பக்கம் எண் :


310திருத்தொண்டர் புராணம்

 

1464.

ஆளுடைய நாயகன்ற னருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத் திருப்பழன மருங்கணைந்து
காளவிட முண்டிருண்ட கண்டர்பணிக் கலன்பூண்டு
நீளிரவி லாடுவார் கழல்வணங்க நேர்பெற்றார்.

199

1462. (இ-ள்.) வெளிப்படை. திருநாவுக்கரசு நாயனார், திருநல்லூரிலே சிவபெருமானிடத்துப் பொருந்தத் திருப்பணிகளை மனமார நாளும் செய்தும், தமிழ்ப் பாமாலை பலவற்றையும் பாடிப் பணிந்தேத்தியும், தெய்வம் பொருந்தும் திருத்தொண்டு செய்து இவ்வாறு ஒழுகிச் செல்கின்ற நாளிலே,

197

1463. (இ-ள்.) வெளிப்படை. திருக்கருகாவூர் முதலாக் கண்ணுதற்பெருமான் எழுந்தருளியுள்ள திருவாவூரும், திருப்பாலைத்துறையும் இன்னும் பிறவும் சென்று பணிந்து ஆர்வம் பெருகும் திருத்தொண்டு செய்து, திருநல்லூரை ஒரு காலமும் பிரியாதே உள்உருகிப் பணிகின்றவர்,

198

1464. (இ-ள்.) வெளிப்படை. தம்மை ஆளுடைய இறைவரது திருவருளைப் பெற்றுக்கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டுப் போய், வாளைகள் பாயும் நீர்ச் சிறப்புடைய திருப்பழனத்திற் சென்று அணைந்து திருநீலகண்டரும் பாம்புகளை அணிந்து ஊழியில் ஆடுவாரும் ஆகிய இறைவரது திருவடிகளை நேரே வணங்கும் பேற்றினைப் பெற்றனர்.

199

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1462. (வி-ரை.) மேவுற்ற திருப்பணிகள் - உழவாரக் கைத்திருத்தொண்டுகள். மாடக்கோயிலாதலானும் சுவாமி மாடமாகிய மலையின்மிசை எழுந்தருளியிருத்தலானும் அதற்கேற்ற என்பர் மேவுற்ற என்றார்.

மேவுற - மனமார - மனம் பொருந்த. பணிகளின் சிறப்புப் பொருந்த என்றலுமாம்.

நாளும் - ஒருநாட் செய்தோமென் றமையாது ஒவ்வொரு நாளும் வழிபாட்டின் அங்கமாக.

தமிழ்ப் பாவுற்ற மாலை - என்க. பாவுற்ற - பாக்களின் தன்மை முற்றும் பொருந்திய. பாக்களுக்கு இவையே இலக்கியமாகப் பொருந்த என்றலுமாம்.

பலபாடி - இந்நாள்களில் நாயனார் பாடியாருளிய பாமாலைகள் பலவற்றுள்ளும், 1479-ல் "போற்றிசைத்து" என்றறியப்படுபவற்றுள்ளும், ஒரு பதிகமே கிடைத்துள்ளது! நமது தவக்குறை!

தேவுற்ற திருத்தொண்டு - தெய்வத்தன்மை பொருந்திய - தெய்வத்தைப் பெறுவிக்கவல்ல. உலகத்தையும் உயிர்களையும் நோக்காது தேவ தேவராகிய சிவபெருமானையே நோக்கிய.

செல்லுநாள் - சென்றிறைஞ்சிப் - பிரியாதே - பணிகின்றார் என்று வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

மொழிமலை - என்பதும் பாடம்.

197

1463. (வி-ரை.) கண்ணுதலோன் அமர்ந்தருளும் என்பதைக் கருகாவூருடனும் சேர்த்துரைக்க.

அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல், அமர்ந்தருளும் - ஒரு சொல்.

ஆர்வம் பெருகும் திருத்தொண்டு - என்க. மனத்தின்கண் விருப்பம் குறையாது மேன்மேலும் பெருகும், தியானமும், கைத்தொண்டும், பதிகம் பாடுதலாகிய வாக்குத்தொண்டும். பிறவும் - ஆவூர் பாலைத்துறையாகிய பிறவும் எனவும், முதலிய பிற