமது பாதமலர்களைச் சூட்டினார்.

195

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1458. (வி-ரை.) சிவக்கொழுத்து - திருச்சத்திமுற்றத்தில் சுவாமி பெயர்.

குன்றமகடன்......பூசைகொண்டருளும் - தலவரலாற்றையும் சத்திமுற்றம் என்று பெயர் போந்த காரணத்தையும் விளக்கியபடி.

மனக்காதல் குலவும் பூசை - அம்மையார் ஆசையுடன் செய்த பூசையின் இயல்பு தலவிசேடத்துட் காண்க. "மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும், சிட்டா" (திருவிருத்தம்) என்றதனை நினைவூட்டியவாறு.

என்றுமினிய பெருமானை - "எப்போது மினியானை" (தேவா). உயிர்கள் தம்மை மறந்தபோதும் இகழ்ந்தபோதும் அவற்றுக்கு இன்னருளே புரியும் தலைவர். பெருமான் - அவ்வாறு இனியராயிருத்தற்குக் காரணங் காட்டியபடி.

இயல்பில் - தமக்குரிய இயல்பின்படி. திரு உழவாரத்திருப்பணி நாயனார்க்குச் சிறப்பாயுரியது. சாத்துவார் - எடுத்துப் - புகன்று - பாடுதலும் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

என்றுமிளைய - என்பதும் பாடம்.

193

1459. (வி-ரை.) "கோவாய் முடுகி" என்று எடுத்து - அத்திருப்பதிகத்தின் தொடக்கம். எடுத்து - தொடங்கி.

குமைத்தல் - அழித்தல். குமைப்பதன் முன் - உயிர் நீப்பதன் முன்பு 'நமன் றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன், இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில், அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்" (6) என்று இதன் கருத்தை மேலும் சுவைபட விரிப்பது காண்க.