வுற்று இறைவனை நினைந்திருக்கும் என்பது சிவதருமோத்தரம் முதலிய சிவாக மங்களுட் காண்க. கருப்புவியில் தெருவிற் புகுந்தேன் திகைத்து - பிறவிக்கேதுவாகிய இந்தக் கன்ம பூமியிற் பிறந்து நெறியறியாது மயங்கித் திரிகின்றேன்.- (6) விழுப்பதன்முன் - வீழ்ப்பதன்முன். எழுதியவை - நெஞ்சமாகிய கல்லில் சிலையில் எழுத்துப்போல அழியாதிருக்கும்படி எழுதிவை. எழுதுதல் - படி தீட்டுதல். ஈங்கு - இப்பிறவி. அம்மை - மேலைப் பிறவி.- (7) மட்டார்...சிட்டா - சத்தி பூசித்தமை; தல வரலாறு.- (8) இகழ்ந்தவன் - தக்கன். கந்தபுராணம் பார்க்க. பொறை இரப்ப - பிழைபொறுத்துக் காக்கவேண்டுமென்று வேண்ட.- (9) சமண் தவிர்த்து - சரிதக் குறிப்பு. எக்காதல் - எப்பயன் - வேறு எந்தக் காதலும் பயனும். உளதே! - ஏகாரம் எதிர்மறை.- (10) குறித்தே - பணிந்து வேண்டியமை பற்றியே. தலவிசேடம் :- இறைவரைச் சத்தி பூதித்துத் தழுவி முத்தமிட்ட காரணத்தால் சத்திமுத்தம் எனப் பெயர் பெற்றதென்பது தலவரலாறு. "குன்ற மகடன் மனக் காதல் குலவும் பூசை கொண்டருளும்" என்ற புராணத் திருவாக்கு இதனைக் குறிப்பதாம். இத்திருக்கோலம் இன்றும் இக்கோயிலில் தரிசிக்கவுள்ளது. முத்தம் என்றது முற்றம் என வழங்குவது போலும். "மலைமகள் பூசை மகிழ்ந்தருளும்" என்ற நாயனார் பதிகமும் காண்க. சுவாமி - சிவக்கொழுந்தீசர்; அம்மை - பெரியநாயகி; பதிகம் 1. இது தாராசுரம் என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்று தென்மேற்கே மட்சாலை வழி இரண்டு நாழிகை யளவில் அடையத்தக்கது. இதன் மேற்கே இரண்டு நாழிகை யளவில் திருநல்லூர் உள்ளது. திருநல்லூர் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| நினைந்துருகு மடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைக ணீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் றளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற வினமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- தம்மை நினைந்து உருகும் அடியார்களை அன்பினால் மனமுருகி நையச்செய்து இன்பங்கொடுப்பார்; அவர் யானையினுரிவை போர்த்தல் முதலிய அருஞ்செயல்களையுடையார்; தேவர்களால் வணங்கப்படுவன அவரது திருவடிகள்; அவை நன்னலத்தன; நாடேறுவன; நண்ணரியன; நற்றவர் சேர்வன; நலங்கிளர்வன; மலர் நாறுவன; நன்றருள்வன; நாம் பரவுவன; நல்லருளால் நல்லூர் எம்பெருமான் அத்திருவடிகளை நான் நன்மையடையும்படி என்தலைமேல் வைத்தார் என்று பலவாற்றாலும் அவரருளை நினைந்துருகி மனந்தழைத்தது. இப்பதிகம் பதினொரு திருப்பாட்டுக்களையுடையது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நைய - அன்பு மேன்மேற் பெருகுதலினால் மனம் நைய. பாசங்கள் தேய என்றலுமாம். இப்பொருளில் நீங்க என்றதற்கு முன்னர் வலிகெட்டுப். பின் முற்றும் அற என்க. தீவினைகள் - தீய பிறவிதரும் வினை. |