பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்305

 

பூவார் அடிகள் - பூப்போன்ற எனவும், அம்மையாரும், அடியார்களும் இட்ட பூக்கள் பொருந்திய எனவும் உரைக்க நின்றது.

பொறித்து வை - மாறாத அடையாளம்படப் பொறித்து வைப்பாய். "வயனங்கண் மாயா வடுச்செய்தான்" (திருவாசகம்), "அடையாளம் படவொருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும்" (திருவிளை - புரா.) பொறித்து வைத்தல் - இப்பொருளுக்குடையவர் இவர் என்று ஏற்றுக்கொண்டு காட்டுதற்கு. பொறிப்பாய் என்னாது வை என்றது அடையாளக் குறிவைத்து, முன்போலப் புறம்போக விடாது, அந்த அடியில் கீழே தங்க வைத்துக்கொள்க என்றபடியாம். தேவாரப் பாட்டுக்குறிப்புப் பார்க்க. "நமன்றமர் நலியி னிவன்மற் றென்னடியானென விலக்கும்" (நம்பிகள்) என்ற கருத்துமிது. கூற்றம்...வை - தேவாரப் பதிகக் கருத்தும் குறிப்புமாம். இத்தேவாரத்தின் சொல்லும் பொருளும் மேற்கொண்டது.

அடிகள் என் தலைமேல் - தாடலை - காறலை - என்பன சைவ மரபுக்குரிய குறியீட்டு வழக்குக்கள். "காலுந் தலையும் அறியார் கலதிகள்", "சிந்தையு மெந்தை திருவடிக் கீழது" என்பனவாதியாகச் சுவைபடத் திருமூலதேவர் எட்டாந் தந்திரத்தினுள் பேசுவன காண்க.

நாவார் பதிகம் - நாவாரத் துதிக்கும் பதிகம். அறிஞர்களின் நாவில் எங்கும் பொருந்தும் - தோத்திரிக்கப்படும் பதிகம் என்றலுமாம்.

நாதன் தானும் - அருள் செய்ய - உம்மை சிறப்பு. புகன்று பாடுதலும் - "விண்ணப்பங் கேட்டு நல்கும்" (தேவர்) என்றபடி உடனே அருளினார் என்ற விரைவுக் குறிப்புமாம். என்றே - ஏகாரம் தேற்றம். வா! வா! - அடுக்கு, அருள் மிகுதியும், உறுதியும் குறித்தது. ஆளுடையநம்பிகளைத் தில்லையிலிருந்து "ஆரூரில் வருக" (254) என்றும், திருவாதவூரடிகளைத் "தில்லையில் வருக" என்றும் அருளியவற்றை இங்கு நினைவு கூர்க.

வாகீசர் - திருத்தொண்டனார் - மகிழ்ந்து - அணைந்து வணங்கி - மகிழ்ந்தெழும் பொழுதில் - சிவபெருமான் - பாதமலர் - சூட்டினான் மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க.

பூவார் கழல்கள் - என்பதும் பாடம்.

194

1460. (வி-ரை.) நன்மை பெருகு அருள் நெறி - அருள் நெறி - "அருணெறி விளங்க" (1398) என்றவிடத் துரைத்தவை பார்க்க. நன்மை பெருகு என்றது உலகுக்கெல்லாம் எல்லா நன்மைகளும் பெருகுதற்கேதுவாகிய.

அருள் நெறியே வந்து அணைந்து - திருச்சத்திமுற்றத்தில் இறைவர் அருளிய நெறியினையே கடைப்பிடித்துப் போந்து சேர்ந்து. "அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்" (256) என்றலும் காண்க.

நல்லூரில் - வணங்கி - "சிவக்கொழுந்தை" (1458) வணங்கி என்று செயப்படுபொருள் வருவிக்க. காலம இடம் என்றவை கடந்து எங்கும் நிறைந்த ஒரு சிவபரஞ்சுடரே சத்திமுற்றத்திலும் திருநல்லூரிலும் விளங்குபவர். "நல்லூரில் வாவா" என்றருளிய அவரே இங்குப் பாதமலர் சூட்டினார் என்பது குறிப்பு. சூட்டினான் சிவபெருமான் என்ற குறிப்புமிது. வணங்கி மகிழ்ந்து வந்து - வணங்கி மகிழ்ந்து எழும் என்ற கருத்துமிது.

மன்னு திருத்தொண்டனார் - வாகீசர் (1459). மன்னும் - திரு என்ற அடைமொழிகள் சிவத்தொண்டினது சிறப்பையும் அழியாமையையும் வாகீசரது சிறப்பையும் குறித்தன. முன்னை நிலையில் "ஞானத் திருமுனிவ" ராகித் தவமியற்றியும், இங்குத் திருநாவுக்கரசராகிப் பன்னாளும் பாமாலைப் பாடிப் பணிசெய்திருந்தும்,