மதுவாய்ப் பில்கி." ஒன்றினொன்று கிளம்பித் தோன்றுமுறை. கோ - நீர் - இரசம்; இங்குத் தேன் குறித்தது. கோ - தலைமை என்று கொண்டு உண்ணின்று வெளிப்படும் உயிர்ச்சத்து என்றலுமாம். சமயத்தார் தேவன் - "அறுவகைச் சமயத்தோர்க்கு மவ்வவர் பொருளாய்" (சித்தி). காலன் - மரணத்துன்பம். - (4) இரவன் - இரவும் (பகலும்) ஆவன். எல்லி - இரவு - ஊழி. குயவர் - குய்ய முடையோர். குய்யம் - வஞ்சனை. எளியான் மெய்யர்க்கு என்க.- (5) பாரை - இடைநிலைத் தீபம். படைத்தான் - தோற்றுவித்தவன். இடந்தான் - அழித்தவன். கள்ளம் கடைத்தானாம் என்க. கடைத்தல் - அழித்தல். அறிவார் - ஞானிகள். கண் - காட்டுபவன்.- (6) மூலன் மூர்த்தி - சிவன். மூர்த்தி - உருவுக்கேதுவாகிய சத்தி. "உலகெலா மாகி வேறாய்" (சித்தி - 2 - 1). காலன் - காலங்கண்டவன். முன்னோன் - பின்னோன். கால் - கடைக்கால்; மூலம் என்றலுமாம்.- (7) ஆலம் - விடம். ஆல் - மரம் என்றலுமாம். ஆதிரைநாள் ஆதரித்தவம்மான்.- (8) துடி - துடியின் முழக்கம் - மூலம். "இன்னிசை வீணையி லிசைந்தோன் - அன்னதொன் றவ்வயினறிந்தோன்", (திருவா). சோதிப்பான் - அறிந்து தூய்மையாக்குபவன். "சொற்கழிவு பாதமலர்." கடியான் - கடியவன்.- (10) பொறுத்திருந்த புள் - தான் வென்றும் அடிமையாக இசைந்து மாலுக்கு ஊர்தியாக இருந்தவன். கருடன். ஊர்வான் - திருமால். ஊர்வானுள்ளான் - அவனுள்ளத்திற் றியானிக்கப்படு பொருள். "பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத்தான்"; "திருமா லகத்தான்". உள்ளிருந்து - எல்லா உயிர்க்கு முயிராய்ப் பிரிப்பின்றிக் கலந்திருந்து. மும்மதில்கள் மூன்றும் - மூவகை மதிலையுடைய மூன்று புரம். சிலைகுனிய - குனித்த அளவானே. அல்லியிருந்தான் - பிரமன். இருந்தானைத் தெரியநோக்கி ஒரு தலையை அறுத்திருந்த கையான் - என்க.- (11) உடனே வைத்து ஒள்ளழலை மாட்டி ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒறுத்தானாம் என்க. எண்ணான் - சிவனது இறைமையை எண்ணாதவன் - இராவணன். இப்பதிகம் பதினொரு பாட்டுக்கள் கொண்டது. தலவிசேடம் :- காவிரிக்குத் தென்கரையில் 18-வது தலம். திருக்களாவூர் - என்று வழங்கப்படும். தலமரம் முல்லையாதலின் முல்லைவனம் எனவும்படும். உதவியற்ற ஒரு பெண்ணின் கருப்பத்தைக்காத்த காரணத்தால் கரு கா வூர் எனப்படுமென்ப. இக்காரணம் பற்றியே இங்கு அம்மையார் கர்ப்ப ரட்சகி என வழங்கப்பெறுவர். சிவலிங்கத் திருமேனி நீண்ட மணல் திருமேனியாய் முல்லைக் கொடி சுற்றிய திருவடையாளத்துடன் விளங்குகின்றது. சந்திரன் பூசித்த தலம். சுவாமி - முல்லைவனநாதர். அம்மை - கரும்பனையாள். தீர்த்தம் - பால் தீர்த்தம். மரம் - தில்லை. பதிகம் 2. இது பாபநாசம் என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து தெற்கில் சாலிய மங்கலம் கற்சாலைவழி நான்கு நாழிகை யளவில் அடையத்தக்கது. முன் உரைத்த குறிப்பும் பார்க்க. திருஆவூர்ப் பசுபதீச்சரம் - நாயனார் தேவாரம் கிடைத்திலது! சிதலதித் தொழிந்தது போலும்! தலவிசேடம் :- ஆவூர் - தலப்பெயர். பசுபதீச்சரம் - கோயிலின் பெயர். கொட்டையூர்க் கோடீச்சரம் - கருவூ ரானிலை - சாந்தை யயவந்தி என்பன போலக் காண்க. பசு (ஆ - பசு ) பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. சுவாமி - பசுபதீசர். அம்மை - மங்களநாயகி. பதிகம் 1. இது பாபநாசம் என்னும் இருப்புப்பாதை நிலையத்தினின்றும் தெற்கே கற்சாலையில் திருக்கருகாவூரை அடைந்து, அங்குநின்றும் வடகிழக்கில் நான்கு |