இவ்வினையெச்சங்கள் ஆறம் மனந்தழைத்தார் என்ற முற்றுவினை கொண்டு முடிந்தன. மனந்தழைத்தலுக்கு இந்த ஆறு நிகழ்ச்சிகளும் முன்னங்கமாக அமைவன. ஒழியாததனம் பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் - இவ்வுவமை பழமொழியாக வழங்கப்படும். ஒழியாத தனம் - உலவாத - எடுக்க எடுக்கக் குறையாத செல்வம். "இக்கிழி பொன்னுல வாக்கிழி" (திருஞான - புரா - 427).பெரிதும் - மிகவும். அத்தகைய உலவாக்கிழிகள் பல. அழியாத தனம் - என்பதும் பாடம். 196 திருச்சத்திமுற்றம் திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| கேரவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை; போகவிடின் முவர் முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
1 | வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் றாளென்ற னெஞ்சத் தெழுதிவை; யீங்கிகழி லம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்? செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
6 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- "கூற்றம் வந்து குமைப்பதன்முன் உனது திருவடிகளை என்மேற் சுவடுபடப் பொறித்து வை; உன் தாள்களை நெஞ்சத்து அழியாதவாறு எழுதிவை" என்று இறைவரை வேண்டிக்கொண்டது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கோவாய் முடுகி - தலைவன் என்ற அதிகாரத்துடன் விரைந்து. "கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்" (மறுமாற்றத்தாண்). தலைவராகிய சிவன் தந்த அதிகாரமாதலின் கோவாய் எனப்பட்டது. அடுதிறல் - சிவனடியார்களன்றி வேறு யாரும் தப்ப முடியாத ஆணை. போக விடில்....முடுங்கணடாய் - அடிச்சுவடு பொறித்து உன் அடிக்கீழ் அமைத்து வைக்காது, கூற்றுவன் கொண்டு போகும்படி விட்டுவிட்டால். "பொறித்து வை" என்ற விண்ணப்பத்தின்படி அருள்செய்தல் அவர்தம் பொருட்டே கடனாமென்று காணங் காட்டியபடி. "அரும்பிணிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி" (திருவிருத் - தூங்கானை மாடம் - 2) "விடில் என்னை மிக்கார், ஆரடியா னென்னி லுத்தர கோசமங் கைக் கரசின், சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே" (திருவா - நீத் - விண் - 48) என்ற கருத்துக்கள். மூவா முழுப்பழி - மூவாமை - இதற்குமேற் பெரிதில்லாமை. முழுமை - நிரம்பிய தம்மை.- (2) பாதம்பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந்து அறுப்பாய் - பிறவியை ஆய்ந்தறுத்தலாவது அடியாரானார் அவ்வப்பிறவிகடோறும் ஈட்டிய வினைகளையெல்லாம் கண்டு கழிப்பித்துத் திருவடி கூடச்செய்தல்.- (3) பொத்து - பொந்து - உள்ளீடற்றது. குரம்பை- உடல். ஐவர் - ஐம்பொறி. மத்தார் தயிர் - சுழலுதல் காட்டும் பழமொழி. மறுக்கு - மயக்கம். சித்தா - சித்தத்திருப்பவரே.- (4) ஒன்றல்லாக்குழி - ஒன்றுக்கும் அல்லாத - பயனற்ற - வினைக்குழி. பிறவி. முற்றும்மை தொக்கது. அமண் சமயப் படுகுழி என்றலும் குறிப்பு. விடிற்கெடுவேன் - "வெற்றடியேனை விடுதிகண்டாய்! விடிலோ கெடுவேன்" (திருவா - நீத் - விண் - 23).- (5) கருவுற்றிருந்து - உயிர்கள் கருவில் உறுப்புக்கள் நிரம்பியபோது முன்னுணர். |