களே பாம்பொன்றும்; ஆணவ இருளே நீளிரவு என்றும் உபசரிக்கப்படுவன என்று இங்குத் தத்துவ நுட்பங்கள் காண்பாருமுண்டு. ஆணவமே உயிர்க் குற்றமெனப்படும். ஆணவவிருளில் இறைவன் நடம் செய்வன் என்பனவும் பிறவும் கேட்கப்படாதன. எனவே இவ்வாராய்ச்சியின் பொருத்தங்கள் ஆராயத்தக்கன. காளவிடம் - சார்ந்தாரைக் காக்கும் தன்மையும், பணிக்கலன் - தீமையும் நன்மையாய்ப் பயக்கின்றமையும், நீளிரவு - ஊழிக்காலத்து உலகமும் உயிர்களும் ஒடுங்கியமையும் உணர்த்துவன என்ப. வணங்க நேர்பெற்றார் - வணங்குதலை வாய்க்கப் பெற்றனர். கழல் நேர் வணங்கப் பெற்றார் என்க. 199 குறிப்பு :- திருநல்லூரினின்றும் தெற்கில் வெட்டாறு என்னும் ஒடம்போக்கியாற்றின் தென்கரையில் உள்ளது திருக்கருகாவூர். குறுக்குப்பாதை 3 நாழிகையளவு இருக்கும். இப்போது காணும் வண்டிப்பாதை வழி சென்றால் தென் கிழக்கில் 2 நாழிகையளவில் திருஆவூரை அடைந்து அங்கிருந்து மேற்கே நான்கு நாழிகையளவில் கருகாவூரை அடையலாம். பாலைத்துறை திருநல்லூஃரினின்றும் வண்டிப்பாதை வழி மேற்கில் இரண்டு நாழிகையளவில் அடையத்தக்கது. திருக்கருகாவூர் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம் பருகா வமுதமாம் பாலி னெய்யாம் பழத்தி னிரதமாம் பாட்டிற் பண்ணாம் ஒருகா லுமையவளோர் னுமா முண்ணின்ற நாவிற் குறையா டியாங் கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கருகாவூரெந்தை தானே குருகாம் - வயிரமாம்; பாலின் நெய்யும் பழத்தினிரதமும் பாட்டிற் பண்ணும்போல் எங்கும் பிரிப்பின்றிக் கலந்துளனாம்; உண்ணின்ற நாவிற்குறையாடியாம்; வித்தாம் முளையாகும் வேரேதானாம்; கொண்ட சமயத்தார் தேவனாரும்; அல்லலறுப்பானுமாம்; சேர்ந்தாரிடர்கள் தீர்க்கும் செல்வனாம்; சொல்லுவார் சொல்லெல்லாஞ் சொதிப்பானாம்; இவை முதலிய தன்மைகளையுடைவன். சிவனது அநாதி முதன்மை குறித்தது. பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) குருகாம் - குருகு - விலங்குகளின் இளமைப் பெயர். இளைமைப்பண்பு குறித்து நின்றது. வயிரம் - தாவரங்களின் முதுமை பற்றிய பெயர்; முதுமைப்பண்பு குறித்து நின்றது. இவையிரண்டும் ஆகுபெயர். கூறுநாள் - பகலவனால் நாள் என்று கூறுபடுத்தப்பட்ட கால அளவு. கொள்ளும் கிழமை - ஞாயிறு முதலிய கோள்களின் பெயர்களையும் உரிய பண்புகளையும் கொள்ளும் கிழமை. கோளே - அவ்வப்பெயர்க்குரிய தெய்வம். ஏகாரம் - தேற்றம். கோளேதானாம் - தானாம் -அத்தெய்வங்களுக்குண்ணின்று இயக்கும் சிவசத்தி. பாலின் நெய் முதலிய மூன்றும் அத்துவிதக்கலப்பை உணர்த்தின. நாவிற்கு உள் நின்ற உரையாடி என்க. வாக்கும் உரையும், அவ்வுரையை வெளிப்படுப்பவனும். கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் - உலக முதற்காரணமாகிய மாயையை இயக்கும். கண் - காட்டிக்காணும் தன்மை.- (2) வித்து - முளை - வேர் - "வித்தினை முளைக்கிளையை வேரை" (ஆவடுதுறை - தாண் - 3 - பார்க்க). பத்தாம் - அடியார் குணம் பத்தும் உடைய. "பத்துடையீர்" (திருவா). கத்தாம் - கருத்து என்பது கத்தென நின்றது? கத்தன் - தலைவன் என்றலுமாம்.- (3) பூ - நிறம் - மணம் - கோ - "முகைத்த மலரின் வாசம்போல்", "மலர்கள் போதவிழ்ந்து |