கூவல் - கிணறு. "கூவ லாமை குரைகட லாமையை" (திருக்குறுந் தொகை). நீர் இறைத்து மொண்டெடுக்கும் சிறிது நீர்நிலை. குளம் - பெரிய நீர்நிலை உள்ளிறங்கி நேரே நீர் மொண்டெடுத்தற்குரியது. மக்களேயன்றி ஏனைப் பிராணிகட்கும் உதவுவது. குளம் - வெல்லம் என்று கொண்டு, குளந்தரு தண்ணீர் என்று கூட்டிப் பானகம்போன்ற என்றுரைப்பினுமமையும். "குளநிறைந்த நீர்த்தடம்போல்" (அப்பூதி - புரா - 5) என்பதுது காண்க. தருதண்ணீர்ப் பந்தல் - கூவலும் குளமும்போலன்றி, நீர் கொண்டு வந்துவைத்து, வேண்டுபவர்க்கு உதவும் வசதியுடையது. இயற்கையாயமையாது செயற்கையால் நீர்சேமிக்கப்படலாலும், நீர் தரப்படுதலாலும், நீர்மட்டுமேயன்றி நிழலும் அயர்வு நீங்கக் குளிர்ச்சி தருவனவும் ஏனையவுமாகிய வசதிகளும் தரப்படுதலாலும் தரு என்ற அடைமொழி தந்தோதினார். வடிவுதான் காணாராயினும் பலகாலம் குருவாகக் கொண்டு தியானித்து நின்ற நாயனாரை அப்பூதியடிகளாருக்குத் தேடிக் கிடைக்கத் தரும் என்ற குறிப்புமாம். சரித நிகழ்ச்சி விரிவு அப்பூதிநாயனார் புராணத்துட் காண்க. தரு - என்பதற்கு இவ்வாறன்றி, அப்பூதியார் புராணம் 7-வது திருப்பாட்டில் "சோலைகுளங்கா" என்பதற்கேற்பச், சோலை என்றுரைப்பினுமமையும். அந்தணரின் மேம்பட்ட - அப்பூதியடிகள் சாதிச்செருக்கின்றி அன்பில்திளைத்துத் திருநாவுக்கரசரைக் குருவாகக் கொண்டுவராதலின் இவ்வாறு கூறினார் என்று இங்கு விசேடவுரை காண்பாருமுண்டு. அந்தணர் என்ற பெயர் சாதிபற்றிய பெயர்மட்டில் அமைந்தொழிவது பிற்கால வழக்கு. இதுபற்றியும், பின்னர் இச்சரிதப் பகுதியினுள் நாயனாருடன் அப்பூதியடிகளாரும் மக்களும் ஒருங்கிருந்து உடன் அமுது செய்தமைபற்றியும், நாயனாரை அப்பூதியார் குருவாகக் கொண்டமைபற்றியும் சாதிகுலம் முதலிய தொடர்புகளை உட்கொண்ட பலவகை ஆராய்ச்சிகள் செய்வார் பலர். அவையெல்லாம் திருத்தொண்டினெறியின் உட்கோளையும் ஒழுக்கத்தினையும் குறிக்கொள்ளாதெழுவன என்க. இதுபற்றிப் பின்னர் அப்பூதியார் புராணத்துப் பின்னும் விளக்கப்படும். 1தனயர்மைந்தர் என்று இங்கு ஆண்மக்களைக் குறிக்கும் சொற்களாற் கூறுகின்ற ஆசிரியர், அப்பூதியார் புராணத்துள் "மக்கள்" என்று பொதுப்பெயராற் கூறுகின்றமையால் அப்பூதியடிகளார்க்குப் பெண் மக்கள் உண்டோ? இன்றோ? என்ற விசாரத்தில் இங்குப் புகுந்து ஆராய்வாரும் உண்டு. இவ்வாறு வேண்டா விசாரணைகள் பலவற்றுக்கும் அப்பூதியார் புராணம் இடமாய் நிற்பது இக்காலநிலையின் அலங்கோலம்! அன்புச் சரிதத்துள் சடம்பற்றிய பேச்சுக்களுக்கிடமில்லை என்றொழிக. தனயருடன் - தனயர்க்குப் பெயர் சூட்டியதுடன். பண்ணினமை - பெயராற் செய்தமை என்க. வந்து அணைந்த வாகீசர் கேட்டு - வந்த இடத்துக், கண்டவை சில; கேட்டவை பல. வந்து என்றதனாற் கண்டமை பெறப்படுமாதலின், கேட்டல்மட்டும் விரித்துக் கூறினார். "தண்ணீர்ப் பந்தருங்கண் டத்தகைமை, புரிகின்ற வறம் பிறவும் கேட்டு" (அப்பூதி - புரா - 11) என்பது காண்க. 201 1467. (வி-ரை.) மற்றவரும் - சூழ்ந்து - இதன் பொருள் அப்பூதி நாயனார் புராணத்துள் 9 முதல் 18 வரை உள்ள பத்துப் பாட்டுக்களால் விரிக்கப்பட்டது. அங்கு விரித்தோதவேண்டியிருத்தலானும், அப்பூதியாரது திருமனையில் அரசுகள் நண்ணியது முதல் அரசுகளை அவர்தாமென்று அப்பூதியார் உணர்ந்து களிகூரும் 1. | எனது சேக்கிழார் - 88 - 91 பக்கங்கள் பார்க்க. |
|