பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்309

 

வானோர்....நனைந்தனைய - திருவடியில் முடி பொருந்தச் சாய்த்து வணங்கும் தேவர்களது முடியில் அணிந்த தெய்வப் புது மலர்கள் முகை விரிந்து தேன் சொரிதலால் நனைத்துத் திருவடிகளை ஈரம் செய்வன. அவிழ்ந்து - மொட்டறா நிலையினீங்கி. நனைந்தாலனைய என்பது நனைந்தனைய எனத் திரிந்து நின்றது. நனைத்து என்றது நனைந்தென மெலிந்து நின்ற தெனினுமாம். நல்லவாறே - நம்மை எனக்குளதாம்படி. - (2) பொன்னலத்த - பொன் போன்ற நலம்; நிறங்குறித்தது.- (3) வடம் - மாலை. பாடு - பெருமை. திரைகள் எறிய - "திரைகள் புரள வீசும் கங்கை." சேடு - ஒளி. சேடேறு - நாட்டம் என்க. நாட்டம் - கண். நெருப்புக்கண்.- (4) வில்லருளி வருபுருவம் - "திருப்புருவ மென்னச் சிலை குலவி...ஆளுடையாள் - அன்பர்க்கு - முன் சுரக்கு மின்னருளே என்னப் பொழியாய் மழை" (திருவெம்பாவை). கல் - மேருமலை.- (5) விண்ணிரியும் - விண்ணிற்றிரியும். இரிதல் - திரிதல். ஓடுதல் - தொழுவார்க்கு வினை அற - தீவினைகள் நீங்க (1) என்றாற் போல. துறவி - துறவு நிலை - சாதனம். கமல மலர் - இதய கமலம் (தனது இருக்கையாக). கயிலை - இறைவர் எழுந்தருளும் இடம். அடியவர்க்குத் தரும் இடம் என்றலுமாம். "திருத்தி வைத் தான்பெரு வானகமே" (பொன் - வண் - அந்).- (6) பிணி உற்று உலவும் உலகம் - என மாறுக. உலகம் - புவனம் என்ப. பிணி - பிணிப்பு - வினை. எழுமை - எழுவகைப் பிறப்பு. உயிரை் வைத்தார் - உடலைத் தந்து அதனுள் உயிரைப் புகுத்தினார். "மால்கொடுத் தாவி வைத்தார்" (மறைக்காடு). உயிர் செல்லும் கதிகள் - நெறிகள்.- (7) மாறு - மாறாக. குலங்கள் மிகும் மலை - இமய முதலிய பெருமலைகள்.- (8) நிலம்...விசும்பின் மிசை - ஐம்பூதங்களும் அவற்றின்மேல் உள்ளதத்துவங்களும்.- (9) சென்று உருளும் கதிர் இரண்டும் - செல்லுதல் உருளுதல் என்று இரண்டு வகைக் கதியுடைய ஞாயிறும் திங்களும். இனம்பற்றிப் பிற கதிர்களும் கொள்க. ஞாயிற்றுக்கும் இந்த இரு கதியுள்ளன என்பது இந்நாள் மேற்றிசை வானநூ லாராய்ச்சியாளரும் ஞாயிற்றின் புள்ளிகளின் (Sun poemts) அசைவினாலும், பிறவாற்றாலும் கண்டு ஒப்பியது. "சுவடு, பொடிகொள்வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே" (திருவா).- (11) திரைகளேழும் - திரையுடைய ஏழ்கடல்கள்.

குறிப்பு : நாயனாரது மற்றொரு பதிகம்பற்றி 1479ன் கீழ்க்காண்க.

தலவிசேடம் :- திருநால்லூர் - இஃது ஆண்டான் கோயில் என வழங்கப்படும். அமர்நீதி நாயனார் வழிபட்டுப் பேறுபெற்ற சிறப்பு திருவித்தத்தினுள் நாயனாராற் போற்றப்பட்டது. தலவிசேடம் அமர்நீதியார் புராணத்திறுதியில் உரைக்கப்பட்டது பார்க்க. பக்கம் 981.

1462.

நாவுக்கு மன்னர்திரு நல்லூரி னம்பர்பான்
மேவுற்ற திருப்பணிகண் மேவுறநா ளுஞ்செய்து
பாவுற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்தொழுகிச் செல்லுநாள்,

197

1463.

கருகாவூர் முதலாகக் கண்ணுதலோ னமர்ந்தருளுந்
திருவாவூர், திருப்பாலைத் துறை, பிறவுஞ் சென்றிறைஞ்சிப்,
பெருகார்வத் திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே யுள்ளுருகிப் பணிகின்றார்,

198