பக்கம் எண் :


314திருத்தொண்டர் புராணம்

 

நாழிகையளவில் அடையத்தக்கது. தாராசும் நிலயத்தினின்றும் வரும்வழி ஆறுகள் குறுக்கிடலால் மழைக்காலத்தில் செல்வது கடினம்.

திருப்பாலைத்துறை

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

நீவ மாமணி கண்டத்தர் நீள்சடைக், கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப், பானெய் யாடுவர் பாலைத் துறையரே.

1

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறு, மண்ணி னார்மற வாது சிவாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழில் வானகம், பண்ணி னாரவர் பாலைத் துறையரே.

6

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந், தடரும் போதரனாயருள்செய்பவர்,
கடலி னஞ்சணி கண்டர் கடிபுனல், படருஞ் செஞ்சடைப் பாலைத்துறையரே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பாலைத்துறை யிறைவர், நீலகண்டத்தர்; களிற்றுரி போர்த்தவர்; பூதங்குழுமி நின்றார்க்க நான்மறை பாடினர்; இவை முதலிய பல சரிதைகளுடையார்; பத்தர்கட்கன்பர்; மறவாது சிவாயவென்றெண்ணினார்க்கு எழில் வானகம் இடமாப் பண்ணினார்; தொண்டரைத் துக்கம் தொடரும்போது அரனாய் வந்து அதனைத் தொலைத்தருள் செய்பவர்; அவரைக் கைதொழுவார் வினை ஒயும்.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) கூட்டினார் - சேரவைத்தனர். தவளவெண்ணகை மங்கை - தல அம்மை பெயர்.- (2) தவளவெண் - தவளம் - வடசொல். சொற்பொருள் விரித்தலால் மொழிபெயர்த்துரைத்தார். திவளம் - ஒளியுடைமை? - (3) பன்னினார் - சொன்னவர்.- (5) அன்பர் - இன்பஞ் செய்பவர்.- (6) சிவாய - சுத்த பஞ்சாக்கரம். திரயீ என்பபடும் வேதங்கள் சிவ நாமத்தை இதய நடுவுள் வைத்துப் போற்றுவது போல, மூவர் தேவாரங்களுள் நடுவணவாகிய நாயனார் தேவாரத்துள், நடுவணதாகிய இத் திருமுறையுள், நடுவதாகிய 51-வது இத்திருப்பதிகத்துள், நடுவணதாகிய இத்திருப்பாட்டில் சிவாயவென்றெண்ணினார் - என இரண்டாவது மூன்றாவதடிகளில் நடுநாயகமாகச் சிவ மூலமந்திரம் விளங்கும் தெய்வ அமைப்புக் குறிக்க. இது பற்றி உரத்திரபசுபதி நாயனார் புராணத்துள் உரைத்தவை பார்க்க. சிவாயவென் றெண்ணினார் - "விதியெண்ணு மஞ்செழுத்தே" (சிவஞான போதம் - 9). எண்ணினார்க்கு இடமாக எழில் வானகம் பண்ணினார் - "தஞ்சொன் மலரா லணியவல் லோர்கட்குத் தாழ்சடையோன், வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே" (பொன். வண். அந். 11). இடமா - இடமாக.- (7) கொடுகொட்டி - கொக்கரை - ஆடும் போது முழக்கப்படும் முழவு வகை. பண்கெழுமிய வீணை - இறைவர் கையில் இருப்பது. "மிக நல்ல வீணை தடவி". பண்கெழுமிய - மிக உயர்ந்த இசை நலம் தோற்றுவிப்பது வீணையாம். "குழலினிது யாழினிது" (குறள்). பண் - இங்கு உலகத் தோற்றத்திற்குக் காரணமாகிய நாதத்தைக் குறித்தது. "வருங்கடன்மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (தேவா).- (8) தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து - தொண்டர் தம்மைத் தொடரத், துக்கம் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து. முன் வரமாட்டாமையின் பின்தொடர என்க. "ஊழையும் உப்பக்கம் காண்பர்." தொண்டரைத் தொடரும் துக்கம் - முன் வினை; ஊழினானாவது. அடரும்போது அரனாய் - அரன் - பாவங்களை அரிப்பவன் - அழிப்பவன். மார்க்கண்டர் சரிதம் காண்க.- (9) போகந் தோய்ந்த புணர்முலை மங்கை - "போக மார்த்த பூண்முலை யாள்" (தேவா). "போகமாய்த் தான்விளைந்த